Pathigam 45 / 125 · Third Thirumurai · Thirugnanasambandar

Thiruvaaroor

திருவாரூர் · 11 verses · 3315–3325

Share

பாடல்கள் The verses

1 Verse 3315

பண் · கௌசிகம்

அந்த மாயுல காதியு மாயினான்வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன்சிந்தை யேபுகுந் தான்திரு வாரூரெம்எந்தை தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.
Open this verse
2 Verse 3316
. கருத்த னேகரு தார்புரம் மூன்றெய்த ஒருத்த னேஉமை யாளொரு கூறனே திருத்த னேதிரு ஆரூரெந் தீவண்ண அருத்த வென்னெனை யஞ்சலென் னாததே.
Open this verse
3 Verse 3317
.மறையன் மாமுனி வன்மரு வார்புரம்இறையின் மாத்திரை யில்லெரி யூட்டினான்சிறைவண் டார்பொழில் சூழ்திரு ஆரூரெம்இறைவன் தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.
Open this verse
4 Verse 3318
. பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரிந் தெல்லி வந்திடு காட்டெரி யாடுவான் செல்வம் மல்கிய தென்திரு ஆரூரான் அல்லல் தீர்த்தெனை யஞ்சலெ னுங்கொலோ.
Open this verse
5 Verse 3319
.குருந்த மேறிக் கொடிவிடு மாதவிவிரிந்த லர்ந்த விரைகமழ் தேன்கொன்றைதிருந்து மாடங்கள் சூழ்திரு ஆரூரான்வருந்தும் போதெனை வாடலெ னுங்கொலோ.
Open this verse
6 Verse 3320
. வார்கொள் மென்முலை யாளொரு பாகமா ஊர்க ளாரிடு பிச்சைகொள் உத்தமன் சீர்கொள் மாடங்கள் சூழ்திரு ஆரூரான் ஆர்க ணாவெனை அஞ்சலெ னாததே.
Open this verse
7 Verse 3321
. வளைக்கை மங்கைநல் லாளையோர் பாகமாத் துளைக்கை யானை துயர்படப் போர்த்தவன் திளைக்குந் தண்புனல் சூழ்திரு ஆரூரான் இளைக்கும் போதெனை யேன்றுகொ ளுங்கொலோ.
Open this verse
8 Verse 3322
.இலங்கை மன்னன் இருபது தோளிறக்கலங்கக் கால்விர லாற்கடைக் கண்டவன்வலங்கொள் மாமதில் சூழ்திரு ஆரூரான்அலங்கல் தந்தெனை யஞ்சலெ னுங்கொலோ.
Open this verse
9 Verse 3323
.நெடிய மாலும் பிரமனும் நேர்கிலாப்படிய வன்பனி மாமதிச் சென்னியான்செடிகள் நீக்கிய தென்திரு ஆரூரெம்அடிகள் தானெனை யஞ்சலெ னுங்கொலோ.
Open this verse
10 Verse 3324
. மாசு மெய்யினர் வண்துவ ராடைகொள் காசை போர்க்குங் கலதிகள் சொற்கொளேல் தேசம் மல்கிய தென்திரு ஆரூரெம் ஈசன் தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.
Open this verse
11 Verse 3325
.வன்னி கொன்றை மதியொடு கூவிளஞ்சென்னி வைத்த பிரான்திரு ஆரூரைமன்னு காழியுள் ஞானசம் பந்தன்வாய்ப்பன்னு பாடல்வல் லார்க்கில்லை பாவமே.
Open this verse