Verse 4934 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvinnambar Thirunerisai · Verse 10 of 10
திருவின்னம்பர் – திருநேரிசை · 4.72.10
ஆர்த்தெழு மிலங்கைக் கோனை அருவரை அடர்ப்பர் போலும்பார்த்தனோ டமர் பொருது படைகொடுத் தருள்வர் போலுந்தீர்த்தமாங் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும்ஏத்தஏ ழுலகும் வைத்தார் இன்னம்பர் ஈச னாரே.