பண் · சாதாரி
சுரருலகு நரர்கள்பயில் தரணிதலம் முரணழிய அரணமதில்முப்புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமனிடமாம்வரமருள வரன்முறையி னிரைநிறைகொள் வருசுருதி சிரவுரையினாற்பிரமனுயர் அரனெழில்கொள் சரணவிணை பரவவளர் பிரமபுரமே.
Open this verse
பண் · சாதாரி
சுரருலகு நரர்கள்பயில் தரணிதலம் முரணழிய அரணமதில்முப்புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமனிடமாம்வரமருள வரன்முறையி னிரைநிறைகொள் வருசுருதி சிரவுரையினாற்பிரமனுயர் அரனெழில்கொள் சரணவிணை பரவவளர் பிரமபுரமே.
Open this verse
தாணுமிகு வாணிசைகொள் தாணுவியர் பேணுமது காணுமளவிற்கோணுநுதல் நீள்நயனி கோணில்பிடி மாணிமது நாணும்வகையேஏணுகரி பூணழிய வாணியல்கொள் மாணிபதி சேணமரர்கோன்வேணுவினை யேணிநகர் காணிறிவி காணநடு வேணுபுரமே.
Open this verse
பகலொளிசெய் நகமணியை முகைமலரைநிகழ்சரண வகவுமுனிவர்க் ககலமலி சகலகலை மிகவுரைசெய் முகமுடைய பகவனிடமாம் பகைகளையும் வகையில்அறு முகஇறையை மிகஅருள நிகரிலிமையோர் புகவுலகு புகழஎழில் திகழநிக ழலர்பெருகு புகலிநகரே.
Open this verse
அங்கண்மதி கங்கைநதி வெங்கண்அர வங்களெழில் தங்குமிதழித்துங்கமலர் தங்குசடை யங்கிநிகர் எங்களிறை தங்குமிடமாம்வெங்கதிர்வி ளங்குலகம் எங்குமெதிர் பொங்கெரிபு லன்கள்களைவோர்வெங்குருவி ளங்கியுமை பங்கர்சர ணங்கள்பணி வெங்குருவதே.
Open this verse
ஆணியல்பு காணவன வாணவியல் பேணியெதிர் பாணமழைசேர்தூணியற நாணியற வேணுசிலை பேணியற நாணிவிசயன்பாணியமர் பூணவருள் மாணுபிர மாணியிட மேணிமுறையிற்பாணியுல காளமிக வாணின்மலி தோணிநிகர் தோணிபுரமே.
Open this verse
நிராமய பராபர புராதன பராவுசிவ ராகவருளென்றிராவுமெ திராயது பராநினை புராணனம ராதிபதியாம்அராமிசை யிராதெழில் தராயர பராயண வராகவுருவாதராயனை விராயெரி பராய்மிகு தராய்மொழி விராயபதியே.
Open this verse
அரணையுறு முரணர்பலர் மரணம்வர விரணமதி லரமலிபடைக்கரம்விசிறு விரகனமர் கரணனுயர் பரனெறிகொள் கரனதிடமாம்பரவமுது விரவவிடல் புரளமுறு மரவையரி சிரமரியவச்சிரமரன சரணமவை பரவவிரு கிரகமமர் சிரபுரமதே.
Open this verse
அறமழிவு பெறவுலகு தெறுபுயவன் விறலழிய நிறுவிவிரன்மாமறையினொலி முறைமுரல்செய் பிறையெயிற னுறஅருளும் இறைவனிடமாங்குறைவின்மிக நிறைதையுழி மறையமரர் நிறையருள முறையொடுவரும்புறவனெதிர் நிறைநிலவு பொறையனுடல் பெறவருளு புறவமதுவே.
Open this verse
விண்பயில மண்பகிரி வண்பிரமன் எண்பெரிய பண்படைகொண்மால்கண்பரியு மொண்பொழிய நுண்பொருள்கள் தண்புகழ்கொள் கண்டனிடமாம்மண்பரியு மொண்பொழிய நுண்புசகர் புண்பயில விண்படரவச்சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய் பண்புகளை சண்பைநகரே.
Open this verse
பாழியுறை வேழநிகர் பாழமணர் சூழுமுட லாளருணராஏழினிசை யாழின்மொழி யேழையவள் வாழுமிறை தாழுமிடமாங்கீழிசைகொள் மேலுலகில் வாழரசு சூழரசு வாழவரனுக்காழியசில் காழிசெய வேழுலகில் ஊழிவளர் காழிநகரே.
Open this verse
நச்சரவு கச்செனவ சைச்சுமதி யுச்சியின்மி லைச்சொருகையான்மெய்ச்சிர மணைச்சுலகி னிச்சமிடு பிச்சையமர் பிச்சனிடமாம்மச்சமத நச்சிமத மச்சிறுமி யைச்செய்தவ வச்சவிரதக்கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்கள் நச்சிமிடை கொச்சைநகரே.
Open this verse
ஒழுகலரி தழிகலியில் உழியுலகு பழிபெருகு வழியைநினையாமுழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத்தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை கழுவுமுரை கழுமலநகர்ப்பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகள் மொழிதகையவே.
Open this verse