Pathigam 46 / 125 · Third Thirumurai · Thirugnanasambandar

Thirukkarugaavoor

திருக்கருகாவூர் · 11 verses · 3326–3336

Share

பாடல்கள் The verses

1 Verse 3326

பண் · கௌசிகம்

முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவேமத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
Open this verse
2 Verse 3327
. விமுத வல்லசடை யான்வினை யுள்குவார்க் கமுத நீழலக லாததோர் செல்வமாங் கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர் அமுதர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
Open this verse
3 Verse 3328
.பழக வல்லசிறுத் தொண்டர்பா வின்னிசைக்குழக ரென்றுகுழை யாவழை யாவருங்கழல்கொள் பாடலுடை யார்கரு காவூரெம்அழகர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
Open this verse
4 Verse 3329
.பொடிமெய் பூசிமலர் கொய்துபு ணர்ந்துடன்செடிய ரல்லாவுள்ளம் நல்கிய செல்வத்தர்கடிகொள் முல்லைகம ழுங்கரு காவூரெம்அடிகள் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
Open this verse
5 Verse 3330
.மைய லின்றிமலர் கொய்து வணங்கிடச்செய்ய வுள்ளம்மிக நல்கிய செல்வத்தர்கைதன் முல்லைகம ழுங்கரு காவூரெம்ஐயர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
Open this verse
6 Verse 3331
. மாசில் தொண்டர்மலர் கொண்டு வணங்கிட ஆசை யாரஅருள் நல்கிய செல்வத்தர் காய்சி னத்தவிடை யார்கரு காவூரெம் ஈசர் வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.
Open this verse
7 Verse 3332
. வெந்த நீறுமெய் பூசிய வேதியன் சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன் கந்த மௌவல்கம ழுங்கரு காவூரெம் எந்தை வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.
Open this verse
8 Verse 3333

குறிப்பு இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

Open this verse
9 Verse 3334
. பண்ணின் நேர்மொழி யாளையோர் பாகனார் மண்ணு கோலம்முடை யம்மல ரானொடுங் கண்ணன் நேடஅரி யார்கரு காவூரெம் அண்ணல் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
Open this verse
10 Verse 3335
. போர்த்த மெய்யினர் போதுழல் வார்கள்சொல் தீர்த்த மென்றுதெளி வீர்தெளி யேன்மின் கார்த்தண் முல்லைகம ழுங்கரு காவூரெம் ஆத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
Open this verse
11 Verse 3336
. கலவ மஞ்ஞை யுலவுங் கருகாவூர் நிலவு பாடலுடை யான்றன நீள்கழல் குலவு ஞானசம் பந்தன செந்தமிழ் சொலவ லாரவர் தொல்வினை தீருமே.
Open this verse