verse 598 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 35 of 157
இராமபிரானும் சீதாதேவியும் ஒருவரையொருவர் கண்டுகொள்ளல்
கம்பராமாயணம் 598 · மிதிலைக் காட்சிப் படலம்
எண் அரும் நலத்தினாள் இனையள் நின்றுழி,கண் ஒடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்றுஉண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட,அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்.