Verse 2397 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirukkocchaivayam · Verse 2 of 11
திருக்கொச்சைவயம் · 2.83.2
விடையுடை யப்பனொப்பில் நடமாட வல்ல விகிர்தத் துருக்கொள் விமலன்சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள் தகவைத்த சோதிபதி தான்மடையிடை யன்னமெங்கும் நிறையப் பரந்து கமலத்து வைகும் வயல்சூழ்கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும் வளர்கின்ற கொச்சை வயமே.