Yuddha Kandam · Ilangai Velvi Padalam · Verse 72 of 74
'நின் செய் தோள் வலி நிரம்பிய இலங்கையை நேர்ந்தோம்;பின் செய்தோம் சில; அவை இனிப் பீடு ஒன்று பெறுமே?பொன் செய் தோளினாய்! போர்ப் பெரும் படையொடும் புக்கோம்;என் செய்தோம் என்று பெரும் புகழ் எய்துவான் இருந்தோம்?