Pathigam 105 / 125 · Third Thirumurai · Thirugnanasambandar

Thirukkalikkaamoor

திருக்கலிக்காமூர் · 11 verses · 3967–3977

Share

பாடல்கள் The verses

1 Verse 3967

பண் · பழம்பஞ்சுரம்

மடல்வரை யின்மது விம்முசோலை வயல்சூழ்ந் தழகாருங்கடல்வரை யோதங் கலந்துமுத்தஞ் சொரியுங் கலிக்காமூர்உடல்வரை யின்னுயிர் வாழ்க்கையாய ஒருவன் கழலேத்தஇடர்தொட ராவினை யானசிந்தும் இறைவன் னருளாமே.
Open this verse
2 Verse 3968
மைவரை போற்றிரை யோடுகூடிப் புடையே மலிந்தோதங்கைவரை யால்வளர் சங்கமெங்கு மிருக்குங் கலிக்காமூர்மெய்வரை யான்மகள் பாகன்தன்னை விரும்ப உடல்வாழும்ஐவரை ஆசறுத் தாளுமென்பர் அதுவுஞ் சரதமே.
Open this verse
3 Verse 3969
தூவிய நீர்மல ரேந்திவையத் தவர்கள் தொழுதேத்தக்காவியின் நேர்விழி மாதரென்றுங் கவினார் கலிக்காமூர்மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால்ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமானே.
Open this verse
4 Verse 3970
குன்றுகள் போற்றிரை உந்தியந்தண் மணியார் தரமேதிகன்றுடன் புல்கியா யம்மனைசூழ் கவினார் கலிக்காமூர்என்றுணர் ஊழியும் வாழுமெந்தை பெருமான் அடியேத்திநின்றுணர் வாரை நினையகில்லார் நீசர் நமன்தமரே.
Open this verse
5 Verse 3971
வானிடை வாண்மதி மாடந்தீண்ட மருங்கே கடலோதங்கானிடை நீழலிற் கண்டல்வாழுங் கழிசூழ் கலிக்காமூர்ஆனிடை ஐந்துகந் தாடினானை அமரர் தொழுதேத்தநானடை வாம்வண மின்புதந்த நலமே நினைவோமே.
Open this verse
6 Verse 3972
துறைவளர் கேதகை மீதுவாசஞ் சூழ்வான் மலிதென்றல்கறைவள ருங்கட லோதமென்றுங் கலிக்குங் கலிக்காமூர்மறைவள ரும்பொரு ளாயினானை மனத்தால் நினைந்தேத்தநிறைவள ரும்புக ழெய்தும்வாதை நினையா வினைபோமே.
Open this verse
7 Verse 3973
கோலநன் மேனியின் மாதர்மைந்தர் கொணர் மங்கிலியத்திற்காலமும் பொய்க்கினுந் தாம்வழுவா தியற்றுங் கலிக்காமூர்ஞாலமுந் தீவளி ஞாயிறாய நம்பன் கழலேத்திஓலமி டாதவர் ஊழியென்றும் உணர்வைத் துறந்தாரே.
Open this verse
8 Verse 3974
ஊரர வந்தலை நீண்முடியான் ஒலிநீர் உலகாண்டுகாரர வக்கடல் சூழவாழும் பதியாம் கலிக்காமூர்தேரர வல்குல்அம் பேதையஞ்சத் திருந்து வரைபேர்த்தான்ஆரர வம்பட வைத்தபாதம் உடையான் இடமாமே.
Open this verse
9 Verse 3975
அருவரை யேந்திய மாலும்மற்றை அலர்மேல் உறைவானும்இருவரும் அஞ்ச எரியுருவாய் எழுந்தான் கலிக்காமூர்ஒருவரை யான்மகள் பாகன்றன்னை உணர்வாற் றொழுதேத்தத்திருமரு வுஞ்சிதை வில்லைசெம்மைத் தேசுண் டவர்பாலே.
Open this verse
10 Verse 3976
மாசு பிறக்கிய மேனியாரும் மருவுந் துவராடைமீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர்தோற்றங்காசினி நீர்த்திரள் மண்டியெங்கும் வளமார் கலிக்காமூர்ஈசனை யெந்தை பிரானையேத்தி நினைவார் வினைபோமே.
Open this verse
11 Verse 3977
ஆழியுள் நஞ்சமு தாரவுண்டன் றமரர்க் கமுதுண்ணஊழிதோ றும்முள ராவளித்தான் உலகத் துயர்கின்றகாழியுள் ஞானசம் பந்தன்சொன்ன தமிழாற் கலிக்காமூர்வாழியெம் மானை வணங்கியேத்த மருவா பிணிதானே.
Open this verse