பதிகம் 38 / 114 · நான்காம் திருமுறை · திருநாவுக்கரசர்

திருவையாறு - திருநேரிசை

Thiruvaiyaaru Thirunerisai · 10 பாடல்கள் · 4602–4611

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 4602
கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்பொறி அரவும் வைத்தார்திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்அங்கையுள் அனலும் வைத்தார் ஐயனை யாற னாரே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 4603
பொடிதனைப் பூச வைத்தார் பொங்குவெண் ணூலும் வைத்தார்கடியதோர் நாகம் வைத்தார் காலனைக் காலில் வைத்தார்வடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகம் வைத்தார்அடியிணை தொழவும் வைத்தார் ஐயனை யாற னாரே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 4604
உடைதரு கீளும் வைத்தார் உலகங்க ளனைத்தும் வைத்தார்படைதரு மழுவும் வைத்தார் பாய்புலித் தோலும் வைத்தார்விடைதரு கொடியும் வைத்தார் வெண்புரி நூலும் வைத்தார்அடைதர அருளும் வைத்தார் ஐயனை யாற னாரே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 4605
தொண்டர்கள் தொழவும் வைத்தார் தூமதி சடையில் வைத்தார்இண்டையைத் திகழ வைத்தார் எமக்கென்று மின்பம் வைத்தார்வண்டுசேர் குழலி னாளை மருவியோர் பாகம் வைத்தார்அண்டவா னவர்கள் ஏத்தும் ஐயனை யாற னாரே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 4606
வானவர் வணங்க வைத்தார் வல்வினை மாய வைத்தார்கானிடை நடமும் வைத்தார் காமனைக் கனலா வைத்தார்ஆனிடை ஐந்தும் வைத்தார் ஆட்டுவார்க் கருளும் வைத்தார்ஆனையின் உரிவை வைத்தார் ஐயனை யாற னாரே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 4607
சங்கணி குழையும் வைத்தார் சாம்பல்மெய்ப் பூச வைத்தார்வெங்கதிர் எரிய வைத்தார் விரிபொழி லனைத்தும் வைத்தார்கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார்அங்கம தோத வைத்தார் ஐயனை யாற னாரே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 4608
பத்தர்கட் கருளும் வைத்தார் பாய்விடை யேற வைத்தார்சித்தத்தை ஒன்ற வைத்தார் சிவமதே நினைய வைத்தார்முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார்அத்தியின் உரிவை வைத்தார் ஐயனை யாற னாரே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 4609
ஏறுகந் தேற வைத்தார் இடைமரு திடமும் வைத்தார்நாறுபூங் கொன்றை வைத்தார் நாகமும் அரையில் வைத்தார்கூறுமை யாகம் வைத்தார் கொல்புலித் தோலும் வைத்தார்ஆறுமோர் சடையில் வைத்தார் ஐயனை யாற னாரே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 4610
பூதங்கள் பலவும் வைத்தார் பொங்குவெண் ணீறும் வைத்தார்கீதங்கள் பாட வைத்தார் கின்னரந் தன்னை வைத்தார்பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார்ஆதியும் அந்தம் வைத்தார் ஐயனை யாற னாரே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 4611
இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார்கரப்பவர் தங்கட் கெல்லாங் கடுநர கங்கள் வைத்தார்பரப்புநீர்க் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்அரக்கனுக் கருளும் வைத்தார் ஐயனை யாற னாரே.
பாடலின் தனிப் பக்கம்