Pathigam 104 / 114 · Fourth Thirumurai · Thirunavukkarasar

Thirunaagaikkaaronam Thiruviruttham

திருநாகைக்காரோணம் - திருவிருத்தம் · 10 verses · 5222–5231

Share

பாடல்கள் The verses

1 Verse 5222
வடிவுடை மாமலை மங்கைபங் காகங்கை வார்சடையாய்கடிகமழ் சோலை சுலவு கடல்நாகைக் காரோணனேபிடிமத வாரணம் பேணுந் துரகநிற் கப்பெரியஇடிகுரல் வெள்ளெரு தேறுமி தென்னைகொல் எம்மிறையே.
Open this verse
2 Verse 5223
கற்றார் பயில்கடல் நாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலேவிற்றாங் கியகரம் வேல்நெடுங் கண்ணி வியன்கரமேநற்றாள் நெடுஞ்சிலை நாண்வலித் தகர நின்கரமேசெற்றார் புரஞ்செற்ற சேவக மென்னைகொல் செப்புமினே.
Open this verse
3 Verse 5224
தூமென் மலர்க்கணை கோத்துத்தீ வேள்வி தொழிற்படுத்தகாமன் பொடிபடக் காய்ந்த கடல்நாகைக் காரோணநின்நாமம் பரவி நமச்சிவா யவென்னும் அஞ்செழுத்துஞ்சாமன் றுரைக்கத் தருதிகண் டாயெங்கள் சங்கரனே.
Open this verse
4 Verse 5225
பழிவழி யோடிய பாவிப் பறிதலைக் குண்டர்தங்கள்மொழிவழி யோடி முடிவேன் முடியாமைக் காத்துக்கொண்டாய்கழிவழி யோதம் உலவு கடல்நாகைக் காரோணவென்வழிவழி யாளாகும் வண்ணம் அருளெங்கள் வானவனே.
Open this verse
5 Verse 5226
செந்துவர் வாய்க்கருங் கண்ணிணை வெண்ணகைத் தேமொழியார்வந்து வலஞ்செய்து மாநட மாட மலிந்தசெல்வக்கந்த மலிபொழில் சூழ்கடல் நாகைக்கா ரோணமென்றுஞ்சிந்தைசெய் வாரைப் பிரியா திருக்குந் திருமங்கையே.
Open this verse
6 Verse 5227
பனைபுரை கைம்மத யானை யுரித்த பரஞ்சுடரேகனைகடல் சூழ்தரு நாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலேமனைதுறந் தல்லுணா வல்லமண் குண்டர் மயக்கைநீக்கிஎனைநினைந் தாட்கொண்டாய்க் கென்னினி யான்செயும் இச்சைகளே.
Open this verse
7 Verse 5228
சீர்மலி செல்வம் பெரிதுடை யசெம்பொன் மாமலையேகார்மலி சோலை சுலவு கடல்நாகைக் காரோணனேவார்மலி மென்முலை யார்பலி வந்திடச் சென்றிரந்துஊர்மலி பிச்சைகொண் டுண்பது மாதிமை யோவுரையே.
Open this verse
8 Verse 5229
வங்கம் மலிகடல் நாகைக்கா ரோணத்தெம் வானவனேஎங்கள் பெருமானோர் விண்ணப்பம் உண்டது கேட்டருளீர்கங்கை சடையுட் கரந்தாயக் கள்ளத்தை மெள்ளவுமைநங்கை அறியிற்பொல் லாதுகண்டா யெங்கள் நாயகனே.
Open this verse
9 Verse 5230

குறிப்பு இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று.

Open this verse
10 Verse 5231
கருந்தடங் கண்ணியுந் தானுங் கடல்நாகைக் காரோணத்தான்இருந்த திருமலை யென்றிறைஞ் சாதன் றெடுக்கலுற்றான்பெருந்தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்தலறஇருந்தரு ளிச்செய்த தேமற்றுச் செய்திலன் எம்மிறையே.
Open this verse