verse 23 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai
வாட்போக்கிக் கலம்பகம் 23
எனக்கரிய வண்டரெனாக் கனக்கரிய கண்டருறை யெழில்வாட்போக்கி, மனக்கரிய வளம்பாடி மணிமறுகி னின்றாடு மதங்கியாரே, சினக்கரிய நுங்கள்விழி வாளிரண்டு மேயுயிருஞ் சேரப் போழுங்,கனக்கரிய வாளிரண்டு கைக்கொடுவீ சுவீரிலக்குக் கருதின் யாதே.