பண் · சாதாரி
திடமலி மதிலணி சிறுகுடி மேவிய படமலி அரவுடை யீரே படமலி அரவுடை யீருமைப் பணிபவர் அடைவதும் அமருல கதுவே.
Open this verse
பண் · சாதாரி
திடமலி மதிலணி சிறுகுடி மேவிய படமலி அரவுடை யீரே படமலி அரவுடை யீருமைப் பணிபவர் அடைவதும் அமருல கதுவே.
Open this verse
சிற்றிடை யுடன்மகிழ் சிறுகுடி மேவிய சுற்றிய சடைமுடி யீரே சுற்றிய சடைமுடி யீரும தொழுகழல் உற்றவர் உறுபிணி யிலரே.
Open this verse
தெள்ளிய புனலணி சிறுகுடி மேவிய துள்ளிய மானுடை யீரே துள்ளிய மானுடை யீரும தொழுகழல் உள்ளுதல் செயநலம் உறுமே.
Open this verse
செந்நெல வயலணி சிறுகுடி மேவிய ஒன்னலர் புரமெரித் தீரே ஒன்னலர் புரமெரித் தீருமை யுள்குவார் சொன்னலம் உடையவர் தொண்டே.
Open this verse
செற்றினின் மலிபுனல் சிறுகுடி மேவிய பெற்றிகொள் பிறைமுடி யீரே பெற்றிகொள் பிறைமுடி யீருமைப் பேணிநஞ் சற்றவர் அருவினை யிலரே.
Open this verse
செங்கயல் புனலணி சிறுகுடி மேவிய மங்கையை இடமுடை யீரே மங்கையை இடமுடை யீருமை வாழ்த்துவார் சங்கைய திலர்நலர் தவமே.
Open this verse
செறிபொழில் தழுவிய சிறுகுடி மேவிய வெறிகமழ் சடைமுடி யீரே வெறிகமழ் சடைமுடி யீருமை விரும்பிமெய்ந் நெறியுணர் வோருயர்ந் தோரே.
Open this verse
திசையவர் தொழுதெழு சிறுகுடி மேவிய தசமுகன் உரநெரித் தீரே தசமுகன் உரநெரித் தீருமைச் சார்பவர் வசையறும் அதுவழி பாடே.
Open this verse
செருவரை வயலமர் சிறுகுடி மேவிய இருவரை அசைவுசெய் தீரே இருவரை அசைவுசெய் தீருமை யேத்துவார் அருவினை யொடுதுய ரிலரே.
Open this verse
செய்த்தலை புனலணி சிறுகுடி மேவிய புத்தரோ டமண்புறத் தீரே புத்தரோ டமண்புறத் தீருமைப் போற்றுதல் பத்தர்கள் தம்முடைப் பரிசே.
Open this verse
தேனமர் பொழிலணி சிறுகுடி மேவிய மானமர் கரமுடை யீரே மானமர் கரமுடை யீருமை வாழ்த்திய ஞானசம் பந்தன தமிழே.
Open this verse