Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 37 of 157
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து,ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தல் ஆல்,வரி சிலை அண்ணலும் வாள் கண் நங்கையும்இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்.