மாலினை மாலுற நின்றான் மலைமகள் தன்னுடையபாலனைப் பான்மதி சூடியைப் பண்புண ரார்மதின்மேற்போலனைப் போர்விடை யேறியைப் பூந்துருத் திமகிழும்ஆலனை ஆதிபு ராணனை நானடி போற்றுவதே.
பாடலின் தனிப் பக்கம்
பாடல்கள் The verses
மறியுடை யான்மழு வாளினன் மாமலை மங்கையோர்பால்குறியுடை யான்குண மொன்றறிந் தாரில்லை கூறிலவன்பொறியுடை வாளர வத்தவன் பூந்துருத் தியுறையும்அறிவுடை ஆதி புராணனை நானடி போற்றுவதே.
பாடலின் தனிப் பக்கம்
மறுத்தவர் மும்மதில் மாயவோர் வெஞ்சிலை கோத்தோரம்பால்அறுத்தனை ஆலதன் கீழனை ஆல்விட முண்டதனைப்பொறுத்தனைப் பூதப் படையனைப் பூந்துருத் தியுறையும்நிறத்தனை நீல மிடற்றனை யானடி போற்றுவதே.
பாடலின் தனிப் பக்கம்
உருவினை ஊழி முதல்வனை ஓதி நிறைந்துநின்றதிருவினைத் தேசம் படைத்தனைச் சென்றடைந் தேனுடையபொருவினை யெல்லாந் துரந்தனைப் பூந்துருத் தியுறையுங்கருவினைக் கண்மூன் றுடையனை யானடி போற்றுவதே.
பாடலின் தனிப் பக்கம்
தக்கன்றன் வேள்வி தகர்த்தவன் சார மதுவன்றுகோள்மிக்கன மும்மதில் வீயவோர் வெஞ்சிலை கோத்தோரம்பால்புக்கனன் பொன்றிகழ்ந் தன்னதோர் பூந்துருத் தியுறையும்நக்கனை நங்கள் பிரான்றனை நானடி போற்றுவதே.
பாடலின் தனிப் பக்கம்
அருகடை மாலையுந் தானுடை யான்அழ காலமைந்தஉருவுடை மங்கையுந் தன்னொரு பாலுல காயுநின்றான்பொருபடை வேலினன் வில்லினன் பூந்துருத் தியுறையுந்திருவுடைத் தேச மதியனை யானடி போற்றுவதே.
பாடலின் தனிப் பக்கம்
மன்றியுந் நின்ற மதிலரை மாய வகைகெடுக்கக்கன்றியுந் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனலம்பினாற்பொன்றியும் போகப் புரட்டினன் பூந்துருத் தியுறையும்அன்றியுஞ் செய்த பிரான்றனை யானடி போற்றுவதே.
பாடலின் தனிப் பக்கம்
மின்னிறம் மிக்க இடையுமை நங்கையோர் பான்மகிழ்ந்தான்என்னிற மென்றம ரர்பெரி யாரின்னந் தாமறியார்பொன்னிற மிக்க சடையவன் பூந்துருத் தியுறையும்என்னிற வெந்தை பிரான்றனை யானடி போற்றுவதே.
பாடலின் தனிப் பக்கம்
அந்தியை நல்ல மதியினை யார்க்கும் அறிவரியசெந்தியை வாட்டுஞ்செம் பொன்னினை சென்றடைந் தேனுடையபுந்தியைப் புக்க அறிவினை பூந்துருத் தியுறையும்நந்தியை நங்கள் பிரான்றனை நானடி போற்றுவதே.
பாடலின் தனிப் பக்கம்
பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு சடையிடையேவைக்கையும் வானிழி கங்கையும் மங்கை நடுக்குறவேமொய்க்கை அரக்கனை யூன்றினன் பூந்துருத் தியுறையும்மிக்கநல் வேத விகிர்தனை நானடி போற்றுவதே.
பாடலின் தனிப் பக்கம்