Pathigam 94 / 114 · Fourth Thirumurai · Thirunavukkarasar

Thirukkandiyoor Thiruviruttham

திருக்கண்டியூர் - திருவிருத்தம் · 10 verses · 5132–5141

Share

பாடல்கள் The verses

1 Verse 5132
வானவர் தானவர் வைகல் மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித்தானவர் மால்பிர மன்னறி யாத தகைமையினான்ஆனவ னாதிபு ராணனன் றோடிய பன்றியெய்தகானவ னைக்கண்டி யூரண்ட வாணர் தொழுகின்றதே.
Open this verse
2 Verse 5133
வான மதியமும் வாளர வும்புன லோடுசடைத்தான மதுவென வைத்துழல் வான்றழல் போலுருவன்கான மறியொன்று கையுடை யான்கண்டி யூரிருந்தஊனமில் வேத முடையானை நாமடி யுள்குவதே.
Open this verse
3 Verse 5134
பண்டங் கறுத்ததோர் கையுடை யான்படைத் தான்றலையைஉண்டங் கறுத்ததும் ஊரொடு நாடவை தானறியுங்கண்டங் கறுத்த மிடறுடை யான்கண்டி யூரிருந்ததொண்டர் பிரானைக்கண் டீரண்ட வாணர் தொழுகின்றதே.
Open this verse
4 Verse 5135
முடியின்முற் றாததொன் றில்லையெல் லாமுடன் தானுடையான்கொடியுமுற் றவ்விடை யேறியோர் கூற்றொரு பாலுடையான்கடியமுற் றவ்வினை நோய்களை வான்கண்டி யூரிருந்தான்அடியுமுற் றார்தொண்டர் இல்லைகண் டீரண்ட வானவரே.
Open this verse
5 Verse 5136
பற்றியோ ரானை யுரித்த பிரான்பவ ளத்திரள்போல்முற்றும் அணிந்ததோர் நீறுடை யான்முன்ன மேகொடுத்தகற்றங் குடையவன் றானறி யான்கண்டி யூரிருந்தகுற்றமில் வேத முடையானை யாமண்டர் கூறுவதே.
Open this verse
6 Verse 5137
போர்ப்பனை யானை யுரித்த பிரான்பொறி வாயரவஞ்சேர்ப்பது வானத் திரைகடல் சூழுல கம்மிதனைக்காப்பது காரண மாகக்கொண் டான்கண்டி யூரிருந்தகூர்ப்புடை ஒள்வாள் மழுவனை யாமண்டர் கூறுவதே.
Open this verse
7 Verse 5138
அட்டது காலனை ஆய்ந்தது வேதமா றங்கமன்றுசுட்டது காமனைக் கண்ணத னாலே தொடர்ந்தெரியக்கட்டவை மூன்று மெரித்த பிரான்கண்டி யூரிருந்தகுட்டமுன் வேதப் படையனை யாமண்டர் கூறுவதே.
Open this verse
8 Verse 5139
அட்டும் ஒலிநீர் அணிமதி யும்மல ரானவெல்லாம்இட்டுப் பொதியுஞ் சடைமுடி யான்இண்டை மாலையங்கைக்கட்டும் அரவது தானுடை யான்கண்டி யூரிருந்தகொட்டும் பறையுடைக் கூத்தனை யாமண்டர் கூறுவதே.
Open this verse
9 Verse 5140
மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகிவிழத்தேய்ந்தன பாவஞ் செறுக்ககில் லாநம்மைச் செற்றநங்கைக்காய்ந்த பிரான்கண்டி யூரெம் பிரான்அங்க மாறினையும்ஆய்ந்த பிரானல்ல னோவடி யேனையாட் கொண்டவனே.
Open this verse
10 Verse 5141
மண்டி மலையை யெடுத்துமத் தாக்கியவ் வாசுகியைத்தண்டி அமரர் கடைந்த கடல்விடங் கண்டருளிஉண்ட பிரான்நஞ் சொளித்தபி ரான்அஞ்சி யோடிநண்ணக்கண்ட பிரானல்ல னோகண்டி யூரண்ட வானவனே.
Open this verse