Ilambakam 8 · Seevaka Sindhamani · Thirutthakka Thevar
Vimalaiyar Ilambakam
சீவக சிந்தாமணி 8 · விமலையார் இலம்பகம்
1889. முருகுகொப் புளிக்குங் கண்ணிமுறிமிடை படலை மாலைக்குருதிகொப் புளிக்கும் வேலான்கூந்தன்மா விவர்ந்து செல்லவுருவவெஞ் சிலையி னாற்குத்தம்பியிஃ துரைக்கு மொண்பொற்பருகுபைங் கழலி னாருட்பதுமுகன் கேட்க வென்றே.1890. விழுமணி மாசு மூழ்கிக்கிடந்ததிவ் வுலகம் விற்பக்கழுவினீர் பொதிந்து சிக்கக்கதிரொளி மறையக் காப்பிற்றழுவினீ ருலக மெல்லாந்தாமரை யுறையுஞ் செய்யாள்வழுவினார் தம்மைப் புல்லாள்ட்வாழ்கநுங் கண்ணி மாதோ.1891. தொழுததங் கையி னுள்ளுந்துறுமுடி யகத்துஞ் சோரவழுதகண் ணீரி னுள்ளுமணிகலத் தகத்து மாய்ந்துபழுதுகண் ணரிந்து கொல்லும்படையுட னெடுங்கும் பற்றாதொழிகயார் கண்ணுந் தேற்றந்தெளிகுற்றார் விளிகுற் றாரே.1892. தோய்தகை மகளிர்த் தோயின்மெய்யணி நீக்கித் தூய்நீராய்முது மகளிர் தம்மாலரிறபத் திமிரி யாட்டிவேய்நிறத் தோளி னார்க்குவெண்டுகின் மாலை சாந்தந்தானல கலங்கள் சேர்த்தித்தடமுலை தோய்க வென்றான்.1893. வண்ணப்பூ மாலை சாந்தம்வாலணி கலன்க ளாடைகண்முகத் துறுத்தித் தூய்மைகண்டலாற் கொள்ள வேண்டாவண்ணலம் புள்ளோ டல்லாவாயிரம் பேடைச் சேவலுண்ணுநீ ரமிழ்தங் காக்கயூகமோ டாய்க வென்றான்.1894. அஞ்சனக் கோலி னாற்றாநாகமோ ரருவிக் குன்றிற்குஞ்சாம் புலம்பி வீழக்கூர்நுதி யெயிற்றிற் கொல்லும்பஞ்சியின் மெல்லி தேனும்பகைசிறி தென்ன வேண்டாவஞ்சித்தற் காத்தல் வேண்டுமரும்பொரு ளாக வென்றான்.1895. பொருந்தலாற் பல்லி போன்றும்போற்றலாற் றாய ரொத்துமருந்தவர் போன்று காத்துமடங்கலா லாமை போன்றுந்திருந்துவேற் றெவ்வர் போலத்தீதற வெறிந்து மின்பமருந்தினான் மனைவி யொத்துமதலையைக் காமி னென்றான்.1896. பூந்துகின் மாலை சாந்தம் புனைகலம் பஞ்ச வாசமாய்ந்தளந் தியற்றப் பட்ட படிசினீ ரின்ன வெல்லாமாந்தரின் மடங்க லாற்றற் பதுமுகன் காக்க வென்றாங்கேந்துபூண் மார்ப னேவ வின்னண மியற்றி னானே.1897. சிறுகண்யா னையினினஞ் சோந்துசே வகங்கொளத்துறுகலென் றுணர்கலாத் துள்ளிமந் திம்மகநறியசந் தின்றுணி நாறவெந் தனகள்கொண்டெறியவெள் கிம்மயிர்க் கவரிமா விரியுமே.1898. புகழ்வரைச் சென்னிமேற் பூசையிற் பெரியனபவழமே யனையன பன்மயிர்ப் பேரெலியகழுமிங் குலிகமஞ் சனவரைச் சொரிவனகவழயா னையினுதற் றவழுங்கச் சொத்தவே.1899. அண்ணலங் குன்றின்மேல் வருடைபாய்ந் துழக்கலினொண்மணி பலவுடைந் தொருங்கவை தூளியாய்விண்ணுளு வுண்டென வீழுமா நிலமிசைக்கண்ணகன் மரமெலாங் கற்பக மொத்தவே.1900. மானிடம் பழுத்தன கிலுத்தமற் றவற்றியற்பான்முரட் பயம்பிடைப் பனைமடிந் தனையனகானிடைப் பாந்தள்கண் படுப்பன துயிலெழவூனுடைப் பொன்முழை யாளிநின் றுலம்புமே.1901. சாரலந் திமிசிடைச் சந்தனத் தழைவயினீரதீம் பூமரம் நிரந்ததக் கோலமுமேரில வங்கமும் மின்கருப் பூரமும்மோருநா விகலந் தோசனை கமழுமே.1902. மைந்தரைப் பார்ப்பன மாமகண் மாக்குழாஞ்சந்தன மேய்வன தவழ்மதக் களிற்றினமந்தழைக் காடெலாந் திளைப்பவா மானினஞ்சிந்தவால் வெடிப்பன சிங்கமெங் கும்முள.1903. வருக்கையின் கனிதொறும் வானரம் பாய்ந்துராய்ப்பொருப்பெலாம் பொன்கிடந் தொழுகிமேற் றிருவில்வீழ்ந்தொருக்குலாய் நிலமிசை மிளிர்வதொத் தொளிர்மணிதிருக்கிள ரொளிகுலாய் வானகஞ் செகுக்குமே.1904. வீழ்பனிப் பாறைக ணெறியெலாம் வெவ்வெயிற்போழ்தலின் வெண்ணெய்போற் பொழிந்துமட் டொழுகுவதாழ்முகில் சூழ்பொழிற் சந்தனக் காற்றசைந்தாழ்துயர் செய்யுமவ் வருவரைச் சாரலே.1905. கூகையுங் கோட்டமுங் குங்கும மும்பரந்தேகலா காநிலத் தல்கிவிட் டெழுந்துபோய்த்தோகையு மன்னமுந் தொக்குட னார்ப்பதோர்நாகநன் காவினு ணயந்துவிட் டார்களே.1906. பூத்தகி றவழும் போர்வைபூசுசாந் தாற்றி பொன்னூற்கோத்துநீர் பிலிற்றுங் காந்தங்குங்கும வைரப் பொற்கோய்சாத்துறி பவழக் கன்னல்சந்தன வால வட்டநீத்தவ ரிடத்து நாற்றிநிழன்மணி யுலகஞ் செய்தார்.1907. நித்தில முலையி னார்த நெடுங்கணா னோக்கப் பெற்றுங்கைத்தலந் தீண்டப் பெற்றுங் கனிந்தன மலர்ந்த காண்கவைத்தலர் கொய்யத் தாழ்ந்த மரமுயி ரில்லை யென்பார்பித்தல ராயிற் பேய்க ளென்றவாற் பேச லாமோ.1908. பொறிமயி லிழியும் பொற்றார்முருகனிற் பொலிந்து மாவினெறிமையி னிழிந்து மைந்தன்மணிக்கைமத் திகையை நீக்கிவெறுமையி னவரைப் போக்கிவெள்ளிடைப் படாத நீராலறிமயி லகவுங் கோயிலடிகளைச் செவ்வி யென்றான்.1909. எல்லிருட் கனவிற் கண்டேன் கண்ணிட னாடு மின்னேபல்லியும் பட்ட பாங்கர் வருங்கொலோ நம்பி யென்றுசொல்லின டேவி நிற்பப் பதுமுகன் றொழுது சோந்துநல்லடி பணிந்து நம்பி வந்தன னடிக ளென்றான்.1910. எங்கணா னைய னென்றாட்கடியன்யா னடிக ளென்னாப்பொங்கிவில் லுமிழ்ந்து மின்னும்புனைமணிக் கடக மார்ந்ததங்கொளித் தடக்கை கூப்பித்தொழுதடி தழுவி வீழ்ந்தானங்கிரண் டற்பு முன்னீரலைகடல் கலந்த தொத்தார்.1911. திருவடி தொழுது வீழ்ந்தசிறுவனைக் கண்ட போழ்தேவருபனி சுமந்து வாட்கண்வ னமுலை பொழிந்த தீம்பான்முருகுடை மார்பிற் பாய்ந்துமுழுமெயு நனைப்ப மாதர்வருகவென் களிறென் றேத்திவாங்குபு தழுவிக் கொண்டாள்.1912. காளையாம் பருவ மோராள் காதன்மீக் கூர்த லாலேவாளையா நெடிய கண்ணான் மகனைமார் பொடுங்கப் புல்லித்தாளையா முன்பு செய்த தவத்தது விளைவி லாதேன்றோளையாத் தீர்ந்த தென்றா டொழுதகு தெய்வ மன்னாள்.1913. வாட்டிறற் குருசி றன்னை வாளம ரகத்து ணீத்துக்காட்டகத் தும்மை நீத்த கயத்தியேற் காண வந்தீர்சேட்டிளம் பருதி மார்பிற் சீவக சாமி யீரேயூட்டரக் குண்ட செந்தா மரையடி நோவ வென்றாள்.1914. கெடலருங் குரைய கொற்றங்கெடப்பிறந் ததுவு மன்றிநடலையு ளடிகள் வைகநட்புடை யவர்க ணையவிடைமகன் கொன்ற வின்னாமரத்தினேன் றந்த துன்பக்கடலகத் தழுந்த வேண்டாகளைகவிக் கவலை யென்றான்.1915. யானல னௌவை யாவாள்சுநந்தையே யையற் கென்றுங்கோனலன் றந்தை கந்துக்கடனெனக் குணத்தின் மிக்கபானிலத் துறையுந் தீந்தேனனையவா யமிர்த மூறமானலங் கொண்ட நோக்கிமகன்மன மகிழ்ச் சொன்னாள்.1916. எனக்குயிர்ச் சிறுவ னாவானந்தனே யைய னல்லைவனப்புடைக் குமர னிங்கேவருகென மருங்கு சோத்திப்புனக்கொடி மாலையோடுபூங்குழ றிருத்திப் போற்றாரினத்திடை யேற னானுக்கின்னளி விருந்து செய்தாள்.1917. சிறகராற் பார்ப்புப் புல்லித் திருமயி லிருந்த தேபோலிறைவிதன் சிறுவர் தம்மை யிருகையி னாலும் புல்லிமுறைமுறை குமரர்க் கெல்லா மொழியமை முகமன் கூறியறுசுவை யமிர்த மூட்டி யறுபகல் கழிந்த பின்னாள்.1918. மரவ நாக மணங்கமழ் சண்பகங்குரவங் கோங்கங் குடம்புரை காய்வழைவிரவு பூம்பொழில் வேறிருந் தாய்பொருளுருவ மாத ருரைக்குமி தென்பவே.1919. நலிவில் குன்றொடு காடுறை நன்பொருட்புலிய னார்மகட் கோடலும் பூமிமேல்வலியின் மிக்கவர் தம்மகட் கோடலுநிலைகொண் மன்னர் வழக்கென நோபவே.1920. நீதி யாலறத் தந்நிதி யீட்டுதலாதி யாய வரும்பகை நாட்டுதன்மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல்பேது செய்து பிளந்திடல் பெட்டதே.1921. ஒற்றர்தங்களை யொற்றரி னாய்தலுங்கற்ற மாந்தரைக் கண்ணெனக் கோடலுஞ்சுற்றஞ் சூழ்ந்து பெருக்கலுஞ் சூதரோகொற்றங் கொள்குறிக் கொற்றவற் கென்பவே.1922. வென்றி யாக்கலு மேதக வாக்கலுங்குன்றி னார்களைக் குன்றென வாக்கலுமன்றி யுங்கல்வி யோடழ காக்கலும்பொன்றுஞ் சாகத்தி னாய்பொருள் செய்யுமே.1923. பொன்னி னாகும் பொருபடை யப்படைதன்னி னாகுந் தரணி தரணியிற்பின்னை யாகும் பெரும்பொரு ளப்பொருள்துன்னுங் காலைத்துன் னாதன வில்லையே.1924. நிலத்தி னீங்கி நிதியினுந் தேய்ந்துநங்குலத்திற் குன்றிய கொள்கைய மல்லதூஉங்கலைக்க ணாளரு மிங்கில்லை காளைநீவலித்த தென்னென வள்ளலுங் கூறுவான்.1925. எரியொடு நிகர்க்கு மாற்றலிடிக்குரற் சிங்க மாங்கோர்நரியொடு பொருவ தென்றாற்சூழ்ச்சிநற் றுணையொ டென்னாம்பரிவொடு கவல வேண்டாபாம்பவன் கலுழ னாகுஞ்சொரிமதுச் சுரும்புண் கண்ணிச்சூழ்கழ னந்த னென்றான்.1926. கெலுழனோ நந்த னென்னாக்கிளரொளி வனப்பு னானைக்கலுழத்தன் கையாற் றீண்டிக்காதலிற் களித்து நோக்கிவலிகெழு வயிரத் தூண்போற்றிரண்டுநீண் டமைந்த திண்டோள்கலிகெழு நிலத்தைக் காவாதொழியுமோ காளைக் கென்றாள்.1927. இடத்தொடு பொழுது நாடியெவ்வினைக் கண்ணு மஞ்சார்மடப்பட லின்றிச் சூழமதிவல்லார்க் கரிய துண்டோகடத்திடைக் காக்கை யொன்றேயாயிரங் கோடி கூகையிடத்திடை யழுங்கச் சென்றாங்கின்னுயிர் செகுத்த தன்றே.1928. இழைபொறை யாற்ற கில்லாதிட்டிடை தளர நின்றகுழைநிற முகத்தி னார்போற்குறித்ததே துணிந்து செய்யார்முழையுறை சிங்கம் பொங்கிமுழங்கிமேற் பாய்ந்து மைதோய்வழையுறை வனத்து வன்கணரிவலைப் பட்ட தன்றே.1929. ஊழிவாய்த் தீயொ டொப்பான்பதுமுக னுரைக்கு மொன்னாராழிவாய்த் துஞ்ச மற்றெம்மாற்றலா னெருங்கி வென்றுமாழைநீ ணிதியந் துஞ்சுமாநிலக் கிழமை யெய்தும்பாழியாற் பிறரை வேண்டேம்பணிப்பதே பாணி யென்றான்.1930. பொருவருங் குரைய மைந்தர் பொம்மென வுரறி மற்றித்திருவிருந் தகன்ற மார்பன் சேவடி சோந்த யாங்களெரியிருந் தயரு நீர்மை யிருங்கதி ரேற்ற தெவ்வர்வருபனி யிருளு மாக மதிக்க வெம் மடிக ளென்றார்.1931. கார்தோன்ற வேம லருமுல்லை கமலம் வெய்யோன்றோதோன்ற வேம லருஞ்செம்மனின் மாமன் மற்றுன்சீர்தோன்ற வேம லருஞ்சென்றவன் சொல்லி னோடேபார்தோன்ற நின்ற பகையைச் செறற் பாலையென்றாள்.1932. நன்றப் பொருளே வலித்தேன்மற் றடிக ணாளைச்சென்றப் பதியு ளெமர்க்கேயேன துண்மை காட்டியன்றைப் பகலே யடியேன்வந் தடைவ னீமேவென்றிக் களிற்று னுழைச்செல்வது வேண்டு மென்றான்.1933. வேற்றைவந் தன்ன நுதிவெம்பாற் கான முன்னிநூற்றைவ ரோடு நடந்தாணுதி வல்வின் மைந்தன்காற்றிற் பரிக்குங் கலிமான் மிசைக் காவ லோம்பியாற்றற் கமைந்த படையோடதர் முன்னி னானே.1934. மன்றற் கிடனா மணிமால்வரை மார்பன் வான்கணின்றெத் திசையு மருவிப்புன னீத்த மோவாக்குன்றுங் குளிர்நீர்த் தடஞ்சூழ்ந்தன கோல யாறுஞ்சென்றப் பழனப் படப்பைப்புன னாடு சேர்ந்தான்.1935. காவின்மேற் கடிமலர் தெகிழ்ந்த நாற்றமும்வாவியு ளினமல ருயிர்த்த வாசமும்பூவிரி கோதையர் புனைந்த சாந்தமுமேவலாற் கெதிரெதிர் விருந்து செய்தவே.1936. கரும்பின்மேற் றொடுத்ததேன் கலிகொ டாமரைச்சுரும்பின்வாய்த் துளித்தலிற் றுவைத்த வண்டொடுதிருந்தியாழ் முரல்வதோர் தெய்வப் பூம்பொழிற்பொருந்தினான் புனைமணிப் பொன்செய் பூணினான்.1937. பொறைவிலங் குயிர்த்தன பொன்செய் மாமணிச்செறிகழ லிளைஞருஞ் செல்ல னீங்கினார்நறைவிரி கோதையர் நாம வேலினாற்கறுசுவை நால்வகை யமுத மாக்கினார்.1938. கட்டியி னரிசியும் புழுக்குங் காணமும்புட்டில்வாய்ச் செறித்தனர் புரவிக் கல்லவுநெட்டிருங் கரும்பொடு செந்நென் மேய்ந்துநீர்பட்டன வளநிழற் பரிவு தீர்ந்தவே.1939. குழிமதுக் குவளையங் கண்ணி வார்குழற்பிழிமதுக் கோதையார் பேண வின்னமுதழிமதக் களிறனா னயின்ற பின்னரேகழிமலர் விழித்தகண் கமலம் பட்டவே.1940. எரிமணி யிமைத்தன வெழுந்த தீம்புகைபுரிநரம் பிரங்கின புகன்ற தீங்குழறிருமணி முழவமுஞ் செம்பொற் பாண்டிலுமருமணி யின்குர லரவஞ் செய்தவே.1941. தெளித்தவின் முறுவலம் பவளஞ் செற்றவாய்க்களிக்கயன் மழைக்கணார் காமங் காழ்கொளீஇவிளித்தவின் னமிர்துறழ் கீதம் வேனலானளித்தபின் னமளியஞ் சேக்கை யெய்தினான்.1942. தீங்கரும் பனுக்கிய திருந்து தோள்களும்வீங்கெழிற் றோள்களு மிடைந்து வெம்முலைபூங்குளிர் தாரொடு பொருது பொன்னுகவீங்கனங் கனையிரு ளெல்லை நீந்தினான்.1943. கனைகதிர்க் கடவுள் கண் விழித்த காலையேநனைமலர்த் தாமரை நக்க வண்கையாற்புனைகதிர் திருமுகங் கழுவிப் பூமழைமுனைவனுக் கிறைஞ்சினான் முருக வேளனான்.1944. நாட்கடன் கழித்தபி னாம வேலினான்வாட்கடி யெழினகர் வண்மை காணியதோட்பொலி மணிவளைத் தொய்யின் மாதரார்வேட்பதோர் வடிவொடு விரைவி னெய்தினான்.1945. அலத்தகக் கொழுங்களி யிழுக்கி யஞ்சொலார்புலத்தலிற் களைந்தபூ ணிடறிப் பொன்னிதழ்நிலத்துகு மாலைகா றொடர்ந்து நீணகர்செலக்குறை படாததோர் செல்வ மிக்கதே.1946. கத்தி கைக்கழு நீர்கமழ் கோதையர்பத்தி யிற்படு சாந்தணி வெம்முலைசித்தி யிற்படர் சிந்தையி னாரையுமித்தி சைப்படர் வித்தி நீரவே.1947. வஞ்சி வாட்டிய வாண்மி னுசுப்பினார்பஞ்சி யூட்டிய பாடகச் சீறடிகுஞ்சி சூட்டிய மைந்தர் குழாமலாலிஞ்சி வட்ட மிடம்பிற் தில்லையே1948. மின்னி னீள்கடம் பின்னெடு வேள்கொலோமன்னு மைங்கணை வார்சிலை மைந்தனோவென்ன னோவறி யோமுரை யீரெனாப்பொன்னங் கொம்பனை யார்புலம் பெய்தினார்.1949. விண்ண கத்திளை யானன்ன மெய்ப்பொறிபண்ண லைக்கழி மீன்கவர் புள்ளெனவண்ண வார்குழ லேழையர் வாணெடுங்கண்ணெ லாங்கவர்ந் துண்டிடு கின்றவே.1950. புலாத்தலைத் திகழும் வைவேற்பூங்கழற் காலி னானைநிலாத்தலைத் திகழும் பைம்பூணிழன்மணி வடத்தோ டேந்திக்குலாய்த்தலைக் கிடந்து மின்னுங்குவிமுலை பாய வெய்தாய்க்கலாய்த்தொலைப் பருகு வார்போற்கன்னியர் துவன்றி னாரே.1951. வேனெடுங் கண்க ளம்பாவிற்படை சாற்றி யெங்குந்தேனெடுங் கோதை நல்லார்மைந்தனைத் தெருவி லெய்யமானெடு மழைக்க ணோக்கிவானவர் மகளு மொப்பாள்பானெடுந் தீஞ்சொ லாளோர்பாவைபந் தாடு கின்றாள்.1952. குழன்மலிந்த கோதைமாலை பொங்கவெங் கதிர்ம்முலைநிழன்மலிந்த நோவடந்நி ழற்படப்ப டைத்தரவெழின்மணிக்கு ழைவில்வீச வின்பொனோலை மின்செயவழன்மணிக்க லாபமஞ்சி லம்பொடார்ப்ப வாடுமே.1953. அங்கையந்த லத்தகத்த வைந்துபந்த மர்ந்தவைமங்கையாட மாலைசூழும் வண்டுபோல வந்துடன்பொங்கிமீதெ ழுந்துபோய்ப்பி றழ்ந்துபாய்த லின்றியேசெங்கயற்கண் புருவந்தம்மு ளுருவஞ்செய்யத் திரியுமே.1954. மாலையுட்க ரந்தபந்து வந்துகைத்த லத்தவாமேலநாறி ருங்குழற்பு றத்தவாண்மு கத்தவாநூலினோநு சுப்புநோவ வுச்சிமாலை யுள்ளவாமேலெழுந்த மீநிலத்த விரலகைய வாகுமே.1955. கொண்டுநீங்கல் கோதைவேய்தல்குங்குமம்ம ணிந்துராயெண்டிசையு மேணியேற்றிலங்கநிற்றல் பத்தியின்மணிடி லம்வ ரப்புடைத்தன்மயிலிற்பொங்கி யின்னணம்வண்டுந்தேனும் பாடமாதர்பந்துமைந்துற் றாடுமே.1956. பந்துமைந்துற் றாடுவாள்ப ணைம்முலையிற் குங்குமஞ்சுந்தரப்பொ டிதெளித்த செம்பொற்சுண்ணம் வாணுதற்றந்துசுட்டி யிட்டசாந்தம் வேரின்வார்ந்தி டைம்முலையிந்திரதி ருவினெக்கு ருகியென்ன வீழ்ந்தவே.1957. நன்மணிச்சி லம்பினோடுகிண்கிணிந்ந கந்நகும்மின்மலர்ந்த முல்லைமாலைநக்கிமிக்கி றந்தெழுந்துபொன்மலர்ந்த கோதைபந்துபொங்கியொன்று போந்துபாய்ந்துமின்மலர்ந்த வேலினான்முன்வீதிபுக்கு வீழ்ந்ததே.1958. வீழ்ந்தபந்தின் மேல்விரைந்துமின்னினுண் ணுசுப்பினாள்சூழ்ந்தகாசு தோன்றவந்துகின்னெகிழ்ந்து பூங்குழறாழ்ந்துகோதை பொங்கிவீழ்ந்துவெம்முலைக டைவரப்போழ்ந்தகன்ற கண்ணிவந்துபூங்கொடியி னோக்கினாள்.1959. மந்தார மாலை மலர்வேய்ந்து மகிழ்ந்து தீந்தேன்கந்தாரஞ் செய்து களிவண்டு முரன்று பாடப்பந்தார்வஞ் செய்து குவளைக்கண் பரப்பி நின்றாள்செந்தாம ரைமேற் றிருவின்னுரு வெய்தி நின்றாள்.1960. நீர்தங்கு திங்கண் மணிநீணிலந் தன்னு ளோங்கிச்சீர்தங்கு கங்கைத் திருநீர்த்தண் டுவலை மாந்திக்கார்தங்கி நின்ற கொடிகாளையைக் காண்ட லோடுபீர்தங்கிப் பெய்யா மலரிற்பிறி தாயி னாளே.1961. பெண்பா லவர்கட் கணியாய்ப்பிரி யாத நாணுந்திண்பா னிறையுந் திருமாமையுஞ் சோந்த சாயல்கண்பாற் கவினும் வளையுங்கவர்ந்த திட்ட கள்வன்மண்பா லிழிந்த மலரைங்கணை மைந்த னென்றாள்.1962. என்றா ணினைந்தா ளிதுபோலுமிவ் வேட்கை வண்ணஞ்சென்றே படினுஞ் சிறந்தார்க்கு முரைக்க லாவதன்றா யரிதா யகத்தேசுட் டுருக்கும் வெந்தீயொன்றே யுலகத் துறுநோய்மருந் தில்ல தென்றாள்.1963. நிறையாது மில்லை நெருப்பிற்சுடுங் காம முண்டேற்குறையா நிறையி னொருகுன்றியுங் காம மில்லைபறையா யறையும் பசப்பென்று பகர்ந்து வாடியறைவாய்க் கடல்போ லகன்காம மலைப்ப நின்றாள்.1964. நெஞ்சங் கலங்கி நிறையாற்றுப் படுத்து நின்றாளஞ்செங் கழுநீ ரலாந்தம்மதி வாண்மு கத்தேவஞ்சம் வழங்கா தவன்கண்களி னோக்க மாதோதஞ்சம் வழங்கித் தலைக்கொண்டது காம வெந்தீ.1965. பூவுண்ட கண்ணாள் புருவச்சிலை கோலி யெய்யவேவுண்ட நெஞ்சிற் கிடுபுண்மருந் தென்கொ லென்னாமாவுண்ட நோக்கின் மடவாளை மறித்து நோக்கிக்கோவுண்ட வேலான் குழைந்தாற்றல னாயி னானே.1966. காமக் கடுநோய்க் கனல்சூழ்ந்துடம் பென்னு மற்றிவ்வீமத்தி னோடு முடனேசுட வேக லாற்றான்றூமத்தி னார்ந்த துகிலேந்திய வல்கு றாதைபூமொய்த் திருந்த கடைமேற்புலம் புற்றி ருந்தான்.1967. நாவிநோய் செய்த நறுங்குழலா ணாணீலக்காவிநோய் செய்த கருங்கயற்கட் பூங்கொடியென்னாவிநோய் செய்த வணங்கென் றறியாதேன்மேவிநோய் தீர வினாத்தருவா ரில்லையே.1968. தெண்ணீர்ப் பனிக்கயத்து மட்டவிழ்ந்த தேங்குவளைக்கண்ணீர்மை காட்டிக் கடல்போ லகன்றவென்னுண்ணீர்மை யெல்லா மொருநோக்கி னிற்கவர்ந்தபெண்ணீர்மை மேனாட் பிறந்து மறியுமோ.1969. கருங்குழலுஞ் செவ்வாயுங் கண்மலருங் காதுமரும்பொழுகு பூண்முலையு மாருயிர்க்கே கூற்றம்விருந்தினராய் வந்தாரை வெற்றுடலா நோக்கும்பெருந்திருவி யார்மகள் கொல் பேரியா தாங்கொல்லோ.1970. வாருடுத்த வெம்முலையவண்டார்பூங் கோதையைப்போகொடுத்தார் பெண்ணென்றார்கூற்றமே யென்றிட்டாற்றாருடுத்த நீண்மார்பர்தம்முயிர்தாம் வேண்டுபவேனீருடுத்த விந்நகரைநீத்திட டொழியாரோ.1971. பைங்கண் மணிமகர குண்டலமும் பைந்தோடுந்திங்கண் முகத்திலங்க்ச் செவ்வா யெயிறிலங்கக்கொங்குண் குழறாழக் கோட்டெருத்தஞ் செய்தநோக்கெங்கெங்கே நோக்கினு மங்கங்கே தோன்றுமே.1972. வாளார் மதிமுகத்த வாளோ வடுப்பிளவோதாளார் கழுநீரோ நீலமோ தாமரையோநீள்வேலோ வம்போ கயலோ நெடுங்கண்ணோகோளார்ந்த கூற்றமோ கொல்வான் றொடங்கினவே.1973. என்றாங்கொன் மாதர் நலமெய்துவ தென்று சிந்தித்தொன்றார்க் கடந்தான் புலம்புட்கொண் டிருத்த லோடுமன்றே யமைந்த பசும்பொன்னட ராறு கோடிகுன்றாமல் விற்றான் குளிர்சாகர தத்த னென்பான்.1974. திருமல்க வந்த திருவேயெனச் சோந்து நாய்கன்செருமல்கு வேலாய்க் கிடமாலிது வென்று செப்பவரிமல்கி வண்டுண் டறைமாமலர்க் கண்ணி மைந்தனெரிமல்கு செம்பொ னிலமாமனொ டேறி னானே.1975. நம்பன் சிறிதே யிடைதந்திது கேட்க நாளுமம்பொன் னகரு ளமைந்தேன்மற் றெனக்க மைந்தாள்கம்பம் மிலாதாள் கமலைக்கு விமலை யென்பாள்செம்பொன் வியக்கு நிறத்தாடிரு வன்ன நீராள்.1976. பூம்பாவை வந்து பிறந்தாளப்பிறந்த போழ்தேயாம்பால வெல்லா மறிவாரன்றெழுதி யிட்டார்தும்பியாது மில்லாக் குளம்போன்றதென்றோமில் பண்டங்கூம்பாத செல்வக் கொடியேயிதுகேண்மோ வென்றான்.1977. மங்கைக் குரியான் கடையேறும்வந் தேற லோடும்வங்கந் நிதிய முடன்வீழுமற் றன்றி வீழாதெங்குந் தனக்கு நிகரில்லவ னேற்ற மார்பநங்கைக் கியன்ற நறும்பூவணைப் பள்ளி யென்றான்.1978. ஏழாண்டின் மேலு மிரண்டாண்டிரண் டெய்தி நின்றாள்வீழா நிதியு முடன்வீழ்ந்தது வில்வ லாய்க்கேயூழாயிற் றொல்கு நுசுப்பஃக வுருத்து வீங்கிச்சூழாரம் வைத்த முலையாணலஞ் சூழ்க வென்றான்.1979. ஏற்ற கைத்தொடி வீழ்ந்தென வேந்தலைத்தேற்றி னான்றிரு மாநலஞ் செவ்வனேதோற்ற மாதருந் தோன்றலைக் காண்டலுமாற்றி னாடன தாவியுந் தாங்கினாள்.1980. அம்பொற் கொம்பனை யாளையும் வார்கழற்செம்பொற் குன்றனை யானையுஞ் சீர்பெறப்பைம்பொ னீணகர்ப் பல்லிய மார்த்தெழவிம்ப ரில்லாதோ ரின்ப மியற்றினார்.1981. கட்டி லேறிய காமரு காளையும்மட்டு வாயவிழ் மாமலர்க் கோதையும்விட்டு நீங்குத லின்மையின் வீவிலாரொட்டி யீருடம் போருயி ராயினார்.1982. நிலவு வெண்கதிர் நீர்மைய பூந்துகில்கலவங் கண்புதை யாது கனற்றலினுலக மூன்று முறுவிலைத் தென்பவேபுலவு வேற்கண்ணி னாண்முலைப் போகமே.1983. தேன வாங்கமழ் கண்ணியுந் தெவ்வர்தமூன வாங்கதிர் வேலுறு காளையுங்கான வாங்கடி நாறுமென் பள்ளிமேல்வான வாம்வகை யால்வைகி னார்களே.1984. வெண்மதி நெற்றி தேய்த்துவிழுத்தழும் பிருப்ப நீண்டவண்ணனன் மாடத் தங்கணகிற்புகை யமளி யேறிப்பண்ணமை மகர வீணைநரம்புரீஇப் பாவை பாடமண்ணமை முழவுத் தோளான்மகிழ்ச்சியுண் மயங்கி னானே.1985. இன்னரிச் சிலம்பொ டேங்கிக்கிண்கிணி யிகலி யார்ப்பப்பொன்னரி மாலை தாழப்பூஞ்சிகை யவிழ்ந்து சோரமின்னிருங் கலாபம் வீங்கிமிளிர்ந்துகண் ணிரங்க வெம்பித்துன்னருங் களிகொள் காமக்கொழுங்கனி சுவைத்து விள்ளான்.1986. தொழித்துவண் டிமிருங் கோதைதுணைமுலை முள்கப் பூம்பட்டழித்துமட் டொழுகுந் தாரான்மணிவள்ளத் தாய்ந்த தேறலெழிற்பொலி மாதர்க் கேந்தவினிதினி னுகர்ந்து காமக்கொழித்திரை கடலுண் மூழ்கிக்கோதைகண் டுயின்ற வன்றே.1987. பாசிலை சுருட்டி மைந்தன்கொடுக்கிய பரந்து மின்னும்தூசுலா மல்கு றீண்டத்துயிற்கண்கள் விழித்த தோற்றம்வாசவான் குவளை மெல்லவாய்விடா நின்ற தொக்குமேசுவ தொன்று மில்லாவிணைவட முலையி னாட்கே.1988. கங்குற்பாற் புகுந்த கள்வனிவனெனக் கதுப்பிற் றாழ்ந்ததொங்கலான் முன்கை யாத்துச்சொல்லுநீ வந்த தென்னநங்கையான் பசித்து வந்தேனெப்பொரு ணயப்ப தென்றாட்கங்கலுழ் மேனி யாய்நின்னணிநல வமிழ்த மென்றான்.1989. செயிர்த்தவள் சிவந்து நோக்கிச்சீறடி சென்னி சோத்தியயிர்ப்பதென் பணிசெய் வேனுக்கருளிற்றுப் பொருள தென்னவுயிர்ப்பது மோம்பி யொன்றுமுரையலை யாகி மற்றிப்பயிர்ப்பில்பூம் பள்ளி வைகுபகட்டெழின் மார்ப வென்றாள்.1990. உள்ளிழு துடைய வெம்பியுற்பல வுருவு கொண்டவெள்ளியிற் புனைந்த கோலவிளக்கொளி வெறுவி தாகவள்ளிதழ்க் கோதை வல்லான்வட்டிகை நுதியின் வாங்கிப்பள்ளிமே லெழுதப் பட்டபாவைபோ லாயி னாளே.1991. மங்கையர் பண்ணிய மருத யாழ்குழனங்கையைப் பிரியுமிந் நம்பி யின்றெனவங்கதற் கிரங்கின வாரும் பேதுறக்கங்குல்போய் நாட்கடன் கழிந்த தென்பவே.1992. ஏந்துபூங் கோதைக டிருத்தி யேர்படச்சாந்துகொண் டிளமுலை யெழுதித் தையறன்காந்தள முகிழ்விரல் கையி னாற்பிடித்தாய்ந்தவட் கிதுசொலு மலங்கல் வேலினான்.1993. பூவினுட் டாழ்குழற் பொன்செ யேந்தல்குன்மாவினுட் டாழ்தளிர் மருட்டு மேனியாய்காவினுட் டோழரைக் கண்டு போதர்வேனேவினுட் டாழ்சிலை யெறிந்த கோலினே.1994. என்றவ னுரைத்தலு மெழுது கண்மலர்நின்றநீ ரிடைமணிப் பாவை நீந்தலின்மன்றனா றரிவையைத் தெருட்டி மாமணிக்குன்றனான் கொடியவள் குழைய வேகினான்.