Pathigam 58 / 125 · Third Thirumurai · Thirugnanasambandar

Thirucchaatthamanggai

திருச்சாத்தமங்கை · 11 verses · 3456–3466

Share

பாடல்கள் The verses

1 Verse 3456

பண் · பஞ்சமம்

திருமலர்க் கொன்றைமாலை திளைக்கும்மதி சென்னிவைத்தீர்இருமலர்க் கண்ணிதன்னோ டுடனாவது மேற்பதொன்றேபெருமலர்ச் சோலைமேகம் உரிஞ்சும்பெருஞ் சாத்தமங்கைஅருமல ராதிமூர்த்தி அயவந்திய மர்ந்தவனே.
Open this verse
2 Verse 3457
பொடிதனைப் பூசுமார்பிற் புரிநூலொரு பாற்பொருந்தக்கொடியன சாயலாளோ டுடனாவதுங் கூடுவதேகடிமணம் மல்கிநாளுங் கமழும்பொழிற் சாத்தமங்கைஅடிகள்நக் கன்பரவ அயவந்திய மர்ந்தவனே.
Open this verse
3 Verse 3458
நூனலந் தங்குமார்பில் நுகர்நீறணிந் தேறதேறிமானன நோக்கிதன்னோ டுடனாவது மாண்பதுவேதானலங் கொண்டுமேகந் தவழும்பொழிற் சாத்தமங்கைஆனலந் தோய்ந்தஎம்மான் அயவந்திய மர்ந்தவனே.
Open this verse
4 Verse 3459
மற்றவின் மால்வரையா மதிலெய்துவெண் ணீறுபூசிபுற்றர வல்குலாளோ டுடனாவதும் பொற்பதுவேகற்றவர் சாத்தமங்கை நகர்கைதொழச் செய்தபாவம்அற்றவர் நாளுமேத்த அயவந்திய மர்ந்தவனே.
Open this verse
5 Verse 3460
வெந்தவெண் ணீறுபூசி விடையேறிய வேதகீதன்பந்தண வும்விரலாள் உடனாவதும் பாங்கதுவேசந்தமா றங்கம்வேதம் தரித்தார்தொழுஞ் சாத்தமங்கைஅந்தமாய் ஆதியாகி அயவந்திய மர்ந்தவனே.
Open this verse
6 Verse 3461
வேதமாய் வேள்வியாகி விளங்கும்பொருள் வீடதாகிச்சோதியாய் மங்கைபாகந் நிலைதான்சொல்ல லாவதொன்றேசாதியால் மிக்கசீரால் தகுவார்தொழுஞ் சாத்தமங்கைஆதியாய் நின்றபெம்மான் அயவந்திய மர்ந்தவனே.
Open this verse
7 Verse 3462
இமயமெல் லாம்இரிய மதிலெய்துவெண் ணீறுபூசிஉமையையோர் பாகம்வைத்த நிலைதானுன்ன லாவதொன்றேசமயமா றங்கம்வேதந் தரித்தார்தொழுஞ் சாத்தமங்கைஅமையவே றோங்குசீரான் அயவந்திய மர்ந்தவனே.
Open this verse
8 Verse 3463
பண்ணுலாம் பாடல்வீணை பயில்வானோர் பரமயோகிவிண்ணுலா மால்வரையான் மகள்பாகமும் வேண்டினையேதண்ணிலா வெண்மதியந் தவழும்பொழிற் சாத்தமங்கைஅண்ணலாய் நின்றஎம்மான் அயவந்திய மர்ந்தவனே.
Open this verse
9 Verse 3464
பேரெழில் தோளரக்கன் வலிசெற்றதும் பெண்ணோர்பாகம்ஈரெழிற் கோலமாகி யுடனாவதும் ஏற்பதொன்றேகாரெழில் வண்ணனோடு கனகம்மனை யானுங்காணாஆரழல் வண்ணமங்கை அயவந்திய மர்ந்தவனே.
Open this verse
10 Verse 3465
கங்கையோர் வார்சடைமேல் அடையப்புடை யேகமழும்மங்கையோ டொன்றிநின்றம் மதிதான்சொல்ல லாவதொன்றேசங்கையில் லாமறையோர் அவர்தாந்தொழு சாத்தமங்கைஅங்கையிற் சென்னிவைத்தாய் அயவந்திய மர்ந்தவனே.
Open this verse
11 Verse 3466
மறையினார் மல்குகாழித் தமிழ்ஞானசம் பந்தன்மன்னும்நிறையினார் நீலநக்கன் நெடுமாநக ரென்றுதொண்டர்அறையுமூர் சாத்தமங்கை அயவந்திமே லாய்ந்தபத்தும்முறைமையா லேத்தவல்லார் இமையோரிலும் முந்துவரே.
Open this verse