Pathigam 91 / 114 · Fourth Thirumurai · Thirunavukkarasar

Thiruvaiyaaru Thiruviruttham

திருவையாறு - திருவிருத்தம் · 10 verses · 5102–5111

Share

பாடல்கள் The verses

1 Verse 5102
குறுவித்த வாகுற்ற நோய்வினை காட்டிக் குறுவித்தநோய்உறுவித்த வாவுற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்தருளிஅறிவித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களேசெறிவித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
Open this verse
2 Verse 5103
கூர்வித்த வாகுற்ற நோய்வினை காட்டியுங் கூர்வித்தநோய்ஊர்வித்த வாவுற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்தருளிஆர்வித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களேசேர்வித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
Open this verse
3 Verse 5104
தாக்கின வாசல மேவினை காட்டியுந் தண்டித்தநோய்நீக்கின வாநெடு நீரினின் றேற நினைந்தருளிஆக்கின வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களேநோக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
Open this verse
4 Verse 5105
தருக்கின நான்றக வின்றியு மோடச் சலமதனால்நெருக்கின வாநெடு நீரினின் றேற நினைந்தருளிஉருக்கின வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களேபெருக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
Open this verse
5 Verse 5106
இழிவித்த வாறிட்ட நோய்வினை காட்டி இடர்ப்படுத்துக்கழிவித்த வாகட்ட நோய்வினை தீர்ப்பான் கலந்தருளிஅழிவித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களேதொழுவித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
Open this verse
6 Verse 5107
இடைவித்த வாறிட்ட நோய்வினை காட்டி இடர்ப்படுத்துஉடைவித்த வாறுற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்தருளிஅடைவித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களேதொடர்வித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
Open this verse
7 Verse 5108
படக்கின வாபட நின்றுபன் னாளும் படக்கினநோய்அடக்கின வாறது வன்றியுந் தீவினை பாவமெல்லாம்அடக்கின வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களேதொடக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
Open this verse
8 Verse 5109
மறப்பித்த வாவல்லை நோய்வினை காட்டி மறப்பித்தநோய்துறப்பித்த வாதுக்க நோய்வினை தீர்ப்பான் உகந்தருளிஇறப்பித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களேசிறப்பித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
Open this verse
9 Verse 5110
துயக்கின வாதுக்க நோய்வினை காட்டித் துயக்கினநோய்இயக்கின வாறிட்ட நோய்வினை தீர்ப்பான் இசைந்தருளிஅயக்கின வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களேமயக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
Open this verse
10 Verse 5111
கறுத்துமிட் டார்கண்டங் கங்கை சடைமேற் கரந்தருளிஇறுத்துமிட் டார்இலங் கைக்கிறை தன்னை இருபதுதோள்அறுத்துமிட் டாரடி யேனைஐ யாறன் அடிமைக்களேபொறுத்துமிட் டார்தொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.
Open this verse