இலங்கை எய்திய இராவணன் வெற்றி பெற்றதனால் மகிழ்ந்திருத்தல்
அலக்கண் எய்தி அமரர் அழிந்திடஉலக்க வானர வீரரை ஓட்டி அவ்இலக்குவன்தனை வீட்டி இராவணன்துலக்கம் எய்தினன் தோம் இல் களிப்பினே.
Open this verse
இலங்கை எய்திய இராவணன் வெற்றி பெற்றதனால் மகிழ்ந்திருத்தல்
அலக்கண் எய்தி அமரர் அழிந்திடஉலக்க வானர வீரரை ஓட்டி அவ்இலக்குவன்தனை வீட்டி இராவணன்துலக்கம் எய்தினன் தோம் இல் களிப்பினே.
Open this verse
போரில் வருந்தினர்க்கு விருந்து அமைக்க இராவணன் விரும்புதல்
பொருந்து பொன்பெருங் கோயிலுள் போர்த்தொழில்வருந்தினர்க்கு தம் அன்பினின் வந்தவர்க்குஅருந்துதற்கு அமைவு ஆயின ஆக்குவான்விருந்து அமைக்க மிகுகின்ற வேட்கையான்.
Open this verse
வான நாட்டை வருக என வல்விரைந்துஏனை நாட்டவரோடும் வந்து எய்தினார்;‘ஆன நாட்டு அரும் போகம் அமைத்திர்; மற்றுஊனம் நாட்டின் இழத்திர் உயிர் ‘என்றான்.
Open this verse
போகப் பொருள்கள் வந்து சேர்தல்
நறவும் ஊனும் நவை அற நல்லனபிறவும் ஆடையும் சாந்தமும் பெய்ம் மலர்த்திறமும் நானப் புனலொடு சேக்கையும்புறமும் உள்ளும் நிறையப் புகுந்தவால்.
Open this verse
போகப் பொருள்களை அமைக்க வான் அரமகளிர் வருதல்
நான நெய் நன்கு உரைத்து நறும்புனல்ஆன கோது அற ஆட்டி அமுது ஒடுபானம் ஊட்டி சயனம் பரப்புவான்வான நாட்டியர் யாவரும் வந்தனர்.
Open this verse
அரக்கரின் நுகர்ச்சி
பாடுவார்கள்; பயில்நடம் பாவகத்துஆடுவார்கள்; அமளியில் இன்புறக்கூடுவார்முதல் யாரும் குறைவு அறத்தேடினார் என பண்ணையில் சேர்ந்தனர்.
Open this verse
அரைசர் ஆதி அடியவர் அந்தமாவரைசெய் மேனி இராக்கதர் வந்துளார்விரைவின் இந்திர போகம் விளைதரக்கரையிலாத பெருவளம் கண்ணினார்.
Open this verse
தூதுவர் வந்து வணங்குதல்
இன்ன தன்மை அமைந்த இராக்கதர்மன்னன் மாடு வந்து எய்தி வணங்கினார்அன்ன சேனை களப்பட்ட ஆறு எலாம்துன்னு தூதர் செவியிடைச் சொல்லுவார்.
Open this verse
தூதுவரின் அச்ச நிலை
நடுங்குகின்ற உடலினர் நா உலர்ந்துஒடுங்குகின்ற உயிர்ப்பினர் உள் அழிந்துஇடுங்குகின்ற விழியினர் ஏங்கினார்பிடுங்குகின்ற மொழியினர் பேசுவார்.
Open this verse
தூதர் சொன்னது
‘இன்று யார் விருந்து இங்கு உண்பார்? இகல் முகத்து இமையோர் தந்தவென்றியாய்! ஏவச் சென்ற ஆயிர வெள்ளச்சேனைநின்றது புறத்தது ஆக, இராமன்கை நிமிர்ந்த சாபம்ஒன்றினால் இரண்டு, மூன்று கடிகையில் உலர்ந்தது ‘என்றார்.
Open this verse
‘வலிக்கடன் வான் உளோரைக் கொண்டு, நீவகுத்த போகம்,“கலிக்கடன் அளிப்பல் “ என்று நிருதர்க்குக் கருதினாயேல்,பலிக்கடன் அளிக்கற்பாலை அல்லது, உன்குலத்தின் பாலோர்ஒலிக்கடல் உலகத்து இல்லை; ஊர் உளார் உளமே உள்ளார்.
Open this verse
இராவணன் திகைத்தல்
ஈட்டரும் உவகை ஈட்டி இருந்தவன், இசைத்த மாற்றம்கேட்டலும், வெகுளியோடு துணுக்கமும் இழிவும் கிட்டிஊட்டு அரக்கு அனைய செங்கண் நெருப்பு உக, உயிர்ப்பு வீங்கதீட்டிய படிவம் என்னத் தோன்றினன், திகைத்த நெஞ்சன்.
Open this verse
இராவணன் தூதுவர் சொல்லை ஐயுறுதல்
என்னினும் வலியர் ஆன இராக்கதர் யாண்டும் வீயார்உன்னினும் உலப்பு இலாதார்; உவரியின் மணலின் மிக்கார்;“பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர் “ என்று பேசும்இந்நிலை பொய்ம்மை; மெய்ம்மை விளம்புவீர் விரைவின் என்றான்!
Open this verse
மாலியவான், தூதர் பொய்யுரையார் எனல்
கேட்டு அயல் இருந்த மாலி, ஈது ஒரு கிழமைத்து ஆமோ?ஓட்டு உறு தூதர் பொய்யே உரைப்பரோ? உலகம் யாவும்வீட்டுவது இமைப்பின் அன்றே, வீங்கு எரி? விரித்த எல்லாம்மாட்டுவன் ஒருவன் அன்றே, இறுதியில் மனத்தால்? ‘என்றான்
Open this verse
மாலியவான் மேலும் கூறுதல்
“அளப்ப அரும் உலகம் யாவும் அமைத்துக் காத்து அழிக்கின்றான்தன்உளப் பெரும் தகைமை தன்னால் ஒருவன் ‘‘ என்று உண்மை வேதம்கிளப்பது கேட்டும் அன்றே? அரவின்மேல் கிடந்து, மேல்நாள்,முளைத்த போர் இராமன் ‘‘ என்று வீடணன் மொழி பொய்த்து ஆமோ?
Open this verse
‘ஒன்று இடில் அதனை உண்ணும் உலகத்தின் உயிர்க்கு ஒன்றாதநின்றன எல்லாம் பெய்தால், உடன் நுங்கும் நெருப்பும் காண்டும்;குன்றொடு மரமும், புல்லும். பல்லுயிர்க் குழுவுங் கொல்லும்வன் திறல் காற்றும் காண்டும்; வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ?
Open this verse
‘பட்டதும் உண்டே உன்னை, இந்திரச் செல்வம் பற்றுவிட்டதும் மெய்ம்மை; ஐய! மீட்டு ஒரு வினையும் இல்லை;கெட்டது, உன் பொருட்டினாலே, நின்னுடைக் கேளிர் எல்லாம்;சிட்டது செய்தி ‘என்றான்; அதற்கு அவன் சீற்றம் செய்தான்.
Open this verse
மாலியவானுக்கு இராவணன் மறுமொழி
‘இலக்குவன் தன்னை வேலால் எறிந்து, உயிர் கூற்றுக்கு ஈந்தேன்;அலக்கண் இல் தலைவர் எல்லாம் அழுந்தினர் அதனைக் கண்டால்,உலக்குமால் இராமன்; பின்னர் உயிர்ப்பொறை உகவான்; உற்றமலக்கம் உண்டாகின் ஆக; வாகை என் வயத்தது என்றான்.
Open this verse
இலக்குவன் உயிர் பெற்றதைத் தூதுவர் உணர்த்துதல்
ஆண்டு அது கேட்டு நின்ற தூதுவர், ‘ஐய! மெய்யேமீண்டது, அவ் இளவல் ஆவி, மாருதி மருந்து மெய்யில்தீண்டவும் தாழ்த்தது இல்லை; யாரும் அச் செங்கணானைப்பூண்டனர் தழுவிப் புக்கார் காணுதி போதி ‘என்றார்.
Open this verse
இராவணன் கோபுரத்தில் ஏறிப் போர்க்களத்தைக் காணுதல்
தேறிலன் ஆதலானே, மறுகுறு சிந்தை தேற,ஏறினன், கனகத்து ஆன கோபுரத்து உம்பர் எய்தி,ஊறின சேனை வெள்ளம் உலந்தபேர் உண்மை எல்லாம்,காறின உள்ளம் நோவ, கண்களால் தெரியக் கண்டான்.
Open this verse
தலையொடு முடியும் அரக்கியரின் அழுகை ஒலியை இராவணன் கேட்டல்
கொய்தலைப் பூசற் பட்டோர் குலத்தியர் குவளையோடுநெய்தலை வென்றவாள் கண் குமுதத்தின் நீர்மை காட்டகய்தலை உற்ற பூசல்; கடல் எலாம் நிமிருங் காலைச்செய்தலை உற்ற ஓசைச் செயலது செவியில் கேட்டான்.
Open this verse
எண்ணுநீர் கடந்த யானைப் பெரும்பிணம் ஏந்தி, யாணர்மண்ணின்நீர் அளவும் கல்லி, நெடுமலை மறித்து, மண்டும்புண்ணின்நீர் ஆறும், பல்பேய்ப் புதுப் புனல் ஆடும் பொம்மல்,கண்ணின்நீர் ஆறும் மாறாக் கருங்கடல் மழுப்பக் கண்டான்.
Open this verse
‘முற்று இயல் சிலை வலாளன் மொய் கணை துமிப்ப, ஆவிபெற்று இயல் பெற்றி பெற்றாம் ‘ என்ன வாள் அரக்கர் யாக்கை,சிறு இயல் குறுங்கால் ஓரிக் குரல் கொளை இசையா, பல்பேய்கற்று இயல் பாணி கொட்டக், களிநடம் பயிலக் கண்டான்.
Open this verse
குமிழி நீரோடும், சோரி, கனலொடும், கொழிக்கும் கண்ணான்,தமிழ் நெறி வழக்கம் அன்ன தனிச்சிலை வழக்கிற் சாய்ந்தார்.அமிழ்பெருங் குருதி வெள்ளம் ஆற்று வாய் முகத்தில் தேக்கி,உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம் வந்து உடற்றக் கண்டான்.
Open this verse
விண்களில் சென்ற வன்தோள் கணவரை, அலகை வெய்யபுண்களில் கைகள் நீட்டி, புதுநிணம் கவர்வ நோக்கி,மண்களில் தொடர்ந்து, வானில் பிடித்து, வள் உகிரின் மானக்கண்களைச் சூன்று நீக்கும் அரக்கியர் குழாமும் கண்டான்.
Open this verse
இராவணன் கோபுரத்திலிருந்து இறங்குதல்
விண் பிளந்து ஒல்க ஆர்க்கும் வானரர் வீக்கம் கண்டான்;மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான்;கண் பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் கண்டான்புண் பிளந்தனைய நெஞ்சன் கோபுரத்து இழிந்து போந்தான்.
Open this verse
இராவணன் சினக் குறிப்புடன் அரசவை அடைதல்
நகை பிறக்கின்ற வாயன் நாக்கொடு கடைவாய் நக்கப்புகை பிறக்கின்ற மூக்கன், பொறி பிறக்கின்ற கண்ணன்,மிகை பிறக்கின்ற நெஞ்சன் வெஞ்சினத் தீமேல் வீங்கிசிகை பிறக்கின்ற சொல்லன், அரசியல் இருக்கை சேர்ந்தான்.
Open this verse