Pathigam 40 / 114 · Fourth Thirumurai · Thirunavukkarasar

Thiruvaiyaaru Thirunerisai

திருவையாறு - திருநேரிசை · 10 verses · 4622–4631

Share

பாடல்கள் The verses

1 Verse 4622
தானலா துலக மில்லை சகமலா தடிமை யில்லைகானலா தாட லில்லை கருதுவார் தங்க ளுக்குவானலா தருளு மில்லை வார்குழல் மங்கை யோடும்ஆனலா தூர்வ தில்லை ஐயனை யாற னார்க்கே.
Open this verse
2 Verse 4623
ஆலலால் இருக்கை இல்லை அருந்தவ முனிவர்க் கன்றுநூலலால் நொடிவ தில்லை நுண்பொரு ளாய்ந்து கொண்டுமாலுநான் முகனுங் கூடி மலரடி வணங்க வேலைஆலலால் அமுத மில்லை ஐயனை யாற னார்க்கே.
Open this verse
3 Verse 4624
நரிபுரி சுடலை தன்னில் நடமலால் நவிற்ற லில்லைசுரிபுரி குழலி யோடுந் துணையலால் இருக்கை யில்லைதெரிபுரி சிந்தை யார்க்குத் தெளிவலால் அருளு மில்லைஅரிபுரி மலர்கொண் டேத்தும் ஐயனை யாற னார்க்கே.
Open this verse
4 Verse 4625
தொண்டலாற் றுணையு மில்லை தோலலா துடையு மில்லைகண்டலா தருளு மில்லை கலந்தபின் பிரிவ தில்லைபண்டைநான் மறைகள் காணாப் பரிசின னென்றென் றெண்ணிஅண்டவா னவர்கள் ஏத்தும் ஐயனை யாற னார்க்கே.
Open this verse
5 Verse 4626
எரியலா லுருவ மில்லை ஏறலால் ஏற லில்லைகரியலாற் போர்வை யில்லை காண்டகு சோதி யார்க்குப்பிரிவிலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரானென் றேத்தும்அரியலாற் றேவி யில்லை ஐயனை யாற னார்க்கே.
Open this verse
6 Verse 4627
என்பலாற் கலனு மில்லை எருதலா லூர்வ தில்லைபுன்புலால் நாறு காட்டிற் பொடியலாற் சாந்து மில்லைதுன்பிலாத் தொண்டர் கூடித் தொழுதழு தாடிப் பாடும்அன்பலாற் பொருளு மில்லை ஐயனை யாற னார்க்கே.
Open this verse
7 Verse 4628
கீளலால் உடையு மில்லை கிளர்பொறி யரவம் பைம்பூண்தோளலாற் றுணையு மில்லை தொத்தலர் கின்ற வேனில்வேளலாற் காயப் பட்ட வீரரு மில்லை மீளாஆளலாற் கைம்மா றில்லை ஐயனை யாற னார்க்கே.
Open this verse
8 Verse 4629
சகமலா தடிமை யில்லை தானலாற் றுணையு மில்லைநகமெலாந் தேயக் கையான் நாண்மலர் தொழுது தூவிமுகமெலாங் கண்ணீர் மல்க முன்பணிந் தேத்துந் தொண்டர்அகமலாற் கோயி லில்லை ஐயனை யாற னார்க்கே.
Open this verse
9 Verse 4630
உமையலா துருவ மில்லை உலகலா துடைய தில்லைநமையெலா முடைய ராவர் நன்மையே தீமை யில்லைகமையெலா முடைய ராகிக் கழலடி பரவுந் தொண்டர்க்கமைவிலா அருள் கொடுப்பார் ஐயனை யாற னார்க்கே.
Open this verse
10 Verse 4631
மலையலா லிருக்கை யில்லை மதித்திடா அரக்கன் றன்னைத்தலையலால் நெரித்த தில்லை தடவரைக் கீழ டர்த்துநிலையிலார் புரங்கள் வேவ நெருப்பலால் விரித்த தில்லைஅலையினார் பொன்னி மன்னும் ஐயனை யாற னார்க்கே.
Open this verse