பண் · கொல்லி
வினவினேன்அறி யாமையில்லுரை செய்ம்மினீரருள் வேண்டுவீர்கனைவிலார்புனற் காவிரிக்கரை மேயகண்டியூர் வீரட்டன்தனமுனேதனக் கின்மையோதம ராயினாரண்ட மாளத்தான்வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ் வையமாப்பலி தேர்ந்ததே.
Open this verse
பண் · கொல்லி
வினவினேன்அறி யாமையில்லுரை செய்ம்மினீரருள் வேண்டுவீர்கனைவிலார்புனற் காவிரிக்கரை மேயகண்டியூர் வீரட்டன்தனமுனேதனக் கின்மையோதம ராயினாரண்ட மாளத்தான்வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ் வையமாப்பலி தேர்ந்ததே.
Open this verse
உள்ளவாறெனக் குரைசெய்ம்மின்னுயர் வாயமாதவம் பேணுவீர்கள்ளவிழ்பொழில் சூழுங்கண்டியூர் வீரட்டத்துறை காதலான்பிள்ளைவான்பிறை செஞ்சடைம்மிசை வைத்ததும்பெரு நீரொலிவெள்ளந்தாங்கிய தென்கொலோமிகு மங்கையாளுட னாகவே.
Open this verse
அடியராயினீர் சொல்லுமின்னறி கின்றிலேன்அரன் செய்கையைப்படியெலாந்தொழு தேத்துகண்டியூர் வீரட்டத்துறை பான்மையான்முடிவுமாய்முத லாயிவ்வைய முழுதுமாயழ காயதோர்பொடியதார்திரு மார்பினிற்புரி நூலும்பூண்டெழு பொற்பதே.
Open this verse
பழையதொண்டர்கள் பகருமின்பல வாயவேதியன் பான்மையைக்கழையுலாம்புனல் மல்குகாவிரி மன்னுகண்டியூர் வீரட்டன்குழையொர்காதினிற் பெய்துகந்தொரு குன்றின்மங்கை வெருவுறப்புழைநெடுங்கைநன் மாவுரித்தது போர்த்துகந்த பொலிவதே.
Open this verse
விரவிலாதுமைக் கேட்கின்றேனடி விரும்பியாட்செய்வீர் விளம்புமின்கரவெலாந்திரை மண்டுகாவிரிக் கண்டியூருறை வீரட்டன்முரவமொந்தை முழாவொலிக்க முழங்குபேயொடுங் கூடிப்போய்ப்பரவுவானவர்க் காகவார்கடல் நஞ்சமுண்ட பரிசதே
Open this verse
இயலுமாறெனக் கியம்புமின்னிறை வன்னுமாய்நிறை செய்கையைக்கயல்நெடுங்கண்ணி னார்கள்தாம்பொலி கண்டியூருறை வீரட்டன்புயல்பொழிந்திழி வானுளோர்களுக் காகவன்றயன் பொய்ச்சிரம்அயனகவ்வ தரிந்துமற்றதில் ஊனுகந்த அருத்தியே.
Open this verse
திருந்துதொண்டர்கள் செப்புமின்மிகச் செல்வன்றன்னது திறமெலாங்கருந்தடங்கண்ணி னார்கள்தாந்தொழு கண்டியூருறை வீரட்டன்இருந்துநால்வரோ டால்நிழல்லறம் உரைத்ததும்மிகு வெம்மையார்வருந்தவன்சிலை யால்அம்மாமதில் மூன்றுமாட்டிய வண்ணமே
Open this verse
நாவிரித்தரன் தொல்புகழ்பல பேணுவீரிறை நல்குமின்காவிரித்தடம் புனல்செய்கண்டியூர் வீரட்டத்துறை கண்ணுதல்கோவிரிப்பயன் ஆன்அஞ்சாடிய கொள்கையுங்கொடி வரைபெறமாவரைத்தலத் தாலரக்கனை வலியைவாட்டிய மாண்பதே.
Open this verse
பெருமையேசர ணாகவாழ்வுறு மாந்தர்காளிறை பேசுமின்கருமையார்பொழில் சூழுந்தண்வயல் கண்டியூருறை வீரட்டன்ஒருமையாலுயர் மாலும்மற்றை மலரவன்னுணர்ந் தேத்தவேஅருமையாலவ ருக்குயர்ந்தெரி யாகிநின்றஅத் தன்மையே.
Open this verse
நமரெழுபிறப் பறுக்குமாந்தர்கள் நவிலுமின்உமைக் கேட்கின்றேன்கமரழிவயல் சூழுந்தண்புனற் கண்டியூருறை வீரட்டன்தமரழிந்தெழு சாக்கியச்சமண் ஆதரோது மதுகொளாதமரரானவர் ஏத்தஅந்தகன் றன்னைச்சூலத்தி லாய்ந்ததே.
Open this verse
கருத்தனைப்பொழில் சூழுங்கண்டியூர் வீரட்டத்துறை கள்வனைஅருத்தனைத்திறம் அடியர்பால்மிகக் கேட்டுகந்த வினாவுரைதிருத்தமாந்திகழ் காழிஞானசம் பந்தன்செப்பிய செந்தமிழ்ஒருத்தராகிலும் பலர்களாகிலும் உரைசெய்வா ருயர்ந்தார்களே.
Open this verse