பண் · சாதாரி
பெண்ணிய லுருவினர் பெருகிய புனல்விர வியபிறைக்கண்ணியர் கடுநடை விடையினர் கழல்தொழும் அடியவர்நண்ணிய பிணிகெட அருள்புரி பவர்நணு குயர்பதிபுண்ணிய மறையவர் நிறைபுகழ் ஒலிமலி புறவமே.
Open this verse
பண் · சாதாரி
பெண்ணிய லுருவினர் பெருகிய புனல்விர வியபிறைக்கண்ணியர் கடுநடை விடையினர் கழல்தொழும் அடியவர்நண்ணிய பிணிகெட அருள்புரி பவர்நணு குயர்பதிபுண்ணிய மறையவர் நிறைபுகழ் ஒலிமலி புறவமே.
Open this verse
கொக்குடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர்அக்குடை வடமுமோர் அரவமு மலரரை மிசையினிற்திக்குடை மருவிய வுருவினர் திகழ்மலை மகளொடும்புக்குட னுறைவது புதுமலர் விரைகமழ் புறவமே.
Open this verse
கொங்கியல் சுரிகுழல் வரிவளை யிளமுலை உமையொருபங்கியல் திருவுரு வுடையவர் பரசுவொ டிரலைமெய்தங்கிய கரதல முடையவர் விடையவர் உறைபதிபொங்கிய பொருகடல் கொளவதன் மிசையுயர் புறவமே.
Open this verse
மாதவ முடைமறை யவனுயிர் கொளவரு மறலியைமேதகு திருவடி யிறையுற வுயிரது விலகினார்சாதக வுருவியல் கானிடை உமைவெரு வுறவருபோதக உரியதள் மருவினர் உறைபதி புறவமே.
Open this verse
காமனை யழல்கொள விழிசெய்து கருதலர் கடிமதில்தூமம துறவிறல் சுடர்கொளு வியஇறை தொகுபதிஓமமொ டுயர்மறை பிறவிய வகைதனொ டொளிகெழுபூமகன் அலரொடு புனல்கொடு வழிபடு புறவமே.
Open this verse
சொன்னய முடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர்பின்னைய நடுவுணர் பெருமையர் திருவடி பேணிடமுன்னைய முதல்வினை யறஅரு ளினருறை முதுபதிபுன்னையின் முகைநெதி பொதியவிழ் பொழிலணி புறவமே.
Open this verse
வரிதரு புலியத ளுடையினர் மழுவெறி படையினர்பிரிதரு நகுதலை வடமுடி மிசையணி பெருமையர்எரிதரு முருவினர் இமையவர் தொழுவதோ ரியல்பினர்புரிதரு குழலுமை யொடுமினி துறைபதி புறவமே.
Open this verse
வசிதரு முருவொடு மலர்தலை யுலகினை வலிசெயும்நிசிசர னுடலொடு நெடுமுடி யொருபது நெரிவுறஒசிதர வொருவிரல் நிறுவினர் ஒளிவளர் வெளிபொடிபொசிதரு திருவுரு வுடையவர் உறைபதி புறவமே.
Open this verse
தேனக மருவிய செறிதரு முளரிசெய் தவிசினில்ஊனக மருவிய புலனுகர் வுணர்வுடை யொருவனும்வானகம் வரையக மறிகடல் நிலனெனு மெழுவகைப்போனக மருவின னறிவரி யவர்பதி புறவமே.
Open this verse
கோசர நுகர்பவர் கொழுகிய துவரன துகிலினர்பாசுர வினைதரு பளகர்கள் பழிதரு மொழியினர்நீசரை விடுமினி நினைவுறு நிமலர்த முறைபதிபூசுரர் மறைபயில் நிறைபுக ழொலிமலி புறவமே.
Open this verse
போதியல் பொழிலணி புறவநன் னகருறை புனிதனைவேதிய ரதிபதி மிகுதலை தமிழ்கெழு விரகினன்ஓதிய வொருபது முரியதொ ரிசைகொள வுரைசெயும்நீதிய ரவரிரு நிலனிடை நிகழ்தரு பிறவியே.
Open this verse