பதிகம் 22 / 114 · நான்காம் திருமுறை · திருநாவுக்கரசர்

கோயில் - திருநேரிசை

Koyil Thirunerisai · 11 பாடல்கள் · 4445–4455

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 4445

பண் · காந்தாரம்

செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா எறிக்குஞ் சென்னிநஞ்சடைக் கண்ட னாரைக் காணலா நறவ நாறும்மஞ்சடைச் சோலைத் தில்லை மல்குசிற் றம்ப லத்தேதுஞ்சடை இருள் கிழியத் துளங்கெரி யாடு மாறே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 4446
ஏறனார் ஏறு தம்பால் இளநிலா எறிக்குஞ் சென்னிஆறனார் ஆறு சூடி ஆயிழை யாளோர் பாகம்நாறுபூஞ் சோலைத் தில்லை நவின்றசிற் றம்ப லத்தேநீறுமெய் பூசி நின்று நீண்டெரி யாடு மாறே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 4447
சடையனார் சாந்த நீற்றர் தனிநிலா எறிக்குஞ் சென்னிஉடையனா ருடைத லையில் உண்பதும் பிச்சை யேற்றுக்கடிகொள்பூந் தில்லை தன்னுட் கருதுசிற் றம்ப லத்தேஅடிகழ லார்க்க நின்று வனலெரி யாடு மாறே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 4448
பையர வசைத்த அல்குற் பனிநிலா எறிக்குஞ் சென்னிமையரிக் கண்ணி யாளும் மாலுமோர் பாக மாகிச்செய்யெரி தில்லை தன்னுட் டிகழ்ந்தசிற் றம்ப லத்தேகையெரி வீசி நின்று கனலெரி யாடு மாறே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 4449
ஓதினார் வேதம் வாயால் ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப்பூதனார் பூதஞ் சூழப் புலியுரி யதள னார்தாம்நாதனார் தில்லை தன்னுள் நவின்றசிற் றம்ப லத்தேகாதில்வெண் குழைகள் தாழக் கனலெரி யாடு மாறே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 4450
ஓருடம் பிருவ ராகி ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப்பாரிடம் பாணி செய்யப் பயின்றஎம் பரம மூர்த்திகாரிடந் தில்லை தன்னுட் கருதுசிற் றம்ப லத்தேபேரிடம் பெருக நின்று பிறங்கெரி யாடு மாறே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 4451
முதற்றனிச் சடையை மூழ்க முகிழ்நிலா எறிக்குஞ் சென்னிமதக்களிற் றுரிவை போர்த்த மைந்தரைக் காண லாகும்மதத்துவண் டறையுஞ் சோலை மல்குசிற் றம்ப லத்தேகதத்ததோ ரரவ மாடக் கனலெரி யாடு மாறே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 4452
மறையனார் மழுவொன் றேந்தி மணிநிலா எறிக்குஞ் சென்னிஇறைவனார் எம்பி ரானார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்சிறைகொள்நீர்த் தில்லை தன்னுட் டிகழ்ந்தசிற் றம்ப லத்தேஅறைகழ லார்க்க நின்று வனலெரி யாடு மாறே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 4453
விருத்தனாய்ப் பால னாகி விரிநிலா எறிக்குஞ் சென்னிநிருத்தனார் நிருத்தஞ் செய்ய நீண்டபுன் சடைகள் தாழக்கருத்தனார் தில்லை தன்னுட் கருதுசிற் றம்ப லத்தேஅருத்தமா மேனி தன்னோ டனலெரி யாடு மாறே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 4454
பாலனாய் விருத்த னாகிப் பனிநிலா எறிக்குஞ் சென்னிகாலனைக் காலாற் காய்ந்த கடவுளார் விடையொன் றேறிஞாலமாந் தில்லை தன்னுள் நவின்றசிற் றம்ப லத்தேநீலஞ்சேர் கண்ட னார்தாம் நீண்டெரி யாடு மாறே.
பாடலின் தனிப் பக்கம்
11 பாடல் 4455
மதியிலா அரக்க னோடி மாமலை யெடுக்க நோக்கிநெதியன்றோள் நெரிய வூன்றி நீடிரும் பொழில்கள் சூழ்ந்தமதியந்தோய் தில்லை தன்னுள் மல்குசிற் றம்ப லத்தேஅதிசயம் போல நின்று வனலெரி யாடு மாறே.
பாடலின் தனிப் பக்கம்