Pathigam 34 / 125 · Third Thirumurai · Thirugnanasambandar

Thirumudhugundram

திருமுதுகுன்றம் · 11 verses · 3197–3207

Share

பாடல்கள் The verses

1 Verse 3197

பண் · கொல்லி

வண்ணமா மலர்கொடு வானவர் வழிபடஅண்ணலார் ஆயிழை யாளொடும் அமர்விடம்விண்ணின்மா மழைபொழிந் திழியவெள் ளருவிசேர்திண்ணிலார் புறவணி திருமுது குன்றமே.
Open this verse
2 Verse 3198
வெறியுலாங் கொன்றையந் தாரினான் மேதகுபொறியுலாம் அரவசைத் தாடியோர் புண்ணியன்மறியுலாங் கையினான் மங்கையோ டமர்விடஞ்செறியுளார் புறவணி திருமுது குன்றமே.
Open this verse
3 Verse 3199
ஏறினார் விடைமிசை யிமையவர் தொழவுமைகூறனார் கொல்புலித் தோலினார் மேனிமேல்நீறனார் நிறைபுனற் சடையனார் நிகழ்விடந்தேறலார் பொழிலணி திருமுது குன்றமே.
Open this verse
4 Verse 3200
உரையினார் உறுபொரு ளாயினான் உமையொடும்விரையினார் கொன்றைசேர் சடையினார் மேவிடம்உரையினார் ஒலியென வோங்குமுத் தாறுமெய்த்திரையினார் எறிபுனல் திருமுது குன்றமே.
Open this verse
5 Verse 3201
கடியவா யினகுரல் களிற்றினைப் பிளிறவோர்இடியவெங் குரலினோ டாளிசென் றிடுநெறிவடியவாய் மழுவினன் மங்கையோ டமர்விடஞ்செடியதார் புறவணி திருமுது குன்றமே.
Open this verse
6 Verse 3202
கானமார் கரியின்ஈர் உரிவையார் பெரியதோர்வானமார் மதியினோ டரவர்தாம் மருவிடம்ஊனமா யினபிணி யவைகெடுத் துமையொடுந்தேனமார் பொழிலணி திருமுது குன்றமே.
Open this verse
7 Verse 3203
மஞ்சர்தாம் மலர்கொடு வானவர் வணங்கிடவெஞ்சொலார் வேடரோ டாடவர் விரும்பவேஅஞ்சொலாள் உமையொடும் மமர்விட மணிகலைச்செஞ்சொலார் பயில்தருந் திருமுது குன்றமே.
Open this verse
8 Verse 3204
காரினார் அமர்தருங் கயிலைநன் மலையினைஏரினார் முடியிரா வணனெடுத் தானிறவாரினார் முலையொடும் மன்னினார் மருவிடஞ்சீரினார் திகழ்தருந் திருமுது குன்றமே.
Open this verse
9 Verse 3205
ஆடினார் கானகத் தருமறை யின்பொருள்பாடினார் பலபுகழ்ப் பரமனார் இணையடிஏடினார் மலர்மிசை அயனுமா லிருவருந்தேடினார் அறிவொணார் திருமுது குன்றமே.
Open this verse
10 Verse 3206
மாசுமெய் தூசுகொண் டுழல்சமண் சாக்கியர்பேசுமெய் யுளவல்ல பேணுவீர் காணுமின்வாசமார் தருபொழில் வண்டினம் இசைசெயத்தேசமார் புகழ்மிகுந் திருமுது குன்றமே.
Open this verse
11 Verse 3207
திண்ணினார் புறவணி திருமுது குன்றரைநண்ணினான் காழியுள் ஞானசம் பந்தன்சொல்எண்ணினான் ஈரைந்து மாலையும் இயலுமாப்பண்ணினாற் பாடுவார்க் கில்லையாம் பாவமே.
Open this verse