செற்றுக் களிற்றுரி கொள்கின்ற ஞான்று செருவெண்கொம்பொன்றிற்றுக் கிடந்தது போலும் இளம்பிறை பாம்பதனைச்சுற்றிக் கிடந்தது கிம்புரி போலச் சுடரிமைக்கும்நெற்றிக்கண் மற்றதன் முத்தொக்குமா லொற்றி யூரனுக்கே.
Open this verse
பாடல்கள் The verses
சொல்லக் கருதிய தொன்றுண்டு கேட்கிற் றொண்டாயடைந்தார்அல்லற் படக்கண்டு பின்னென் கொடுத்தி அலைகொள்முந்நீர்மல்லற் றிரைச்சங்க நித்திலங் கொண்டுவம் பக்கரைக்கேஒல்லைத் திரைகொணர்ந் தெற்றொற்றி யூருறை யுத்தமனே.
Open this verse
பரவை வருதிரை நீர்க்கங்கை பாய்ந்துக்க பல்சடைமேல் அரவ மணிதரு கொன்றை இளந்திங்கட் சூடியதோர் குரவ நறுமலர் கோங்க மணிந்து குலாய சென்னி உரவு திரைகொணர்ந் தெற்றொற்றி யூருறை யுத்தமனே.
Open this verse
தானகங் காடரங் காக வுடையது தன்னடைந்தார்ஊனக நாறு முடைதலை யிற்பலி கொள்வதுந்தான்தேனக நாறுந் திருவொற்றி யூருறை வாரவர்தாந்தானக மேவந்து போனகம் வேண்டி உழிதர்வரே.
Open this verse
வேலைக் கடல்நஞ்ச முண்டுவெள் ளேற்றொடும் வீற்றிருந்தமாலைச் சடையார்க் குறைவிட மாவது வாரிகுன்றாஆலைக் கரும்பொடு செந்நெற் கழனி அருகணைந்தசோலைத் திருவொற்றி யூரையெப் போதுந் தொழுமின்களே.
Open this verse
புற்றினில் வாழும் அரவுக்குந் திங்கட்குங் கங்கையென்னுஞ்சிற்றிடை யாட்குஞ் செறிதரு கண்ணிக்குஞ் சேர்விடமாம்பெற்றுடை யான்பெரும் பேச்சுடை யான்பிரி யாதெனையாள்விற்றுடை யானொற்றி யூருடை யான்றன் விரிசடையே.
Open this verse
இன்றரைக் கண்ணுடை யாரெங்கு மில்லை இமய மென்னுங் குன்றரைக் கண்ணன் குலமகட் பாவைக்குக் கூறிட்டநாள் அன்றரைக் கண்ணுங் கொடுத்துமை யாளையும் பாகம்வைத்த ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி யூருறை உத்தமனே.
Open this verse
சுற்றிவண் டியாழ்செயுஞ் சோலையுங் காவுந் துதைந்திலங்குபெற்றிகண் டால்மற்று யாவருங் கொள்வர் பிறரிடைநீஒற்றிகொண் டாயொற்றி யூரையுங் கைவிட் டுறுமென்றெண்ணிவிற்றிகண் டாய்மற் றிதுவொப்ப தில்லிடம் வேதியனே.
Open this verse
சுற்றிக் கிடந்தொற்றி யூரனென் சிந்தை பிரிவறியான்ஒற்றித் திரிதந்து நீயென்ன செய்தி உலகமெல்லாம்பற்றித் திரிதந்து பல்லொடு நாமென்று கண்குழித்துத்தெற்றித் திருப்பதல் லாலென்ன செய்யுமித் தீவினையே.
Open this verse
அங்கட் கடுக்கைக்கு முல்லைப் புறவம் முறுவல்செய்யும்பைங்கட் டலைக்குச் சுடலைக் களரி பருமணிசேர்கங்கைக்கு வேலை அரவுக்குப் புற்று கலைநிரம்பாத்திங்கட்கு வானந் திருவொற்றி யூரர் திருமுடியே.
Open this verse
தருக்கின வாளரக் கன்முடி பத்திறப் பாதந்தன்னால்ஒருக்கின வாறடி யேனைப் பிறப்பறுத் தாளவல்லான்நெருக்கின வானவர் தானவர் கூடிக் கடைந்தநஞ்சைப்பருக்கின வாறென்செய் கேனொற்றி யூருறை பண்டங்கனே.
Open this verse