பதிகம் 111 / 114 · நான்காம் திருமுறை · திருநாவுக்கரசர்

பசுபதி - திருவிருத்தம்

Pasubadhi Thiruviruttham · 8 பாடல்கள் · 5262–5269

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 5262
சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டுநின் றாள்பரவிஏம்பலிப் பார்கட் கிரங்குகண் டாயிருங் கங்கையென்னுங்காம்பலைக் கும்பணைத் தோளி கதிர்ப்பூண் வனமுலைமேற்பாம்பலைக் குஞ்சடை யாயெம்மை யாளும் பசுபதியே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 5263
உடம்பைத் தொலைவித்துன் பாதந் தலைவைத்த உத்தமர்கள்இடும்பைப் படாமல் இரங்குகண் டாயிரு ளோடச்செந்தீஅடும்பொத் தனைய அழன்மழு வாவழ லேயுமிழும்படம்பொத் தரவரை யாயெம்மை யாளும் பசுபதியே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 5264
தாரித் திரந்தவி ராவடி யார்தடு மாற்றமென்னும்மூரித் திரைப்பௌவ நீக்குகண் டாய்முன்னை நாளொருகால்வேரித்தண் பூஞ்சுடர் ஐங்கணை வேள்வெந்து வீழச்செந்தீப்பாரித்த கண்ணுடை யாயெம்மை யாளும் பசுபதியே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 5265
ஒருவரைத் தஞ்சமென் றெண்ணாதுன் பாத மிறைஞ்சுகின்றார்அருவினைச் சுற்றம் அகல்விகண் டாயண்ட மேயணவும்பெருவரைக் குன்றம் பிளிறப் பிளந்துவேய்த் தோளியஞ்சப்பருவரைத் தோலுரித் தாயெம்மை யாளும் பசுபதியே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 5266
இடுக்கொன்று மின்றியெஞ் சாமையுன் பாத மிறைஞ்சுகின்றார்க்கடர்க்கின்ற நோயை விலக்குகண் டாயண்டம் எண்டிசையுஞ்சுடர்த்திங்கள் சூடிச் சுழற்கங்கை யோடுஞ் சுரும்புதுன்றிப்படர்க்கொண்ட செஞ்சடை யாயெம்மை யாளும் பசுபதியே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 5267
அடலைக் கடல்கழி வான்நின் னடியிணை யேயடைந்தார் நடலைப் படாமை விலக்குகண் டாய்நறுங் கொன்றை திங்கள் சுடலைப் பொடிச்சுண்ண மாசுணஞ் சூளா மணிகிடந்து படரச் சுடர்மகு டாயெம்மை யாளும் பசுபதியே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 5268
துறவித் தொழிலே புரிந்துன் சுரும்படி யேதொழுவார்மறவித் தொழிலது மாற்றுகண் டாய்மதின் மூன்றுடையஅறவைத் தொழில்புரிந் தந்தரத் தேசெல்லு மந்திரத்தேர்ப்பறவைப் புரமெரித் தாயெம்மை யாளும் பசுபதியே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 5269
சித்தத் துருகிச் சிவனெம் பிரானென்று சிந்தையுள்ளேபித்துப் பெருகப் பிதற்றுகின் றார்பிணி தீர்த்தருளாய்மத்தத் தரக்கன் இருபது தோளு முடியுமெல்லாம்பத்துற் றுறநெரித் தாயெம்மை யாளும் பசுபதியே.

குறிப்பு இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

பாடலின் தனிப் பக்கம்