பண் · குறிஞ்சி
முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலேபத்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னேவித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
Open this verse
பண் · குறிஞ்சி
முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலேபத்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னேவித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
Open this verse
நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோ றும் பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும் மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட் கணியான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
Open this verse
வீதிகள் தோறும் வெண்கொடி யோடுவி தானங்கள்சோதிகள் விட்டுச் சுடர்மா மணிகள் ஒளிதோன்றச்சாதிக ளாய பவளமு முத்துத் தாமங்கள்ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
Open this verse
குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்பிணங்கித் தம்மிற் பித்தரைப் போலப் பிதற்றுவார்வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
Open this verse
நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்பலரு மிட்ட கல்ல வடங்கள் பரந்தெங்குங்கலவ மஞ்ஞை காரென் றெண்ணிக் களித்துவந்தலம ராரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
Open this verse
விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்தம்மாண் பிலராய்த் தரியார் தலையான் முட்டுவார்எம்மான் ஈசன் எந்தை எனப்பன் என்பார்கட்கம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
Open this verse
செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்மைந்தர்க ளோடு மங்கையர் கூடிம யங்குவார்இந்திர னாதி வானவர் சித்தர் எடுத்தேத்தும்அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
Open this verse
முடிகள் வணங்கி மூவா தார்கண் முன்செல்லவடிகொள் வேய்த்தோள் வான்அர மங்கையர் பின்செல்லப்பொடிகள் பூசிப் பாடுந் தொண்டர் புடைசூழஅடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
Open this verse
துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்இன்பம் நும்மை யேத்து நாள்கள் என்பாரும்நும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும்அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
Open this verse
பாரூர் பௌவத் தானைப் பத்தர் பணிந்தேத்தச்சீரூர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பார்ந்தோரூர் ஒழியா துலகம் எங்கும் எடுத்தேத்தும்ஆரூ ரன்றன் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
Open this verse