பதிகம் 47 / 114 · நான்காம் திருமுறை · திருநாவுக்கரசர்

திருக்கயிலாயம் - திருநேரிசை

Thirukkayilaayam Thirunerisai · 10 பாடல்கள் · 4684–4693

பகிர்

பாடல்கள் The verses

1 பாடல் 4684
கனகமா வயிர முந்து மாமணிக் கயிலை கண்டும்உனகனா யரக்க னோடி யெடுத்தலு முமையா ளஞ்சஅனகனாய் நின்ற ஈச னூன்றலு மலறி வீழ்ந்தான்மனகனா யூன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.
பாடலின் தனிப் பக்கம்
2 பாடல் 4685
கதித்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடிஅதிர்த்தவன் எடுத்தி டலும் அரிவைதான் அஞ்ச ஈசன்நெதித்தவ னூன்றி யிட்ட நிலையழிந் தலறி வீழ்ந்தான்மதித்திறை யூன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.
பாடலின் தனிப் பக்கம்
3 பாடல் 4686
கறுத்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையைக் கையால்மறித்தலும் மங்கை அஞ்ச வானவர் இறைவன் நக்குநெறித்தொரு விரலா லூன்ற நெடுவரை போல வீழ்ந்தான்மறித்திறை யூன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.
பாடலின் தனிப் பக்கம்
4 பாடல் 4687
கடுத்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடிஎடுத்தலும் மங்கை அஞ்ச இறையவ னிறையே நக்குநொடிப்பள விரலா லூன்ற நோவது மலறி யிட்டான்மடித்திறை யூன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.
பாடலின் தனிப் பக்கம்
5 பாடல் 4688
கன்றித்தன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடிவென்றித்தன் கைத்த லத்தா லெடுத்தலும் வெருவ மங்கைநன்றுத்தான் நக்கு நாத னூன்றலு நகழ வீழ்ந்தான்மன்றித்தான் ஊன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.
பாடலின் தனிப் பக்கம்
6 பாடல் 4689
களித்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடிநெளித்தவ னெடுத்தி டலும் நேரிழை அஞ்ச நோக்கிவெளித்தவ னூன்றி யிட்ட வெற்பினா லலறி வீழ்ந்தான்மளித்திறை யூன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.
பாடலின் தனிப் பக்கம்
7 பாடல் 4690
கருத்தனாய்க் கண்சி வந்து கயிலைநன் மலையைக் கையால்எருத்தனாய் எடுத்த வாறே ஏந்திழை அஞ்ச ஈசன்திருத்தனாய் நின்ற தேவன் திருவிர லூன்ற வீழ்ந்தான்வருத்துவான் ஊன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.
பாடலின் தனிப் பக்கம்
8 பாடல் 4691
கடியவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடிவடிவுடை மங்கை அஞ்ச எடுத்தலும் மருவ நோக்கிச்செடிபடத் திருவி ரலா லூன்றலுஞ் சிதைந்து வீழ்ந்தான்வடிவுற வூன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.
பாடலின் தனிப் பக்கம்
9 பாடல் 4692
கரியத்தான் கண்சி வந்து கயிலைநன் மலையைப் பற்றிஇரியத்தான் எடுத்தி டலும் ஏந்திழை அஞ்ச ஈசன்நெரியத்தான் ஊன்றா முன்னம் நிற்கிலா தலறி வீழ்ந்தான்மரியத்தான் ஊன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.
பாடலின் தனிப் பக்கம்
10 பாடல் 4693
கற்றனன் கயிலை தன்னைக் காண்டலும் அரக்கன் ஓடிச்செற்றவன் எடுத்த வாறே சேயிழை அஞ்ச ஈசன்உற்றிறை ஊன்றா முன்னம் உணர்வழி வகையால் வீழ்ந்தான்மற்றிறை ஊன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.
பாடலின் தனிப் பக்கம்