verse 50 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai

வாட்போக்கிக் கலம்பகம் 50

அரைவிராவ வணியுமாடை யதளதாக வன்றிவேறறைவதாக வரவமாக வணியதாக வென்புதார்புரைவதாக விரையுநீறு பிரியுமூணு நஞ்சமேபுணர்வதாக வுணர்தராது புணருமாசை கொண்டுளாள்கரையுறாத துயரினூடு கழியுமாறு கன்றியோர்கடியபாவி மதனனேவு கணைதுழாவு நன்றிதோவரையவாரும் விரையவாசம் வரையின்மாலை தந்துநீள்வரையிராசன் மகளொடாடி மகிழிராச லிங்கரே.
Share