Pathigam 114 / 125 · Third Thirumurai · Thirugnanasambandar

Thiruvegambam Thiruiyamagam

திருவேகம்பம் - திருஇயமகம் · 11 verses · 4068–4078

Share

பாடல்கள் The verses

1 Verse 4068

பண் · பழம்பஞ்சுரம்

பாயுமால்விடை மேலொரு பாகனே பாவைதன்னுரு மேலொரு பாகனேதூயவானவர் வேதத் துவனியே சோதிமாலெரி வேதத் துவனியேஆயுநன்பொருள் நுண்பொரு ளாதியே ஆலநீழல் அரும்பொரு ளாதியேகாயவின்மதன் பட்டது கம்பமே கண்ணுதற்பர மற்கிடங் கம்பமே.
Open this verse
2 Verse 4069
சடையணிந்ததும் வெண்டலை மாலையே தம்முடம்பிலும் வெண்டலை மாலையே படையிலங்கையிற் சூலம தென்பதே பரந்திலங்கையிற் சூலம தென்பதே புடைபரப்பன பூத கணங்களே போற்றிசைப்பன பூத கணங்களே கடைகடோ றும் இரப்பது மிச்சையே கம்பமேவி யிருப்பது மிச்சையே.
Open this verse
3 Verse 4070
வெள்ளெருக்கொடு தும்பை மிலைச்சியே வேறுமுன்செலத் தும்பை மிலைச்சியேஅள்ளிநீறது பூசுவ தாகமே யானமாசுண மூசுவ தாகமேபுள்ளியாடை யுடுப்பது கத்துமே போனவூழி யுடுப்பது கத்துமேகள்ளுலாமலர்க் கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.
Open this verse
4 Verse 4071
முற்றலாமை யணிந்த முதல்வரே மூரியாமை யணிந்த முதல்வரேபற்றிவாளர வாட்டும் பரிசரே பாலுநெய்யுகந் தாட்டும் பரிசரேவற்றலோடு கலம்பலி தேர்வதே வானினோடு கலம்பலி தேர்வதேகற்றிலாமனங் கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.
Open this verse
5 Verse 4072
வேடனாகி விசையற் கருளியே வேலைநஞ்ச மிசையற் கருளியேஆடுபாம்பரை யார்த்த துடையதே யஞ்சுபூதமு மார்த்த துடையதேகோடுவான்மதிக் கண்ணி யழகிதே குற்றமின்மதிக் கண்ணி யழகிதேகாடுவாழ்பதி யாவது மும்மதே கம்பமாபதி யாவது மும்மதே.
Open this verse
6 Verse 4073
இரும்புகைக்கொடி தங்கழல் கையதே இமயமாமகள் தங்கழல் கையதேஅரும்புமொய்த்த மலர்ப்பொறை தாங்கியே ஆழியான்றன் மலர்ப்பொறை தாங்கியேபெரும்பகல்நட மாடுதல் செய்துமே பேதைமார்மனம் வாடுதல் செய்துமேகரும்புமொய்த்தெழு கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.
Open this verse
7 Verse 4074
முதிரமங்கை தவஞ்செய்த காலமே முன்புமங்கை தவஞ்செய்த காலமேவெதிர்களோடகில் சந்த முருட்டியே வேழமோடகில் சந்த முருட்டியேஅதிரவாறு வரத்தழு வத்தொடே ஆன்நெய்ஆடு வரத்தழு வத்தொடேகதிர்கொள்பூண்முலைக் கம்ப மிருப்பதே காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.
Open this verse
8 Verse 4075
பண்டரக்க னெடுத்த பலத்தையே பாய்ந்தரக்க னெடுத்த பலத்தையேகொண்டரக்கிய துங்கால் விரலையே கோளரக்கிய துங்கால் விரலையேஉண்டுழன்றது முண்டத் தலையிலே யுடுபதிக்கிட முண்டத் தலையிலேகண்டநஞ்சம் அடக்கினை கம்பமே கடவுள்நீயிடங் கொண்டது கம்பமே.
Open this verse
9 Verse 4076
தூணியான சுடர்விடு சோதியே சுத்தமான சுடர்விடு சோதியேபேணியோடு பிரமப் பறவையே பித்தனான பிரமப் பறவையேசேணினோடு கீழூழி திரிந்துமே சித்தமோடு கீழூழி திரிந்துமேகாணநின்றனர் உற்றது கம்பமே கடவுள்நீயிடம் உற்றது கம்பமே.
Open this verse
10 Verse 4077
ஓருடம்பினை யீருரு வாகவே யுன்பொருட்டிற மீருரு வாகவேஆருமெய்தற் கரிது பெரிதுமே ஆற்றலெய்தற் கரிது பெரிதுமேதேரரும்மறி யாது திகைப்பரே சித்தமும்மறி யாது திகைப்பரேகார்நிறத்தம ணர்க்கொரு கம்பமே கடவுள்நீயிடங் கொண்டது கம்பமே.
Open this verse
11 Verse 4078
கந்தமார்பொழில் சூழ்தரு கம்பமே காதல்செய்பவர் தீர்த்திடு கம்பமேபுந்திசெய்து விரும்பிப் புகலியே பூசுரன்றன் விரும்பிப் புகலியேஅந்தமில்பொரு ளாயின கொண்டுமே அண்ணலின்பொரு ளாயின கொண்டுமேபந்தனின்னியல் பாடிய பத்துமே பாடவல்லவ ராயின பத்துமே.
Open this verse