verse 71 · Muthukumaraswami Pillaitamil · Kumaraguruparar
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 71 · சிற்றிற் பருவம்
குறுமென் னடையு நெடுவெணிலாக் கோட்டு நகையும் வாட்டடங்கண்குளிர முகந்துண் டொளிர்சுட்டிக் குஞ்சி திருத்தி நறுங்குதலைமுறுகு நறைத்தேன் கனிபவள முத்துண் டுச்சி மோந்துகொண்டுன்முகமுந் துடைத்து விளையாட முன்றிற் புறத்துப் பொன்றதும்பிஇறுகும் புளகக் கும்பமுலை எம்பி ராட்டி விடுத்ததுமற்றிளையார் மறுக மறுகுதொறும் இடுக்கண் செயற்கோ வெந்தாய்நின்சிறுகிண் கிணிச்செஞ் சீறடியாற் சிறியேஞ் சிற்றில் சிதையேலேசெந்நெற் பழனப் புள்ளூரா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.