கடலகம் ஏழி னோடும் புவனமுங் கலந்த விண்ணும்உடலகத் துயிரும் பாரும் ஒள்ளழ லாகி நின்றுதடமலர்க் கந்த மாலை தண்மதி பகலு மாகிமடலவிழ் கொன்றை சூடி மன்னும்ஆப் பாடி யாரே.
Open this verse
பாடல்கள் The verses
ஆதியும் அறிவு மாகி அறிவினுட் செறிவு மாகிச்சோதியுட் சுடரு மாகித் தூநெறிக் கொருவ னாகிப்பாதியிற் பெண்ணு மாகிப் பரவுவார் பாங்க னாகிவேதியர் வாழுஞ் சேய்ஞல் விரும்பும்ஆப் பாடி யாரே.
Open this verse
எண்ணுடை இருக்கு மாகி யிருக்கினுட் பொருளு மாகிப்பண்ணொடு பாடல் தன்னைப் பரவுவார் பாங்க னாகிக்கண்ணொரு நெற்றி யாகிக் கருதுவார் கருத லாகாப்பெண்ணொரு பாக மாகிப் பேணும்ஆப் பாடி யாரே.
Open this verse
அண்டமார் அமரர் கோமான் ஆதியெம் அண்ணல் பாதங்கொண்டவன் குறிப்பி னாலே கூப்பினான் தாப ரத்தைக்கண்டவன் தாதை பாய்வான் காலற எறியக் கண்டுதண்டியார்க் கருள்கள் செய்த தலைவர்ஆப் பாடி யாரே.
Open this verse
சிந்தையுந் தெளிவு மாகித் தெளிவினுட் சிவமு மாகிவந்தநற் பயனு மாகி வாணுதல் பாக மாகிமந்தமாம் பொழில்கள் சூழ்ந்த மண்ணித்தென் கரைமேல் மன்னிஅந்தமோ டளவி லாத அடிகள்ஆப் பாடி யாரே.
Open this verse
வன்னிவா ளரவு மத்தம் மதியமும் ஆறுஞ் சூடிமின்னிய உருவாஞ் சோதி மெய்ப்பொருட் பயனு மாகிக்கன்னியோர் பாக மாகிக் கருதுவார் கருத்து மாகிஇன்னிசை தொண்டர் பாட இருந்தஆப் பாடி யாரே.
Open this verse
உள்ளுமாய்ப் புறமு மாகி உருவுமாய் அருவு மாகிவெள்ளமாய்க் கரையு மாகி விரிகதிர் ஞாயி றாகிக்கள்ளமாய்க் கள்ளத் துள்ளார் கருத்துமாய் அருத்த மாகிஅள்ளுவார்க் கள்ளல் செய்திட் டிருந்தஆப் பாடி யாரே.
Open this verse
மயக்கமாய்த் தெளிவு மாகி மால்வரை வளியு மாகித்தியக்கமாய் ஒருக்க மாகிச் சிந்தையுள் ஒன்றி நின்றுஇயக்கமாய் இறுதி யாகி எண்டிசைக் கிறைவ ராகிஅயக்கமாய் அடக்க மாய ஐவர்ஆப் பாடி யாரே.
Open this verse
ஆரழல் உருவ மாகி அண்டமேழ் கடந்த எந்தைபேரொளி உருவி னானைப் பிரமனும் மாலுங் காணாச்சீரவை பரவி யேத்திச் சென்றடி வணங்கு வார்க்குப்பேரருள் அருளிச் செய்வார் பேணும்ஆப் பாடி யாரே.
Open this verse
திண்டிறல் அரக்க னோடிச் சீகயி லாயந் தன்னைஎண்டிறல் இலனு மாகி எடுத்தலும் ஏழை அஞ்சவிண்டிறல் நெறிய வூன்றி மிகக்கடுத் தலறி வீழப்பண்டிறல் கேட்டு கந்த பரமர்ஆப் பாடி யாரே.
Open this verse