முன்பெலாம் இளைய காலம் மூர்த்தியை நினையா தோடிக்கண்கண இருமி நாளுங் கருத்தழிந் தருத்த மின்றிப்பின்பக லுணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன் உள்ளம்அன்பனாய் வாழ மாட்டேன் அதிகைவீ ரட்ட னாரே.
பாடலின் தனிப் பக்கம்
பாடல்கள் The verses
கறைப்பெருங் கண்டத் தானே காய்கதிர் நமனை யஞ்சிநிறைப்பெருங் கடலைக் கண்டேன் நீள்வரை யுச்சி கண்டேன்பிறைப்பெருஞ் சென்னி யானே பிஞ்ஞகா இவைய னைத்தும்அறுப்பதோர் உபாயங் காணேன் அதிகைவீ ரட்ட னாரே.
பாடலின் தனிப் பக்கம்
நாதனா ரென்ன நாளும் நடுங்கின ராகித் தங்கள்ஏதங்கள் அறிய மாட்டார் இணையடி தொழுதோம் என்பார்ஆதனா னவனென் றெள்கி அதிகைவீ ரட்ட னேநின்பாதநான் பரவா துய்க்கும் பழவினைப் பரிசி லேனே.
பாடலின் தனிப் பக்கம்
சுடலைசேர் சுண்ண மெய்யர் சுரும்புண விரிந்த கொன்றைப்படலைசேர் அலங்கல் மார்பர் பழனஞ்சேர் கழனித் தெங்கின்மடலைநீர் கிழிய வோடி அதனிடை மணிகள் சிந்துங்கெடிலவீ ரட்ட மேய கிளர்சடை முடிய னாரே.
பாடலின் தனிப் பக்கம்
மந்திர முள்ள தாக மறிகட லெழுநெய் யாகஇந்திரன் வேள்வித் தீயில் எழுந்ததோர் கொழுந்தின் வண்ணஞ்சிந்திர மாக நோக்கித் தெருட்டுவார் தெருட்ட வந்துகந்திரம் முரலுஞ் சோலைக் கானலங் கெடிலத் தாரே.
பாடலின் தனிப் பக்கம்
மைஞ்ஞல மனைய கண்ணாள் பங்கன்மா மலையை யோடிமெய்ஞ்ஞரம் புதிரம் பில்க விசைதணிந் தரக்கன் வீழ்ந்துகைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு காதலால் இனிது சொன்னகின்னரங் கேட்டு கந்தார் கெடிலவீ ரட்ட னாரே.
குறிப்பு இப்பதிகத்தில் 6,7,8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.
பாடலின் தனிப் பக்கம்