Pathigam 93 / 125 · Third Thirumurai · Thirugnanasambandar

Thiruambarmaagaalam

திருஅம்பர்மாகாளம் · 11 verses · 3842–3852

Share

பாடல்கள் The verses

1 Verse 3842

பண் · சாதாரி

படியுளார் விடையினர் பாய்புலித் தோலினர் பாவநாசர்பொடிகொள்மா மேனியர் பூதமார் படையினர் பூணநூலர்கடிகொள்மா மலரிடும் அடியினர் பிடிநடை மங்கையோடும்அடிகளார் அருள்புரிந் திருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
Open this verse
2 Verse 3843
கையின்மா மழுவினர் கடுவிடம் உண்டவெங் காளகண்டர்செய்யமா மேனியர் ஊனமர் உடைதலைப் பலிதிரிவார்வையமார் பொதுவினில் மறையவர் தொழுதெழ நடமதாடும்ஐயன்மா தேவியோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
Open this verse
3 Verse 3844
பரவின அடியவர் படுதுயர் கெடுப்பவர் பரிவிலார்பால்கரவினர் கனலன வுருவினர் படுதலைப் பலிகொடேகும்இரவினர் பகலெரி கானிடை யாடிய வேடர்பூணும்அரவினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
Open this verse
4 Verse 3845
நீற்றினர் நீண்டவார் சடையினர் படையினர் நிமலர்வெள்ளைஏற்றினர் எரிபுரி கரத்தினர் புரத்துளார் உயிரைவவ்வுங்கூற்றினர் கொடியிடை முனிவுற நனிவருங் குலவுகங்கைஆற்றினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
Open this verse
5 Verse 3846
புறத்தினர் அகத்துளர் போற்றிநின் றழுதெழும் அன்பர்சிந்தைத்திறத்தினர் அறிவிலாச் செதுமதித் தக்கன்றன் வேள்விசெற்றமறத்தினர் மாதவர் நால்வருக் காலின்கீழ் அருள்புரிந்தஅறத்தினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
Open this verse
6 Verse 3847
பழகமா மலர்பறித் திண்டை கொண் டிறைஞ்சுவார் பாற்செறிந்த குழகனார் குணம்புகழ்ந் தேத்துவா ரவர்பலர் கூடநின்ற கழகனார் கரியுரித் தாடுகங் காளர்நங் காளியேத்தும் அழகனார் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
Open this verse
7 Verse 3848
சங்கவார் குழையினர் தழலன வுருவினர் தமதருளேஎங்குமா யிருந்தவர் அருந்தவ முனிவருக் களித்துகந்தார்பொங்குமா புனல்பரந் தரிசிலின் வடகரை திருத்தம்பேணிஅங்கமா றோதுவார் இருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
Open this verse
8 Verse 3849
பொருசிலை மதனனைப் பொடிபட விழித்தவர் பொழிலிலங்கைக்குரிசிலைக் குலவரைக் கீழுற அடர்த்தவர் கோயில்கூறிற்பெருசிலை நலமணி பீலியோ டேலமும் பெருகநுந்தும்அரசிலின் வடகரை அழகமர் அம்பர்மா காளந்தானே.
Open this verse
9 Verse 3850
வரியரா அதன்மிசைத் துயின்றவன் தானுமா மலருளானும்எரியரா அணிகழ லேத்தவொண் ணாவகை யுயர்ந்துபின்னும்பிரியராம் அடியவர்க் கணியராய்ப் பணிவிலா தவருக்கென்றும்அரியராய் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே.
Open this verse
10 Verse 3851
சாக்கியக் கயவர்வன் றலைபறிக் கையரும் பொய்யினால்நூல்ஆக்கிய மொழியவை பிழையவை யாதலில் வழிபடுவீர்வீக்கிய அரவுடைக் கச்சையா னிச்சையா னவர்கட்கெல்லாம்ஆக்கிய அரனுறை அம்பர்மா காளமே யடைமின்நீரே.
Open this verse
11 Verse 3852
செம்பொன்மா மணிகொழித் தெழுதிரை வருபுனல் அரிசில்சூழ்ந்தஅம்பர்மா காளமே கோயிலா அணங்கினோ டிருந்தகோனைக்கம்பினார் நெடுமதிற் காழியுள் ஞானசம் பந்தன்சொன்னநம்பிநாள் மொழிபவர்க் கில்லையாம் வினைநலம் பெறுவர்தாமே.
Open this verse