வை எயிற்றாலும், நேரா மணி இழந்து இரங்கலாலும்,பை உயிர்த்து அயரும் பேழ் வாய்ப் பல்தலைப் பரப்பினாலும்மெய்யனை, திரையின் வேலை மென்மலர்ப் பள்ளி ஆனஐயனை, பிரிந்து வைகும் அநந்தனே அரக்கர் வேந்தன்.
சார்த்தூலன் என்னும் ஒற்றனது வரவினை வாயில் காவலன் இராவணனுக்குத் தெரிவித்தல்
தாயினும் பழகினார்க்கும் தன் நிலை தெரிக்கல் ஆகாமாய வல் உருவத்தான் முன் வருதலும், வாயில் காப்பான்,“‘சேயவர் சேனை நண்ணி, செய் திறம் தெரித்தி நீ “ என்றுஏயவன் எய்தினான் ‘என்று அரசனை இறைஞ்சிச் சொன்னான்.
‘அன்றியும், பதினேழ் வெள்ளத்து அரியொடும் அரசன் மைந்தன்,தென் திசை வாயில் செய்யும் செரு எலாம் செய்வதானான்;ஒன்று பத்து ஏழு வெள்ளம் கவியொடும் துணைவரோடும்நின்றனன், நீலன் என்பான், குணதிசை வாயில் நெற்றி.
‘இம்பரின் இயைந்த காயும் கனியும் கொண்டு, இரண்டு வெள்ளம்வெம்பு வெஞ் சேனைக்கு எல்லாம் உணவு தந்து உழலவிட்டான்;உம்பியை, வாயில் தோறும் நிலை தெரிந்து உணரச் சொன்னான்;தம்பியும் தானும் நிற்பதாயினான்; சமைவு இது ‘என்றான்.
மா அணை நீலக் குன்றத்து இளவெயில் வளர்ந்தது என்ன,தூ அணை குருதிச் செக்கர்ச் சுவடு உறப் பொலிந்த தோளான்,ஏ அணை வரிவில் காமன் கணைபட எரியா நின்றபூ அணை ஆற, வேறு ஓர் புனை மணி இருக்கை புக்கான்
செய்வன முறையின் எண்ணி, திறத்திறம் உணர்வின் தேர,மை அறு மரபின் வந்த அமைச்சரை, ‘வருக ‘என்றான்;பொய் எனப் பளிங்கின் ஆய இருக்கையின் புறத்தைச் சுற்றி,ஐ இரண்டு ஆய கோடி பேய்க்கணம் காப்பது ஆக்கி.
‘எழுபது வெள்ளத்து உற்ற குரக்கினம் எயிலை முற்றும்தழுவின என்று செய்யத் தக்கது சமைதி போலாம்;அழுவ நீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே?உழிஞையைத் துடைக்க, நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர். ‘
‘எழு, மழு, தண்டு, வேல், வாள், இலை நெடுஞ் சூலம், என்று இம்முழுமுதற் படைகள் ஏந்தி, இராக்கதர் முனைந்த போது,தொழுது தம் படைகள் முன் இட்டு, ஓடுவார் சுரர்கள் என்றால்,விழுமிது, குரங்கு வந்து வெறும் கையால் கொள்ளும் வென்றி.
‘ஈது இவண் நிகழ்ச்சி ‘என்னா, எரி விழித்து, இடியின் நக்கு,பூதலத்து அடித்த கையன், நிகும்பன் என்று ஒருவன் பொங்க,‘வேதனைக் காமம் அந்தோ வேரொடும் கெடுத்தது ‘என்னா,மாதுலத் தலைவன் பின்னும் அன்பின் ஓர் மாற்றம் சொன்னான்.
‘தொடைக் கலந்து இராமன் வாளி தோன்றுதல் முன்னம், தோன்றாஇடைக்கு அலமருதல் செய்யும் முலையினாள் தன்னை ஈந்து,படைக்கலம் உடைய நாம், அப் படை இலாப் படையை, ஈண்டஅடைக்கலம் புகுவது அல்லால், இனிப் புகும் அரணும் உண்டோ?
‘காலன் தன் களிப்புத் தீர்த்த மகோதரக் காளையே! போய்,மால் ஒன்றும் மனத்து வீர மாபெரும் பக்கனோடுங்கூலம் கொள் குரங்கை எல்லாம் கொல்லுதி வெள்ளம் ஆனநால் ஐம்பதோடும் சென்று நமன் திசை வாயில் நண்ணி.
‘ஏற்றம் என், சொல்லி? வல்வில் இந்திரன் பகைஞ! அந்நாள்காற்றினுக்கு அரசன் மைந்தன் கடுமை நீ கண்டது அன்றே?நூற்று இரண்டு ஆய வெள்ள நுன் பெரும் படைஞர் சுற்ற,மேல் திசை வாயில் சேர்தி விடிவதன் முன்னம் வீர!
வானர சேனைகள் ஆரவாரிப்ப சுக்கிரீவனும் இலக்குவனும் முன்செல்ல இராமன் எழுந்து செல்லுதல்
தந்திரம் இலங்கை மூதூர் மதிலினைத் தழுவித் தாவி,அந்தரக் குலம் மீன் சிந்த, அண்டமும் கிழிய ஆர்ப்ப,செந்தனிச் சுடரோன் சேயும் தம்பியும் முன்பு செல்ல,இந்திரன் தொழுது வாழ்த்த; இராமனும் எழுந்து சென்றான்.
நூற் கடல் புலவராலும் நுனிப்ப அரும் வலத்தது ஆயவேல் கடல் தானை ஆன விரிகடல் விழுங்கிற்றேனும்கார்க் கடல் புறத்தது ஆக, கவிக்கடல் வளைந்த காட்சி,பாற்கடல் அழுவத்து உள்ளது ஒத்தது, அப் பதகன் மூதூர்.