பதிகம் 89 / 114 · நான்காம் திருமுறை · திருநாவுக்கரசர்

திருநெய்த்தானம் - திருவிருத்தம்

Thiruneytthaanam Thiruviruttham · 10 பாடல்கள் · 5082–5091

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 5082
பாரிடஞ் சாடிய பல்லுயிர் வானம ரர்க்கருளிக்காரடைந் தகடல் வாயுமிழ் நஞ்சமு தாகவுண்டான்ஊரடைந் திவ்வுல கிற்பலி கொள்வது நாமறியோம்நீரடைந் தகரை நின்றநெய்த் தானத் திருந்தவனே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 5083
தேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி யாய்நின் திருச்சடைமேற்பாய்ந்தகங் கைப்புனற் பன்முக மாகிப் பரந்தொலிப்பஆய்ந்திலங் கும்மழு வேலுடை யாயடி யேற்குரைநீஏந்திள மங்கையும் நீயும்நெய்த் தானத் திருந்ததுவே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 5084
கொன்றடைந் தாடிக் குமைத்திடுங் கூற்றமொன் னார்மதின்மேற்சென்றடைந் தாடிப் பொருததுந் தேசமெல் லாமறியுங்குன்றடைந் தாடுங் குளிர்பொழிற் காவிரி யின்கரைமேற்சென்றடைந் தார்வினை தீர்க்குநெய்த் தானத் திருந்தவனே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 5085
கொட்டு முழவர வத்தொடு கோலம் பலஅணிந்து நட்டம் பலபயின் றாடுவர் நாகம் அரைக் கசைத்துச் சிட்டர் திரிபுரந் தீயெழச் செற்ற சிலையுடையான் இட்ட முமையொடு நின்றநெய்த் தானத் திருந்தவனே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 5086
கொய்மலர்க் கொன்றை துழாய்வன்னி மத்தமுங் கூவிளமும்மெய்மலர் வேய்ந்த விரிசடைக் கற்றைவிண் ணோர்பெருமான்மைமலர் நீல நிறங்கருங் கண்ணியோர் பால்மகிழ்ந்தான்நின்மல னாடல் நிலயநெய்த் தானத் திருந்தவனே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 5087
பூந்தார் நறுங்கொன்றை மாலையை வாங்கிச் சடைக்கணிந்துகூர்ந்தார் விடையினை யேறிப்பல் பூதப் படைநடுவேபோந்தார் புறவிசை பாடவும் ஆடவுங் கேட்டருளிச்சேர்ந்தார் உமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 5088
பற்றின பாம்பன் படுத்த புலியுரித் தோலுடையன்முற்றின மூன்று மதில்களை மூட்டி யெரித்தறுத்தான்சுற்றிய பூதப் படையினன் சூல மழுவொருமான்செற்றுநந் தீவினை தீர்க்குநெய்த் தானத் திருந்தவனே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 5089
விரித்த சடையினன் விண்ணவர் கோன்விட முண்டகண்டன்உரித்த கரியுரி மூடியொன் னார்மதில் மூன்றுடனேஎரித்த சிலையினன் ஈடழியா தென்னை ஆண்டுகொண்டதரித்த உமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 5090
தூங்கான் துளங்கான் துழாய்கொன்றை துன்னிய செஞ்சடைமேல்வாங்கா மதியமும் வாளர வுங்கங்கை தான்புனைந்தான்தேங்கார் திரிபுரந் தீயெழ வெய்து தியக்கறுத்துநீங்கான் உமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 5091
ஊட்டிநின் றான்பொரு வானில மும்மதில் தீயம்பினால்மாட்டிநின் றான்அன்றி னார்வெந்து வீழவும் வானவர்க்குக்காட்டிநின் றான்கத மாக்கங்கை பாயவோர் வார்சடையைநீட்டிநின் றான்றிரு நின்றநெய்த் தானத் திருந்தவனே.
பாடலின் தனிப் பக்கம்