Verse 2812 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirumookkeeccharam · Verse 10 of 11
திருமூக்கீச்சரம் · 2.120.10
வெண்புலான்மார் பிடுதுகிலினர் வெற்றரை யுழல்பவர்உண்பினாலே யுரைப்பார் மொழியூனம தாக்கினான்ஒண்புலால்வேல் மிகவல்லவ னோங்கெழில் கிள்ளிசேர்பண்பின்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே.