Pathigam 85 / 114 · Fourth Thirumurai · Thirunavukkarasar

Thirucchotrutthurai Thiruviruttham

திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம் · 10 verses · 5041–5050

Share

பாடல்கள் The verses

1 Verse 5041
காலை யெழுந்து கடிமலர் தூயன தாங்கொணர்ந்துமேலை யமரர் விரும்பு மிடம்விரை யான்மலிந்தசோலை மணங்கமழ் சோற்றுத் துறையுறை வார்சடைமேல்மாலை மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.
Open this verse
2 Verse 5042
வண்டணை கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவுங்கொண்டணைந் தேறு முடியுடை யான்குரை சேர்கழற்கேதொண்டணைந் தாடிய சோற்றுத் துறையுறை வார்சடைமேல்வெண்டலை மாலையன் றோவெம் பிரானுக் கழகியதே.
Open this verse
3 Verse 5043
அளக்கு நெறியினன் அன்பர்கள் தம்மனத் தாய்ந்துகொள்வான்விளக்கு மடியவர் மேல்வினை தீர்த்திடும் விண்ணவர்கோன்துளக்குங் குழையணி சோற்றுத் துறையுறை வார்சடைமேற்றிளைக்கும் மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.
Open this verse
4 Verse 5044
ஆய்ந்தகை வாளர வத்தொடு மால்விடை யேறியெங்கும்பேர்ந்தகை மானட மாடுவர் பின்னு சடையிடையேசேர்ந்தகைம் மாமலர் துன்னிய சோற்றுத் துறையுறைவார்ஏந்துகைச் சூல மழுவெம் பிரானுக் கழகியதே.
Open this verse
5 Verse 5045
கூற்றைக் கடந்ததுங் கோளர வார்த்ததுங் கோளுழுவைநீற்றில் துதைந்து திரியும் பரிசது நாமறியோம்ஆற்றிற் கிடந்தங் கலைப்ப அலைப்புண் டசைந்ததொக்குஞ்சோற்றுத் துறையுறை வார்சடை மேலதோர் தூமதியே.
Open this verse
6 Verse 5046
வல்லாடி நின்று வலிபேசு வார்கோளர் வல்லசுரர்கொல்லாடி நின்று குமைக்கிலும் வானவர் வந்திறைஞ்சச்சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத் துறையுறைவார்வில்லாடி நின்ற நிலையெம் பிரானுக் கழகியதே.
Open this verse
7 Verse 5047
ஆய முடையது நாமறி யோம்அர ணத்தவரைக்காயக் கணைசிலை வாங்கியு மெய்துந் துயக்கறுத்தான்தூயவெண் ணீற்றினன் சோற்றுத் துறையுறை வார்சடைமேற்பாயும்வெண் ணீர்த்திரைக் கங்கையெம் மானுக் கழகியதே.
Open this verse
8 Verse 5048
அண்டர் அமரர் கடைந் தெழுந் தோடிய நஞ்சதனை உண்டும் அதனை ஒடுக்க வல்லான் மிக்க உம்பர்கள்கோன் தொண்டு பயில்கின்ற சோற்றுத் துறையுறை வார்சடைமேல் இண்டை மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.
Open this verse
9 Verse 5049
கடல்மணி வண்ணன் கருதிய நான்முகன் றானறியான்விடமணி கண்ட முடையவன் றானெனை ஆளுடையான்சுடரணிந் தாடிய சோற்றுத் துறையுறை வார்சடைமேற்படமணி நாகமன் றோவெம் பிரானுக் கழகியதே.
Open this verse
10 Verse 5050
இலங்கைக் கிறைவன் இருபது தோளு முடிநெரியக்கலங்க விரலினா லூன்றி அவனைக் கருத்தழித்ததுலங்கல் மழுவினன் சோற்றுத் துறையுறை வார்சடைமேல்இலங்கு மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.
Open this verse