verse 7104 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Angadhan Thoodhu Padalam · Verse 4 of 43

இராவணன்பால் தூதனுப்பிச் சமாதானம் செய்து கொள்ளுதல் கூடாது என இலக்குவன் எடுத்துரைத்தல்

கம்பராமாயணம் 7104 · அங்கதன் தூதுப் படலம்

‘தேசியைச் சிறையில் வைத்தான்; தேவரை இடுக்கண் செய்தான்;பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான்; மன்னுயிர் புடைத்துத் தின்றான்;ஆசையின் அளவும், எல்லா உலகமும் தானே ஆள்வான்,வாசவன் திருவும் கொண்டான்; வழி அலா வழிமேல் செல்வான்.
Share