வடிவுடை மாமலை மங்கைபங் காகங்கை வார்சடையாய்கடிகமழ் சோலை சுலவு கடல்நாகைக் காரோணனேபிடிமத வாரணம் பேணுந் துரகநிற் கப்பெரியஇடிகுரல் வெள்ளெரு தேறுமி தென்னைகொல் எம்மிறையே.
பாடலின் தனிப் பக்கம்
பாடல்கள் The verses
கற்றார் பயில்கடல் நாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலேவிற்றாங் கியகரம் வேல்நெடுங் கண்ணி வியன்கரமேநற்றாள் நெடுஞ்சிலை நாண்வலித் தகர நின்கரமேசெற்றார் புரஞ்செற்ற சேவக மென்னைகொல் செப்புமினே.
பாடலின் தனிப் பக்கம்
தூமென் மலர்க்கணை கோத்துத்தீ வேள்வி தொழிற்படுத்தகாமன் பொடிபடக் காய்ந்த கடல்நாகைக் காரோணநின்நாமம் பரவி நமச்சிவா யவென்னும் அஞ்செழுத்துஞ்சாமன் றுரைக்கத் தருதிகண் டாயெங்கள் சங்கரனே.
பாடலின் தனிப் பக்கம்
பழிவழி யோடிய பாவிப் பறிதலைக் குண்டர்தங்கள்மொழிவழி யோடி முடிவேன் முடியாமைக் காத்துக்கொண்டாய்கழிவழி யோதம் உலவு கடல்நாகைக் காரோணவென்வழிவழி யாளாகும் வண்ணம் அருளெங்கள் வானவனே.
பாடலின் தனிப் பக்கம்
செந்துவர் வாய்க்கருங் கண்ணிணை வெண்ணகைத் தேமொழியார்வந்து வலஞ்செய்து மாநட மாட மலிந்தசெல்வக்கந்த மலிபொழில் சூழ்கடல் நாகைக்கா ரோணமென்றுஞ்சிந்தைசெய் வாரைப் பிரியா திருக்குந் திருமங்கையே.
பாடலின் தனிப் பக்கம்
பனைபுரை கைம்மத யானை யுரித்த பரஞ்சுடரேகனைகடல் சூழ்தரு நாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலேமனைதுறந் தல்லுணா வல்லமண் குண்டர் மயக்கைநீக்கிஎனைநினைந் தாட்கொண்டாய்க் கென்னினி யான்செயும் இச்சைகளே.
பாடலின் தனிப் பக்கம்
சீர்மலி செல்வம் பெரிதுடை யசெம்பொன் மாமலையேகார்மலி சோலை சுலவு கடல்நாகைக் காரோணனேவார்மலி மென்முலை யார்பலி வந்திடச் சென்றிரந்துஊர்மலி பிச்சைகொண் டுண்பது மாதிமை யோவுரையே.
பாடலின் தனிப் பக்கம்
வங்கம் மலிகடல் நாகைக்கா ரோணத்தெம் வானவனேஎங்கள் பெருமானோர் விண்ணப்பம் உண்டது கேட்டருளீர்கங்கை சடையுட் கரந்தாயக் கள்ளத்தை மெள்ளவுமைநங்கை அறியிற்பொல் லாதுகண்டா யெங்கள் நாயகனே.
பாடலின் தனிப் பக்கம்
குறிப்பு இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று.
பாடலின் தனிப் பக்கம்கருந்தடங் கண்ணியுந் தானுங் கடல்நாகைக் காரோணத்தான்இருந்த திருமலை யென்றிறைஞ் சாதன் றெடுக்கலுற்றான்பெருந்தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்தலறஇருந்தரு ளிச்செய்த தேமற்றுச் செய்திலன் எம்மிறையே.
பாடலின் தனிப் பக்கம்