Pathigam 77 / 114 · Fourth Thirumurai · Thirunavukkarasar

Thanith Thirunerisai

தனித் - திருநேரிசை · 8 verses · 4975–4982

Share

பாடல்கள் The verses

1 Verse 4975
கடும்பகல் நட்ட மாடிக் கையிலோர் கபால மேந்திஇடும்பலிக் கில்லந் தோறு முழிதரும் இறைவ னீரேநெடும்பொறை மலையர் பாவை நேரிழை நெறிமென் கூந்தற்கொடுங்குழை புகுந்த வன்றுங் கோவண மரைய தேயோ.
Open this verse
2 Verse 4976
கோவண முடுத்த வாறுங் கோளர வசைத்த வாறுந்தீவணச் சாம்பர் பூசித் திருவுரு இருந்த வாறும்பூவணக் கிழவ னாரைப் புலியுரி அரைய னாரைஏவணச் சிலையி னாரை யாவரே எழுது வாரே.
Open this verse
3 Verse 4977
விளக்கினாற் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றி யாகுந்துளக்கில்நன் மலர்தொ டுத்தால் தூயவிண் ணேற லாகும்விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞான மாகும்அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகள்தாம் அருளு மாறே.
Open this verse
4 Verse 4978
சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாம வேதிஅந்தரத் தமரர் பெம்மான் ஆன்நல்வெள் ளூர்தி யான்றன்மந்திரம் நமச்சி வாய ஆகநீ றணியப் பெற்றால்வெந்தறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகிட் டன்றே.
Open this verse
5 Verse 4979
புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்திடைப் புகுந்து நின்றுதுள்ளுவர் சூறை கொள்வர் தூநெறி விளைய வொட்டார்முள்ளுடை யவர்கள் தம்மை முக்கணான் பாத நீழல்உள்ளிடை மறைந்து நின்றங் குணர்வினா லெய்ய லாமே.
Open this verse
6 Verse 4980
தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்துபிண்டமே சுமந்து நாளும் பெரியதோர் அவாவிற் பட்டேன்அண்டனே அமரர் கோவே அறிவனே அஞ்ச லென்னாய்தெண்டிரைக் கங்கை சூடுந் திகழ்தரு சடையி னானே.
Open this verse
7 Verse 4981
பாறினாய் பாவி நெஞ்சே பன்றிபோல் அளற்றிற் பட்டுத்தேறிநீ நினைதி யாயின் சிவகதி திண்ண மாகும்ஊறலே உவர்ப்பு நாறி உதிரமே யொழுகும் வாசல்கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதி னாயே.
Open this verse
8 Verse 4982
உய்த்தகால் உதயத் தும்பர் உமையவள் நடுக்கந் தீரவைத்தகா லரக்க னோதன் வான்முடி தனக்கு நேர்ந்தான்மொய்த்தகான் முகிழ்வெண் டிங்கள் மூர்த்தியெ னுச்சி தன்மேல்வைத்தகால் வருந்து மென்று வாடிநான் ஒடுங்கி னேனே.

குறிப்பு இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

Open this verse