பண் · சாதாரி
திருந்துமா களிற்றிள மருப்பொடு திரண்மணிச் சந்தமுந்திக்குருந்துமா குரவமுங் குடசமும் பீலியுஞ் சுமந்துகொண்டுநிரந்துமா வயல்புகு நீடுகோட் டாறுசூழ் கொச்சைமேவிப்பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ் நெஞ்சமே புகலதாமே.
Open this verse
பண் · சாதாரி
திருந்துமா களிற்றிள மருப்பொடு திரண்மணிச் சந்தமுந்திக்குருந்துமா குரவமுங் குடசமும் பீலியுஞ் சுமந்துகொண்டுநிரந்துமா வயல்புகு நீடுகோட் டாறுசூழ் கொச்சைமேவிப்பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ் நெஞ்சமே புகலதாமே.
Open this verse
ஏலமார் இலவமோ டினமலர்த் தொகுதியா யெங்கும்நுந்திக்கோலமா மிளகொடு கொழுங்கனி கொன்றையுங் கொண்டுகோட்டாறாலியா வயல்புகு மணிதரு கொச்சையே நச்சிமேவும்நீலமார் கண்டனை நினைமட நெஞ்சமே அஞ்சல்நீயே.
Open this verse
பொன்னுமா மணிகொழித் தெறிபுனற் கரைகள்வாய் நுரைகளுந்திக்கன்னிமார் முலைநலம் கவரவந் தேறுகோட் டாறுசூழமன்னினார் மாதொடும் மருவிடங் கொச்சையே மருவின்நாளும்முன்னைநோய் தொடருமா றில்லைகாண் நெஞ்சமே அஞ்சல்நீயே.
Open this verse
கந்தமார் கேதகைச் சந்தனக் காடுசூழ் கதலிமாடேவந்துமா வள்ளையின் பவரளிக் குவளையைச் சாடியோடக்கொந்துவார் குழலினார் குதிகொள்கோட் டாறுசூழ் கொச்சைமேயஎந்தையார் அடிநினைந் துய்யலாம் நெஞ்சமே அஞ்சல்நீயே.
Open this verse
மறைகொளுந் திறலினார் ஆகுதிப் புகைகள்வான் அண்டமிண்டிச்சிறைகொளும் புனலணி செழுமதி திகழ்மதிற் கொச்சைதன்பால்உறைவிட மெனமன மதுகொளும் பிரமனார் சிரமறுத்தஇறைவன தடியிணை இறைஞ்சிவாழ் நெஞ்சமே அஞ்சல்நீயே.
Open this verse
சுற்றமும் மக்களுந் தொக்கவத் தக்கனைச் சாடியன்றேஉற்றமால் வரையுமை நங்கையைப் பங்கமா உள்கினானோர்குற்றமில் லடியவர் குழுமிய வீதிசூழ் கொச்சைமேவிநற்றவம் அருள்புரி நம்பனை நம்பிடாய் நாளும்நெஞ்சே.
Open this verse
கொண்டலார் வந்திடக் கோலவார் பொழில்களிற் கூடிமந்தி கண்டவார் கழைபிடித் தேறிமாமுகில்தனைக் கதுவுகொச்சை அண்டவா னவர்களும் அமரரும் முனிவரும் பணியஆலம் உண்டமா கண்டனார் தம்மையே உள்குநீ அஞ்சல்நெஞ்சே.
Open this verse
அடலெயிற் றரக்கனார் நெருக்கிமா மலையெடுத் தார்த்தவாய்கள்உடல்கெடத் திருவிரல் ஊன்றினார் உறைவிடம் ஒளிகொள்வெள்ளிமடலிடைப் பவளமும் முத்தமுந் தொத்துவண் புன்னைமாடேபெடையொடுங் குருகினம் பெருகுதண் கொச்சையே பேணுநெஞ்சே.
Open this verse
அரவினிற் றுயில்தரும் அரியும்நற் பிரமனும் அன்றயர்ந்துகுரைகழற் றிருமுடி யளவிட அரியவர் கொங்குசெம்பொன்விரிபொழி லிடைமிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்தகரியநன் மிடறுடைக் கடவுளார் கொச்சையே கருதுநெஞ்சே.
Open this verse
கடுமலி யுடலுடை அமணருங் கஞ்சியுண் சாக்கியரும்இடுமற வுரைதனை இகழ்பவர் கருதுநம் ஈசர்வானோர்நடுவுறை நம்பனை நான்மறை யவர்பணிந் தேத்தஞாலம்உடையவன் கொச்சையே உள்கிவாழ் நெஞ்சமே அஞ்சல்நீயே.
Open this verse
காய்ந்துதங் காலினாற் காலனைச் செற்றவர் கடிகொள்கொச்சைஆய்ந்துகொண் டிடமென இருந்தநல் லடிகளை ஆதரித்தேஏய்ந்ததொல் புகழ்மிகு மெழில்மறை ஞானசம் பந்தன்சொன்னவாய்ந்தஇம் மாலைகள் வல்லவர் நல்லவா னுலகின்மேலே.
Open this verse