Ilambakam 9 · Seevaka Sindhamani · Thirutthakka Thevar
Suramanjaraiyar Ilambakam
சீவக சிந்தாமணி 9 · சுரமஞ்சரியார் இலம்பகம்
1995. வாளி ரண்டு மாறு வைத்தபோன்ம ழைக்கண் மாதரார்நாளி ரண்டு சென்ற வென்றுநைய மொய்கொள் காவினுட்டோளி ரண்டு மன்ன தோழர்தோன்ற லைப்பு ணாந்தபின்றாளி ரண்டு மேத்தி நின்றுதைய னாமம் வேண்டினார்.1996. பாடுவண் டிருந்த வன்ன பல்கலை யகலல்குல்வீடு பெற்ற வரும் வீழும் வெம்மு லைவி மலையென்றாடு வான ணிந்த சீர ரம்பை யன்ன வாணுதலூடி னும்பு ணாந்த தொத்தி னியவளு ளாளரோ.1997. அம்பொ ரைந்து டைய்ய காமனைய்ய னென்ன வந்தணனம்பு நீர ரல்லர் நன்குரங்கு நீர ராயினுந்தங்கு ரவ்வர் தாங்கொ டுப்பினெஞ்சு நோந்து தாழ்வர்தாம்பொங்க ரவ்வ வல்கு லாரெனப்பு கன்று சொல்லினான்.1998. அற்று மன்று கன்னி யம்ம டந்தை மார ணிநலம்முற்றி னாரை நீடு வைப்பின் மூள்கும் வந்து பாவமுங்குற்ற மற்று மாகு மென்று கோதை சூழ்ந்து கூறினார்க்குற்ற டுத்த யாவு யிர்த்தொழிதல் யார்க்கு மொக்குமே.1999. மதுக்குடம் விரிந்தன மாலை யாரொடும்புதுக்கடி பொருந்துதி புக்க வூரெலாம்விதிக்கிடை காணலாம் வீதி மாநகர்மதிக்கிடை முகத்தியோர் மடந்தை யீண்டையாள்.2000. ஆடவர் தனதிடத் தருகு போகினுநாடிமற் றவர்பெயர் நயந்து கேட்பினும்வீடுவ லுயிரென வெகுளு மற்றவள்சேடியர் வழிபடச் செல்லுஞ் செல்வியே.2001. காமனே செல்லினுங் கனன்று காண்கிலாள்வேமெனக் குடம்பெனும் வேங்கொ டோளியையேமுறுத் தவணல நுகரி னெந்தையையாமெலா மநங்கமா திலக னென்றுமே.2002. தாசியர் முலைக டாக்கத்தளையவிழ்ந் துடைந்த தண்டார்வாசங்கொண் டிலங்கு முந்நூல்வலம்படக் கிடந்த மார்பபேசிய பெயரி னாளைப்பேதுறா தொழிவே னாகினாசுமன் பிலாத புன்பெண்கூந்தல்யா னணைவ லென்றான்.2003. வண்டுதேன் சிலைகொ ணாணாமாந்தளிர் மலர்க ளம்பாக்கொண்டவன் கோட்டந் தன்னுட்கொடியினைக் கொணர்ந்து நீலமுண்டது காற்றி யாண்பேரூட்டுவ லுருவக் காமன்கண்டபொற் படிவஞ் சார்ந்துகரந்திரு நாளை யென்றான்.2004. இழைக்கண் வெம்முலை யிட்டிடை யேந்தல்குன்மழைக்கண் மாதரை மாலுறு நோய்செய்வான்முழைக்கண் வாளரி யேறன மொய்ம்பினானுழைக்க ணாளர்க் குரைத்தெழுந் தானரோ.2005. சோருங் காரிகை யாள்சுர மஞ்சரியாரஞ் சூடிய வம்முலைப் பூந்தடந்தாகு மார்பமுந் தண்ணெனத் தோய்வதற்கோரு முள்ள முடன்றெழு கின்றதே.2006. கடைந்தபொற் செப்பெனக் கதிர்த்து வீங்கினவடஞ்சுமந் தெழுந்தன மாக்கண் வெம்முலைமடந்தைதன் முகத்தவென் மனத்தி னுள்ளனகுடங்கையி னெடியன குவளை யுண்கணே.2007. ஏத்தரு மல்லிகை மாலை யேந்தியபூத்தலைக் கருங்குழற் புரியி னாற்புறம்யாத்துவைத் தலைக்குமிவ் வகுளி லாணலங்காய்த்தியென் மனத்தினைக் கலக்கு கின்றதே.2008. சில்லரிக் கிண்கிணி சிலம்புஞ் சீறடிச்செல்விதன் றிருநலஞ் சேரும் வாயிறானல்லலங் கிழவனோ ரந்த ணாளனாய்ச்செல்லல்யான் றெளிதாக வுடைத்தென் றெண்ணினான்.2009. அணங்கர வுரித்ததோ லனைய மேனியன்வணங்குநோன் சிலையென வளைந்த யாக்கையன்பிணங்குநூன் மார்பினன் பெரிதொர் பொத்தகமுணர்ந்துமூப் பெழுதின தொப்பத் தோன்றினான்.2010. வெண்ணரை யுடம்பினன் விதிர்த்த புள்ளியனுண்ணவி ரறுலைய னொசிந்த நோக்கினன்கண்ணவிர் குடையினன் கைத்தண் டூன்றினன்பெண்ணலங் காதலிற் பேயு மாயினான்.2011. யாப்புடை யாழ்மிட றென்னுந் தோட்டியாற்றூப்புடை யவணலந் தொடக்கும் பாகனாய்மூப்பெனு முகபடாம் புதைந்து முற்றிழைகாப்புடை வளநகர் காளை யெய்தினான்.2012. தண்டுவலி யாகநனி தாழ்ந்துதளர்ந் தேங்கிக்கண்டுகடை காவலர்கள் கழறமுக நோக்கிப்பண்டையிளங் காலுவப்பன் பாலடிசி லிந்நாட்கண்டுநயந் தார்தருவ காதலிப்ப னென்றான்.2013. கையிற்றொழு தார்கழிய மூப்பிற்செவி கேளார்மையலவர் போலமனம் பிறந்தவகை சொன்னார்பையநடக் கென்றுபசிக் கிரங்கியவர் விடுத்தார்தொய்யின் முலை யவர்கள் கடைத் தோன்றனனி புக்கான்2014. கோதையொடு தாழ்ந்துகுழல் பொங்கிஞிமி றார்ப்பவோதமணி மாலையொடு பூண்பிறழ வோடியேதமிது போமினென வென்னுமுரை யீயானூதவுகு தன்மையினொ டொல்கியுற நின்றான்.2015. கச்சுவிசித் தியாத்தகதிர் முலையர்மணி யயில்வாணச்சுநுனை யம்புசிலை நடுங்கவுட னேந்தியச்சமுறுத் தமதுபுளித் தாங்குத்தம தீஞ்சொல்வெச்சென்றிடச் சொல்லிவிரி கோதையவர் சூழ்ந்தார்.2016. பாவமிது நோவவுரை யன்மின் முதுபார்ப்பார்சாவர்தொடி னேகடிது கண்டவகை வண்ணமோவியர்தம் பாவையினொ டொப்பரிய நங்கையேவல்வகை கண்டறிது மென்றுசிலர் சொன்னார்.2017. கையவளை மையகுழ லையரிய வாட்கணையுமிடை வெய்யமுலை நங்கையொரு பார்ப்பானுய்வதில னூழின்முது மூப்பினொடும் வந்தான்செய்வதுரை நொய்தினெனச் சேறுமெழு கென்றாள்.2018. மாலைபல தாழ்ந்துமதுப் பிலிற்றிமணங் கமழுங்கோலவகிற் றேய்வைகொழுஞ் சாந்தமுலை மெழுகிப்பாலைமணி யாழ்மழலை பசும்பொனிலத் திழிவாள்சோலைவரை மேலிழியுந் தோகைமயி லொத்தாள்.2019. சீறடிய கிண்கிணிசி லம்பொடுசி லம்பவேறுபடு மேகலைகண் மெல்லெனமி ழற்றச்சேறுபடு கோதைமிசை வண்டுதிசை பாடநாறுமலர்க் கொம்பர்நடை கற்பதென வந்தாள்.2020. வந்தவர வென்னையென வாட்கண்மட வாய்கேள்சிந்தைநலி கின்றதிரு நீர்க்குமரி யாடவந்திலதி னாயபய னென்னைமொழி கென்றாண்முந்திநலி கின்றமுது மூப்பொழிவு மென்றான்.2021. நறவிரிய நாறுகுழ லாள்பெரிது நக்குப்பிறருமுள ரோபெறுநர் பேணிமொழி கென்னத்துறையறிந்து சேர்ந்துதொழு தாடுநரி லென்றாற்கறிதிர்பிற நீவிரென வையமிலை யென்றான்.2022. செத்தமர மொய்த்தமழை யாற்பெயரு மென்பார்பித்தரிவ குற்றபிணி தீர்த்துமென வெண்ணியத்தமென மிக்கசுட ரங்கதிர்சு ருக்குமொய்த்தமணி மாடமிசை யத்தகவ டைந்தாள்.2023. வடிவமிது மூப்பளிது வார்பவள வல்லிக்கடிகைதுவர் வாய்கமலங் கண்ணொடடி வண்ணங்கொடிதுபசி கூர்ந்துளது கோல்வளையி னீரேயடிசில்கடி தாக்கியிவ ணேகொணர்மி னென்றாள்.2024. நானமுரைத் தாங்குநறு நீரவனை யாட்டிமேனிகிளர் வெண்டுகிலும் விழுப்பொனிய னூலும்பானலங்கொ டீங்கிளவி பவித்திரமு நல்கத்தானமர்ந்து தாங்கியமை தவிசின்மிசை யிருந்தான்.2025. திங்கணலஞ் சூழ்ந்ததிரு மீன்களெனச் செம்பொற்பொங்குகதிர் மின்னுபுகழ்க் கலங்கள்பல பரப்பியிங்குசுவை யின்னமுத மேந்தமிகு சான்றோனெங்குமிலை யின்னசுவை யென்றுடன யின்றான்.2026. தமிழ்தழிய சாயலவர் தங்குமலர்த் தூநீருமிழ்கரக மேந்தவுர வோனமர்ந்து பூசியமிழ்தனைய பஞ்சமுக வாசமமைத் தாய்ந்தகமழ்திரையுங் காட்டவவை கொண்டுகவு ளடுத்தான்.2027. வல்லதெனை யென்னமறை வல்லன்மட வாயானெல்லையெவ னென்னப்பொரு ளெய்திமுடி காறுஞ்சொல்லுமினு நீவிர்கற்ற காலமெனத் தேன்சோர்சில்லென்கிளிக் கிளவியது சிந்தையில னென்றான்.2028. இன்னவர்க ளில்லைநிலத் தென்றுவியந் தேத்தியன்னமன மென்னடையி னாளமர்ந்து நோக்கப்பின்னையிவள் போகுதிறம் பேசுமென வெண்ணித்தன்னஞ்சிறி தேதுயின்று தாழவவ ணக்காள்.2029. கோலமணி வாய்க்குவளை வாட்கண்மட வாளைச்சாலமுது மூப்புடைய சாமிமுக நோக்கிக்காலுமிக நோஞ்சிறிது கண்ணுந்துயில் குற்றேனேலங்கமழ் கோதையிதற் கென்செய்குரை யென்றான்.2030. மட்டுவிரி கோதைமது வார்குழலி னாடன்பட்டுநிணர் கட்டில்பரி வின்றியுறை கென்றாளிட்டவணை மேலினிது மெல்லெனவ சைந்தான்கட்டழல்செய் காமக்கட லைக்கடைய லுற்றான்.2031. காலையொடு தாழ்ந்துகதிர் பட்டதுக லங்கிமாலையொடு வந்துமதி தோன்றமகிழ் தோன்றிவேலனைய கண்ணியர்தம் வீழ்துணைவர் திண்டோள்கோலமுலை யாலெழுதக் கூடியதை யன்றே.2032. ஏந்துமலர்ச் சேக்கையகில் வளர்த்தவிடு புகையுமாய்ந்தமலர்க் கோதையமிர் துயிர்க்குநறும் புகையுங்கூந்தலகிற் புகையுந்துகிற் கொழுமெனறும் புகையும்வாய்ந்தவரை மழையினுயர் மாடத்தெழுந் தனவே.2033. ஆசிலடு பாலமிர்தஞ் சிறியவயின் றம்பூங்காசில்படி மாலைகல நொய்யமதி கவற்குந்தூசுநறுஞ் சாந்தினிய தோடிவைக டாங்கிமாசின்மட வார்கண்மணி வீணைநரம் புளர்ந்தார்.2034. பூஞ்சதங்கை மாலைபுகழ்க் குஞ்சிப்பொரு வில்லார்வீங்குதிர டோளுந்தட மார்பும்விரை மெழுகித்தீங்கரும்பு மென்றனைய வின்பவளச் செவ்வாய்த்தேங்கொளமிர் தார்ந்துசெழுந் தார்குழையச் சோந்தார்.2035. பொன்னறையு ளின்னமளிப் பூவணையின் மேலான்முன்னியதன் மன்றலது முந்துறமு டிப்பான்மன்னுமொரு கீதமது ரம்படமு ரன்றாற்கின்னமிர்த மாகவிளை யாருமது கேட்டார்.2036. மன்ம தன்ம ணிக்கு ரன்மருட்டு மென்று மால்கொள்வாரின்ன தின்றி யக்க ரின்னியக்க வந்த தென்றுதம்பின்னு முன்னு நோக்கு வார்பேது சால வெய்துவார்கன்னி தன்ம னத்தி ழைத்தகாளை நாமம் வாழ்த்துவார்.2037. கொம்பி னொத்தொ துங்கி யுங்குழங்கன் மாலை தாங்கியுமம்பி னொத்த கண்ணி னாரடிக்க லம்ம ரற்றவுந்நம்பி தந்த கீதமேந யந்துகாண வோடினார்வெம்பு வேட்கை வேனி லானின்வேற லானு மாயினான்.2038. தாம மாலை வார்கு ழற்ற டங்க ணார்க்கி டங்கழிகாம னன்ன காளை தன்க ருத்தொ டொத்த தாகலான்மாம லர்த்தெ ரியலான்ம ணிமிடற்றி டைக்கிடந்தசாம கீத மற்று மொன்று சாமி நன்கு பாடினான்.2039. கள்ள மூப்பி னந்த ணன்க னிந்தகீத வீதியேவள்ளி வென்ற நுண்ணி டைம ழைம லர்த்த டங்கணார்புள்ளு வம்ம திம்ம கன்புணர்த்த வோசை மேற்புகன்றுள்ளம் வைத்த மாம யிற்கு ழாத்தி னோடி யெய்தினார்.2040. இனிச்சிறி தெழுந்து வீங்கியிட்டிடை கோறு நாங்களெனக்கொறு கொறுப்ப போலுமிளமுலைப் பரவை யல்குற்கனிப்பொறை மலிந்த காமர்கற்பக மணிக்கொம் பொப்பாள்பனிப்பிறைப் பூணி னான்றன்பாண்வலைச் சென்று பட்டாள்.2041. அடிக்கல மரற்ற வல்குற்கலைகலந் தொலிப்ப வந்துமுடிப்பதென் பெரிது மூத்தேன்முற்றிழை யரிவை யென்னவடிக்கணா ணக்கு நாணித்தோழியை மறைந்து மின்னுக்கொடிக்குழாத் திடையோர் கோலக்குளிர்மணிக் கொம்பி னின்றாள்.2042. இளையவற் காணின் மன்னோவென்செய்வீர் நீவி ரென்னவிளைமதுக் கண்ணி மைந்தர்விளிகெனத் தோழி கூறமுலையெயிற் றிவளை யாருமொழிந்தன ரில்லை யென்றோவுளைவது பிறிது முண்டோவொண்டொடி மாதர்க் கென்றான்.2043. வாய்ந்தவிம் மாதர் சுண்ணஞ்சீவகன் பழித்த பின்றைக்காய்ந்தன ளென்று கூறக்காளைமற் றிவட்குத் தீயான்மாய்ந்தனன் போலு மென்னமாதரா ரொருங்கு வாழ்த்தியாய்ந்தன மைய னுய்ந்தானறிந்தன மதனை யென்றார்.2044. காலுற்ற காம வல்லிக்கொடியெனக் கலங்கி நங்கைமாலுற்று மயங்க யாங்கண்மடக்கிளி தூது விட்டேஞ்சேலுற்ற நெடுங்கட் செவ்வாய்த்தத்தைதன் செல்வங் கண்டேபாலுற்ற பவளச் செவ்வாய்த்தத்தையாற் பரிவு தீர்ந்தேம்.2045. அன்பொட்டி யெமக்கோர் கீதம்பாடுமி னடித்தி யாருமுன்பட்ட தொழிந்து நுங்கண்மூகவியர் முனிவு தீர்ந்தார்பொன்றெட்டேம் யாமு நும்மைப்போகொட்டோம் பாடல் கேளாதென்பட்டு விடினு மென்றாரிலங்குபூங் கொம்பொ டொப்பார்.2046. பாடுதும் பாவை பொற்பேபற்றிமற் றெமக்கு நல்கினாடமைத் தோளி னீரஃதொட்டுமேற் கேண்மி னென்னநாடியார் பேயைக் காண்பார்நங்கைகா ளிதுவு மாமேயாடுவ தொன்று மன்றிவ்வாண்மக னுரைப்ப தென்றார்.2047. பட்டுலாய்க் கிடந்த செம்பொன்பவளமோ டிமைக்கு மல்குலொட்டினா ளதனை யோரோதுலம்பொரு தோளி னானும்பட்டவா ணுதலி னாய்க்குப்பாடுவல் காமன் றந்ததொட்டிமை யுடைய வீணைச்செவிச்சுமை யமிர்த மென்றான்.2048. வயிரவில் லுமிலும் பைம்பூண்வனமுலை மகளிர் தம்முளுயிர்பெற வெழுதப் பட்டவோலியப் பாவை யொப்பாள்செயிரில்வாண் முகத்தை நோக்கித்தேன்பொதிந் தமுத மூறப்பயிரிலா நரம்பிற் கீதம்பாடிய தொடங்கி னானே.2049. தொடித்தோள் வளைநெகிழத் தொய்யின் முலைமேல்வடிக்கேழ் மலர்நெடுங்கண் வார்புயலுங் காலும்வார்புயலுங் காலும் வளைநெகிழு நந்திறத்ததார்வமுறு நெஞ்ச மழூங்குவிக்கு மாலை.2050. ஐதேந் தகலல்கு லாவித் தழலுயிராக்கைசோர்ந் தணலூன்றிக் கண்ணீர் கவுளலைப்பக்கண்ணீர் கவுளலைப்பக் கையற்றி யாமினையப்புண்ணீரும் வேலிற் புகுந்ததான் மாலை.2051. அவிழ்ந்தேந்து பூங்கோதை யாகத் தலர்ந்தமுகிழ்ந்தேந் திளமுலைமேற் பொன்பசலை பூப்பப்பொன்பசலை பூப்பப் பொருகயற்கண் முத்தரும்பவன்புருகு நெஞ்ச மழுங்குவிக்கு மாலை.2052. பாடினான் றேவ கீதம்பண்ணினுக் கரசன் பாடச்சூடக மகளிர் சோர்ந்துசெருக்கிய மஞ்ஞை யொத்தாராடகச் செம்பொற் பாவையந்தணற் புகழ்ந்து செம்பொன்மாடம்புக் கநங்கற் பேணிவரங்கொள்வ னாளை யென்றாள்.2053. மடலணி பெண்ணை யீன்றமணிமருள் குரும்பை மானவுடலணி யாவி நையவுருத்தெழு முலையி னாளுமடலணி தோழி மாருமார்வத்திற் கழும விப்பாற்கடலணி திலகம் போலக்கதிர்திரை முளைத்த தன்றே.2054. பொன்னியன் மணியுந் தாருங்கண்ணியும் புனைந்து செம்பொன்மின்னியற் பட்டஞ் சோத்தியானெய்பால் வெறுப்ப வூட்டிமன்னியற் பாண்டில் பண்ணிமடந்தைகோல் கொள்ள வையமின்னியற் பாவை யேற்பத்தோழியோ டேறி னாளே.2055. ஆடவ ரிரிய வேகியஞ்சொல்லார் சூழக் காமன்மாடத்து ளிழிந்து மற்றவ்வள்ளலை மறைய வைத்துச்சூடமை மாலை சாந்தம்விளக்கொடு தூப மேந்திச்சேடியர் தொழுது நிற்பத்திருமகள் பரவு மன்றே.2056. பொன்னிலஞ் சென்னி புல்லவிடமுழந் தாளை யூன்றிமின்னவிர் மாலை மென்பூங்குழல்வலத் தோளின் வீழக்கன்னியங் கமுகின் கண்போற்கலனணி யெருத்தங் கோட்டித்தன்னிரு கையுங் கூப்பித்தையலீ துரைக்கு மன்றே.2057. தாமரைச் செங்கட் செவ்வாய்த்தமனியக் குழையி னாயோர்காமமிங் குடையேன் காளைசீவக னகலஞ் சோத்தின்மாமணி மகர மம்புவண்சிலைக் கரும்பு மான்றேர்பூமலி மார்ப வீவலூரொடும் பொலிய வென்றாள்.2058. மட்டவிழ் கோதை பெற்றாய்மனமகிழ் காத லானையிட்டிடை நோவ நில்லாதெழுகென வேந்த றோழன்பட்டிமை யுரைத்த தோராள்பரவிய தெய்வந் தான்வாய்விட்டுரைத் திட்ட தென்றேவேற்கணாள் பரவி மீண்டாள்.2059. அடியிறை கொண்ட செம்பொனாடகச் சிலம்பி னாளக்கடியறை மருங்கி னின்றமைந்தனைக் கண்டு நாணிவடியுறு கடைக்க ணோக்கநெஞ்சுதுட் கென்ன வார்பூங்கொடியுற வொசிந்து நின்றாள்குழைமுகத் திருவோ டொப்பாள்.2060. இலங்குபொன் னோலை மின்னவின்முகஞ் சிறிது கோட்டியலங்கலுங் குழலுந் தாழவருமணிக் குழையோர் காதிற்கலந்தொளி கான்று நின்றுகதிர்விடு திருவில் வீசநலங்கனிந் துருகி நின்றாணாமவேற் காமர் கண்ணாள்.2061. எரிமணிக் கலாபத் திட்டவிந்திர நீல மென்னுமொருமணி யுந்தி நேரேயொருகதி ருமிழ்வ தேபோலருமணிப் பூணி னாடனவ்வயி றணிந்த கோலத்திருமயி ரொழுக்கம் வந்தென்றிண்ணிறை கவர்ந்த தன்றே.2062. தேறினேன் றெய்வ மென்றேதீண்டிலே னாயி னுய்யேன்சீறடி பரவ வந்தேனருளெனத் தொழுது சோந்துநாறிருங் குழலி னாளைநாகணை விடையிற் புல்லிக்கோறொடுத் தநங்க னெய்யக்குழைந்துதார் திவண்ட தன்றே.2063. கலைபுறஞ் சூழ்ந்த வல்குற் கார்மயிற் சாய லாளுமலைபுறங் கண்ட மார்பின் வாங்குவிற் றடக்கை யானுமிலைபுறங் கண்ட கண்ணி யின்றமி ழியற்கை யின்பநிலைபெற நெறியிற் றுய்த்தார் நிகர்தமக் கிலாத நீரார்.2064. குங்குமங் குயின்ற கொம்மைக்குவிமுலை குளிர்ப்பத் தைவந்தங்கலுழ் மேனி யல்குற்காசுடன் றிருத்தி யம்பொற்பொங்குபூஞ் சிலம்பிற் போர்த்தபூந்துக ளவித்து மாதர்கொங்கலர் கோதை சூட்டிக்குழனலந் திருத்தி னானே.2065. வானார்கமழ் மதுவுஞ் சாந்து மேந்திமதுத்துளித்து வண்டுஞ் சுரும்பு மூசுந்தேனார்பூங் கோதாய் நினக்குக் காமன்சிலையிரண்டுஞ் செவ்வனே கோலித் தந்தான்றானாரப் பண்ணித் தடறு நீக்கித்தண்குருதி தோய்த்துத் தகைமை சான்றவூனார்ந்த வோரிணை யம்புந் தந்தானென்னை யுளனாக வேண்டி னானே.2066. கண்ணக்க கண்ணிக் கமழ்பூங் குழற்கரும்போ தீஞ்சொ லாள்கதிர் முலைகளின்வண்ணக்கு வானு நிலனுமெல் லாம்விலையேமழை மின்னு நுசுப்பி னாளைப்பெண்ணுக் கணியாக வேண்டி மேலைப்பெரியோர் பெருமான் படைத்தா னென்றுபுண்ணக்க வேலான் புகழ நாணிப்பூநோக்கிப் பூக்கொசிந்த கொம்பொத் தாளே.2067. இறங்கிய மாதர் தன்னையெரிமணிக் கடகக் கையாற்குறங்கின்மேற் றழுவி வைத்துக்கோதையங் குருதி வேலானறந்தலை நீங்கக் காக்குமரசன்யா னாக நாளைச்சிறந்தநின் னலத்தைச் சேரேனாய்விடிற் செல்க வென்றான்.2068. வில்லிடு மணிசெ யாழி மெல்விரல் விதியிற் கூப்பிநல்லடி பணிந்து நிற்ப நங்கைநீ நடுங்க வேண்டாசெல்கெனச் சிலம்பு செம்பொற் கிண்கிணி மிழற்ற வொல்கியல்குற்கா சொலிப்ப வாயம் பாவைசென் றெய்தி னாளே.2069. பருமணிப் படங்கொ ணாகப் பையெனப் பரந்த வல்குலெரிமணிப் பூணி னானுக் கின்னல மொழிய வேகித்திருமணிச் சிவிகை யேறிச் செம்பொனீண் மாடம் புக்காள்விரிமணி விளங்கு மாலை வெம்முலை வேற்க ணாளே.2070. திருவிற்றான் மாரி கற்பான்றுவலைநாட் செய்வ தேபோலுருவிற்றாய்த் துளிக்குந் தேறலோங்குதார் மார்பன் றோழர்பொருவிற்றா நம்பி காமதிலகனென் றிருந்த போழ்திற்செருவிற்றாழ் நுதலி னாள்கண்மணத்திறஞ் செப்பு கின்றார்.2071. கனைகடலமுதுந் தேனுங் கலந்துகொண் டெழுதப் பட்டபுனைகொடி பூத்த தேபோற் பொறுக்கலா நுசுப்பிற் பாவைநனைகுடைந் துண்டு தேக்கி நன்மணி வண்டு பாடும்புனைகடி மாலை மாதர் திறத்திது மொழிந்து விட்டார்.2072. ஐயற்கென் றுரைத்த மாற்றங்கேட்டலு மலங்க னாய்கன்வெய்யதேன் வாய்க்கொண் டாற்போல்விழுங்கலோ டுமிழ்த றேற்றான்செய்வதெ னோற்றி லாதேனோற்றிலா டிறத்தி னென்றுமையல்கொண் டிருப்ப வப்பாற்குமரிதன் மதியிற் சூழ்ந்தாள்.2073. பொற்பமை தாமக் கந்துபொருந்திய மின்னுப் போலவெற்பக வெரியு மாலைப்பவளத்தூண் பொருந்தி யின்னீர்க்கற்பெனு மாலை வீசிநாணெனுங் களிவண் டோப்பிச்சொற்புக ரின்றித் தோழிக்கறத்தினோ டரிவை நின்றாள்.2074. வழிவளர் மயிலஞ் சாயற் பவளப்பூம் பாவை யன்னகழிவளர் கயற்க ணங்கை கற்பினை யறிந்து தோழியழிமது மாலை சோத்தி யடிபணிந் தார வாழ்த்திப்பொழிமதுப் புயலைங் கூந்தற் செவிலியைப் பொருந்திச் சொன்னாள்.2075. நனைவளர் கோதை நற்றாய் நங்கைக்கீ துள்ள மென்றுசுனைவளர் குவளை யுண்கட் சுமதிக்குச் செவிலி செப்பக்கனயிருட் கனவிற் கண்டேன் காமர்பூம் பொய்கை வற்றவனையதாங் கன்னி நீரின் றற்றதா நங்கைக் கென்றாள்.2076. கெண்டையுஞ் சிலையுந் திங்களிளமையுங் கிடந்து தேங்கொடொண்டையங் கனியு முத்துந்தொழதக வணிந்து தூங்குங்குண்டல முடைய திங்களிதுவெனு முகத்தி தாதைவண்புகழ்க் குபேர தத்தன்கேட்டனன் மனைவி சொன்னாள்.2077. செருவிளைத் தனலும் வேலோய்சிறுமுதுக் குறைவி தானேபெருவளைப் பிட்டுக் காத்தகற்பிது போலு மையன்கரிவிளைத் தாய்ந்த சுண்ணம்வாட்டின னென்று கண்டாய்திருவிளை தேம்பெய் மாரிபாற்கடற் பெய்த தென்றாள்.2078. கேட்பது விரும்பி நாய்கன் கிளைக்கெலா முணர்த்தி யார்க்கும்வேட்பன வடிசி லாடை விழுக்கலன் மாலை சாந்தங்கோட்குறை வின்றி யாக்கிக் குழுமியங் கறங்கி யார்ப்பநாட்கடி மாலை யாற்கு நங்கையை நல்கி னானே.2079. பரியகஞ் சிலம்பு பைம்பொற்கிண்கிணி யார்ந்த பாதத்தரிவைய ராடன் மிக்காரருமணி வீணை வல்லாருரியநூற் றெண்மர் செம்பொனொன்றரைக் கோடி மூன்றுரெரியழன் முன்னர் நோந்தேனென்மகட் கென்று சொன்னான்.2080. மாசறு மணியு முத்தும் வயிரமு மொளிரு மேனியாசறு செம்பொ னார்ந்த வலங்கலங் குன்ற னானுந்தூசுறு பரவை யல்குற் றூமணிக் கொம்ப னாளுங்காசறக் கலந்த வின்பக் கடலகத் தழுந்தி னாரே.2081. பொன்வரை பொருத யானைப்புணர்மருப் பனைய வாகித்தென்வரைச் சாந்து மூழ்கித்திரள்வடஞ் சுமந்து வீங்கிமின்வளர் மருங்குல் செற்றவெம்முலை மணிக்கண் சேப்பத்தொன்னலம் பருகித் தோன்றறுறக்கம்புக் கவர்க ளொத்தான்.2082. வரிக்கழற் குருசின் மார்புமடந்தைவெம் முலையுந் தம்முட்செருச்செய்து திளைத்துப் போரிற்சிலம்பொலி கலந்த பாணியரிப்பறை யனுங்க வார்க்குமேகலைக் குரலோ டீண்டிப்புரிக்குழல் புலம்ப வைகிப்பூவணை விடுக்க லானே.2083. மணியியல் வள்ளத் தேந்தமதுமகிழ்ந் தனந்தர் கூரவணிமலர்க் குவளைப் பைம்போதொருகையி னருளி யம்பொற்பிணையனா ளருகு சேரிற்பேதுறு நுசுப்பென் றெண்ணித்துணையமை தோள்க டம்மாற்றோன்றறான் புல்லி னானே.2084. மல்லலங் கங்கை போலும் பலர்முயங் கார மார்பிற்புல்லன்மின் போமின் வேண்டா வென்றவள் புலந்து நீங்கமுல்லையங் கோதை யொன்றும் பிழைப்பிலேன் முனிய னீயென்றல்லலுற் றரத்த மார்ந்த சீறடி தொழுதிட் டானே.2085. வட்டிகைப் பாவை நோக்கிமகிழ்ந்திருந் திலிரோ வென்னாத்தொட்டிமை யுருவந் தோன்றச்சுவரையே பொருந்தி நின்றாய்கட்டழ குடைய நங்கைநீயெனக் கருதிக் கண்ணானொட்டியா னோக்கிற் றென்றானொருபிடி நுசுப்பி னாட்கே.2086. நுண்டுகி னெகிழ்ந்த வல்குன்மணிபரந் திமைப்ப நொந்துகண்களை யிடுகக் கோட்டிக்காமத்திற் செயிர்த்து நோக்கிக்குண்டல மிலங்கக் கோதைகூந்தலோ டவிழ்ந்து சோரவொண்டொடி யூடி நின்றாளொளிமணிப் பூங்கொம் பொப்பாள்.2087. கிழவனாய்ப் பாடி வந்தென்கீழ்ச்சிறை யிருப்பக் கண்டேனெழுதிய பாவை நோக்கியிமையவித் திருப்பக் கண்டேனொழிகவிக் காம மோரூரிரண்டஃக மாயிற் றென்றாங்கழுதகண் ணீர்கண் மைந்தனாவிபோழ்ந் திட்ட வன்றே.2088. அலங்கறா தவிழ வஞ்செஞ்சீறடி யணிந்த வம்பூஞ்சிலம்பின்மேற் சென்னி சோத்திச்சிறியவர் செய்த தீமைபுலம்பலர் பொறுப்ப ரன்றேபெரியவ ரென்று கூறியிலங்குவேற் கண்ணி யூடலிளையவ னீக்கி னானே.2089. யாழ்கொன்ற கிளவி யாடனழிழ்துறழ் புலவி நீக்கிக்காழின்றிக் கனிந்த காமக்கொழுங்கனி நுகர்ந்து காதற்றாழ்கின்ற தாம மார்பன்றையலோ டாடி விள்ளானூழ்சென்ற மதியம் வெய்யோனொட்டியொன் றாய தொத்தான்.2090. பச்சிலைப் பட்டு முத்தும்பவளமு மிமைக்கு மல்குனச்சிலை வேற்கண் மாதர்நகைமுக முறுவன் மாந்தியிச்சையுங் குறிப்பு நோக்கியெய்வதே கரும மாகக்கைச்சிலை கணையோ டேந்திக்காமனிக் கடையைக் காப்பான்.2091. கடிப்பிணை காது சோத்திச்சிகழிகை காத நாறத்தொடுத்தலர் மாலை சூட்டிக்கிம்புரி முத்த மென்றோளடுத்தணிந் தாகஞ் சாந்தினணிபெற வெழுதி யல்குலுடுத்தபொற் கலாபந் தைவந்தொளிவளை திருத்தி னானே.2092. இலங்குவெள் ளருவிக் குன்றத்தெழுந்ததண் டகரச் செந்தீநலங்கிள ரகிலுந் தேனுங்கட்டியு நன்கு கூட்டிப்புலம்பற வளர்த்த வம்மென்பூம்புகை யமளி யங்கண்விலங்கர சனைய காளைவெள்வளைக் கிதனைச் சொன்னான்.2093. கருமநீ கவல வேண்டாகயற்கணாய் பிரிவல் சின்னாளருமைநின் கவினைத் தாங்கலதுபொரு ளென்று கூறப்பெருமநீ வேண்டிற் றல்லால்வேண்டுவ பிறிதொன் றுண்டோவொருமைநின் மனத்திற் சென்றேனுவப்பதே யுவப்ப தென்றாள்.2094. நாணொடு மிடைந்த தேங்கொணடுக்குறு கிளவி கேட்டேபூண்வடுப் பொறிப்பப் புல்லிப்புனைநலம் புலம்ப வைகேன்றேன்மிடை கோதை யென்றுதிருமக னெழுந்து போகிவாண்மிடை தோழர் சூழத்தன்மனை மகிழ்ந்து புக்கான்.2095. புரவியுங் களிறு நோக்கிப்பொன்னெடுந் தேரு நோக்கியிரவினும் பகலு மோவாதென்மகன் யாண்டை யானென்றழுதகண் ணீரி னாலேகைகழீஇ யவலிக் கின்றமெழுகெரி முகந்த தொக்குந்தாய்மெலி வகற்றி னானே.2096. ஒற்றரு முணர்த லின்றியுரையவித் துறுப்பி னாலேசுற்றத்தார்க் குரைப்ப வேண்டித்தொக்குடன் றழுவிக் கொள்வாரெற்றுவா ரினைந்து சோர்வார்நம்பியோ நம்பி யென்னாவுற்றுடன் றழுத கண்ணீர்காலலைத் தொழுகிற் றன்றே.2097. கந்துகண் கழறக் கல்லென்கடற்றிரை யவிந்த வண்ணம்வந்தவர் புலம்பு நீங்கமறைபுறப் படுமென் றெண்ணியெந்தைதா னிறந்த நாளின்றெனநக ரியம்பி யாருமந்தமி லுவகை தன்னாலகங்குளிர்ப் பெய்தி னாரே.2098. செங்கயன் மழைக்கட் செவ்வாய்த்தத்தையு மகிழ்ந்து தீஞ்சொலெங்கையைச் சென்று காண்மினடிகளென் றிரந்து கூறமங்கல வகையிற் சோந்துமதுத்துளி யறாத மாலைகொங்கலர் கண்ணி சோத்திக்குங்கும மெழுதி னானே.2099. தீவினை யுடைய வென்னைத்தீண்டன்மி னடிகள் வேண்டாபாவியே னென்று நொந்துபரிந்தழு துருகி நையக்காவியங் கண்ணி யொன்றுங்கவலல்யா னுய்ந்த தெல்லாநாவியே நாறு மேனிநங்கைநின் றவத்தி னென்றான்.2100. அன்னமென் னடையு நோக்குஞ்சாயலு மணியு மேருமின்னினுண் ணுசுப்பும் வெய்யமுலைகளு முகமுந் தோன்றவென்மனத் தெழுதப் பட்டாயாயினு மரிவை கேளாயுன்னையான் பிரிந்த நாளோரூழியே போன்ற தென்றான்.2101. இளையவண் மகிழ்வ கூறியின்றுயி லமர்ந்து பின்னாள்விளைபொரு ளாய வெல்லாந்தாதைக்கே வேறு கூறிக்கிளையவர் சூழ வாமான்வாணிக னாகிக் கேடிறளையவிழ் தாம மார்பன்றன்னகர் நீங்கி னானே.