இராவணன், மகோதரனைப் பாராட்டி மாயாசனகனைச் சோலைக்குக் கொணர்க எனப் பணித்துச் சீதையிருக்கும் இடத்தை அடைதல்
கம்பராமாயணம் 7765 · மாயா சனகப் படலம்
என அவன் உரைத்தலோடும், எழுந்து மார்பு இறுகப் புல்லி,‘அனையவன் தன்னைக் கொண்டு ஆங்கு அணுகுதி, அன்ப! ‘என்னா,புனை மலர்ச் சரளச் சோலை நோக்கினன், எழுந்து போனான்;வினைகளைக் கற்பின் வென்ற விளக்கினை வெருவல் காண்பான்.