Verse 4931 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvinnambar Thirunerisai · Verse 7 of 10
திருவின்னம்பர் – திருநேரிசை · 4.72.7
பொருப்பமர் புயத்தர் போலும் புனலணி சடையர் போலும்மருப்பிள வாமை தாங்கு மார்பில்வெண் ணூலர் போலும்உருத்திர மூர்த்தி போலும் உணர்விலார் புரங்கள் மூன்றும்எரித்திடு சிலையர் போலும் இன்னம்பர் ஈச னாரே.