மாசிலொள் வாள்போல் மறியும் மணிநீர்த் திரைத்தொகுதிஊசலை யாடியங் கொண்சிறை அன்னம் உறங்கலுற்றால்பாசறை நீலம் பருகிய வண்டுபண் பாடல்கண்டுவீசுங் கெடில வடகரைத் தேயெந்தை வீரட்டமே.
Open this verse
பாடல்கள் The verses
பைங்காற் றவளை பறைகொட்டப் பாசிலை நீர்ப்படுகர்அங்காற் குவளைமேல் ஆவி உயிர்ப்ப அருகுலவுஞ்செங்காற் குருகிவை சேருஞ் செறிகெடி லக்கரைத்தேவெங்காற் குருசிலை வீரன் அருள்வைத்த வீரட்டமே.
Open this verse
அம்மலர்க் கண்ணியர் அஞ்சனஞ் செந்துவர் வாயிளையார்வெம்முலைச் சாந்தம் விலைபெறு மாலை யெடுத்தவர்கள்தம்மருங் கிற்கிரங் கார்தடந் தோள்மெலி யக்குடைவார்விம்மு புனற்கெடி லக்கரைத் தேயெந்தை வீரட்டமே.
Open this verse
மீனுடைத் தண்புனல் வீரட்ட ரேநும்மை வேண்டுகின்றதியானுடைச் சில்குறை ஒன்றுள தால்நறுந் தண்ணெருக்கின்தேனுடைக் கொன்றைச் சடையுடைக் கங்கைத் திரைதவழுங்கூனுடைத் திங்கட் குழவியெப் போதுங் குறிக்கொண்மினே.
Open this verse
ஆரட்ட தேனும் இரந்துண் டகமக வன்றிரிந்துவேரட்ட நிற்பித் திடுகின்ற தால்விரி நீர்ப்பரவைச்சூரட்ட வேலவன் தாதையைச் சூழ்வய லாரதிகைவீரட்டத் தானை விரும்பா வரும்பாவ வேதனையே.
Open this verse
படர்பொற் சடையும் பகுவாய் அரவும் பனிமதியுஞ்சுடலைப் பொடியு மெல்லா முளவேயவர் தூயதெண்ணீர்க்கெடிலக் கரைத்திரு வீரட்ட ராவர்கெட் டேனடைந்தார்நடலைக்கு நற்றுணை யாகுங்கண் டீரவர் நாமங்களே.
Open this verse
காளங் கடந்ததோர் கண்டத்த ராகிக் கண்ணார்கெடிலநாளங் கடிக்கோர் நகரமு மாதிற்கு நன்கிசைந்ததாளங்கள் கொண்டுங் குழல்கொண்டு மியாழ்கொண்டுந் தாமங்ஙனேவேடங்கள் கொண்டும் விசும்புசெல் வாரவர் வீரட்டரே.
Open this verse