தன்னைச் சரணென்று தாளடைந் தேன்றன் அடியடையப்புன்னைப் பொழிற்புக லூரண்ணல் செய்வன கேண்மின்களோஎன்னைப் பிறப்பறுத் தென்வினை கட்டறுத் தேழ்நரகத்தென்னைக் கிடக்கலொட் டான்சிவ லோகத் திருத்திடுமே.
Open this verse
பாடல்கள் The verses
பொன்னை வகுத்தன்ன மேனிய னேபுணர் மென்முலையாள்தன்னை வகுத்தன்ன பாகத்தனே தமியேற் கிரங்காய்புன்னை மலர்த்தலை வண்டுறங் கும்புக லூரரசேஎன்னை வகுத்திலை யேலிடும் பைக்கிடம் யாதுசொல்லே.
Open this verse
குறிப்பு இப்பதிகத்தில் 3-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
Open this verseபொன்னள வார்சடைக் கொன்றையி னாய்புக லூர்க்கரசேமன்னுள தேவர்கள் தேடு மருந்தே வலஞ்சுழியாய்என்னள வேயுனக் காட்பட் டிடைக்கலத் தேகிடப்பார்உன்னள வேயெனக் கொன்றுமி ரங்காத உத்தமனே.
Open this verse
ஓணப் பிரானும் ஒளிர்மா மலர்மிசை உத்தமனுங்காணப் பராவியுங் காண்கின் றிலர்கர நாலைந்துடைத்தோணற் பிரானை வலிதொலைத் தோன்தொல்லை நீர்ப்புகலூர்க்கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடுவினையே.
குறிப்பு இப்பதிகத்தில் 5,6,7,8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.
Open this verse