பண் · காந்தாரபஞ்சமம்
இயலிசை யெனும்பொரு ளின்திறமாம் புயலன மிடறுடைப்புண்ணியனே கயலன அரிநெடுங் கண்ணியொடும் அயலுலகடிதொழ அமர்ந்தவனே கலனாவது வெண்டலை கடிபொழிற்புகலிதன்னுள் நிலனாள்தொறும் இன்புற நிறைமதி யருளினனே.
Open this verse
பண் · காந்தாரபஞ்சமம்
இயலிசை யெனும்பொரு ளின்திறமாம் புயலன மிடறுடைப்புண்ணியனே கயலன அரிநெடுங் கண்ணியொடும் அயலுலகடிதொழ அமர்ந்தவனே கலனாவது வெண்டலை கடிபொழிற்புகலிதன்னுள் நிலனாள்தொறும் இன்புற நிறைமதி யருளினனே.
Open this verse
நிலையுறும் இடர்நிலை யாதவண்ணம் இலையுறு மலர்கள்கொண்டேத்துதும்யாம் மலையினில் அரிவையை வெருவவன்தோல் அலைவருமதகரி யுரித்தவனே இமையோர்கள்நின் தாள்தொழ எழில்திகழ்பொழிற்புகலி உமையாளொடு மன்னினை உயர்திரு வடியிணையே.
Open this verse
பாடினை அருமறை வரல்முறையால் ஆடினை காணமுன்அருவனத்திற் சாடினை காலனைத் தயங்கொளிசேர் நீடுவெண்பிறைமுடி நின்மலனே நினையேயடி யார்தொழ நெடுமதிற்புகலிந்நகர் தனையேயிட மேவினை தவநெறி அருளெமக்கே.
Open this verse
நிழல்திகழ் மழுவினை யானையின்தோல் அழல்திகழ் மேனியில்அணிந்தவனே கழல்திகழ் சிலம்பொலி யலம்பநல்ல முழவொடும்அருநட முயற்றினனே முடிமேல்மதி சூடினை முருகமர்பொழிற்புகலி அடியாரவ ரேத்துற அழகொடும் இருந்தவனே.
Open this verse
கருமையின் ஒளிர்கடல் நஞ்சமுண்ட உரிமையின் உலகுயிர்அளித்தநின்றன் பெருமையை நிலத்தவர் பேசினல்லால் அருமையில்அளப்பரி தாயவனே அரவேரிடை யாளொடும் அலைகடல்மலிபுகலிப் பொருள்சேர்தர நாடொறும் புவிமிசைப் பொலிந்தவனே.
Open this verse
அடையரி மாவொடு வேங்கையின்தோல் புடைபட அரைமிசைப்புனைந்தவனே படையுடை நெடுமதிற் பரிசழித்த விடையுடைக்கொடிமல்கு வேதியனே விகிர்தாபர மாநின்னை விண்ணவர்தொழப்புகலித் தகுவாய்மட மாதொடுந் தாள்பணிந் தவர்தமக்கே.
Open this verse
அடியவர் தொழுதெழ அமரரேத்தச் செடியவல் வினைபலதீர்ப்பவனே துடியிடை அகலல்குல் தூமொழியைப் பொடியணிமார்புறப் புல்கினனே புண்ணியா புனிதாபுக ரேற்றினைபுகலிந்நகர் நண்ணினாய் கழலேத்திட நண்ணகிலா வினையே.
Open this verse
இரவொடு பகலதாம் எம்மானுன்னைப் பரவுதல் ஒழிகிலேன்வழியடியேன் குரவிரி நறுங்கொன்றை கொண்டணிந்த அரவிரிசடைமுடி ஆண்டகையே அனமென்னடை யாளொடும் அதிர்கடல்இலங்கைமன்னை இனமார்தரு தோளடர்த் திருந்தனை புகலியுளே.
Open this verse
உருகிட வுவகைதந் துடலினுள்ளால் பருகிடும் அமுதனபண்பினனே பொருகடல் வண்ணனனும் பூவுளானும் பெருகிடும்அருளெனப் பிறங்கெரியாய் உயர்ந்தாயினி நீயெனை ஒண்மலரடியிணைக்கீழ் வயந்தாங்குற நல்கிடு வளர்மதிற் புகலிமனே.
Open this verse
கையினி லுண்பவர் கணிகைநோன்பர் செய்வன தவமலாச்செதுமதியார் பொய்யவ ருரைகளைப் பொருளெனாத மெய்யவரடிதொழ விரும்பினனே வியந்தாய்வெள் ளேற்றினை விண்ணவர்தொழுபுகலி உயர்ந்தார்பெருங் கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே.
Open this verse
புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர் விண்ணவ ரடிதொழவிளங்கினானை நண்ணிய ஞானசம் பந்தன்வாய்மை பண்ணியஅருந்தமிழ் பத்தும்வல்லார் நடலையவை யின்றிப்போய் நண்ணுவர்சிவனுலகம் இடராயின இன்றித்தாம் எய்துவர் தவநெறியே.
Open this verse