பண் · சாதாரி
மட்டொளி விரிதரு மலர்நிறை சுரிகுழல் மடவரல்பட்டொளி மணியல்குல் உமையமை யுருவொரு பாகமாக்கட்டொளிர் புனலொடு கடியர வுடனுறை முடிமிசைவிட்டொளி யுதிர்பிதிர் மதியவர் பதிவிழி மிழலையே
Open this verse
பண் · சாதாரி
மட்டொளி விரிதரு மலர்நிறை சுரிகுழல் மடவரல்பட்டொளி மணியல்குல் உமையமை யுருவொரு பாகமாக்கட்டொளிர் புனலொடு கடியர வுடனுறை முடிமிசைவிட்டொளி யுதிர்பிதிர் மதியவர் பதிவிழி மிழலையே
Open this verse
எண்ணிற வரிவளை நெறிகுழல் எழில்மொழி யிளமுலைப்பெண்ணுறும் உடலினர் பெருகிய கடல்விட மிடறினர்கண்ணுறு நுதலினர் கடியதோர் விடையினர் கனலினர்விண்ணுறு பிறையணி சடையினர் பதிவிழி மிழலையே.
Open this verse
மைத்தகு மதர்விழி மலைமகள் உருவொரு பாகமாவைத்தவர் மதகரி யுரிவைசெய் தவர்தமை மருவினார்தெத்தென இசைமுரல் சரிதையர் திகழ்தரும் அரவினர்வித்தக நகுதலை யுடையவர் இடம்விழி மிழலையே.
Open this verse
செவ்வழ லெனநனி பெருகிய வுருவினர் செறிதருகவ்வழல் அரவினர் கதிர்முதிர் மழுவினர் தொழுவிலாமுவ்வழல் நிசிசரர் விறலவை யழிதர முதுமதில்வெவ்வழல் கொளநனி முனிபவர் பதிவிழி மிழலையே.
Open this verse
பைங்கண தொருபெரு மழலைவெ ளேறினர் பலியெனாஎங்கணு முழிதர்வர் இமையவர் தொழுதெழும் இயல்பினர்அங்கணர் அமரர்கள் அடியிணை தொழுதெழ ஆரமாவெங்கண அரவினர் உறைதரு பதிவிழி மிழலையே.
Open this verse
பொன்னன புரிதரு சடையினர் பொடியணி வடிவினர்உன்னினர் வினையவை களைதலை மருவிய ஒருவனார்தென்னென விசைமுரல் சரிதையர் திகழ்தரு மார்பினில்மின்னென மிளிர்வதோர் அரவினர் பதிவிழி மிழலையே.
Open this verse
அக்கினோ டரவரை யணிதிகழ் ஒளியதோ ராமைபூண்டிக்குக மலிதலை கலனென இடுபலி யேகுவர்கொக்கரை குழல்முழ விழவொடு மிசைவதோர் சரிதையர்மிக்கவர் உறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே.
Open this verse
பாதமோர் விரலுற மலையடர் பலதலை நெரிதரப்பூதமோ டடியவர் புனைகழல் தொழுதெழு புகழினர்ஓதமோ டொலிதிரை படுகடல் விடமுடை மிடறினர்வேதமோ டுறுதொழில் மதியவர் பதிவிழி மிழலையே.
Open this verse
நீரணி மலர்மிசை உறைபவன் நிறைகடல் உறுதுயில்நாரண னெனஇவர் இருவரும் நறுமல ரடிமுடிஓருணர் வினர்செல லுறலரு முருவினோ டொளிதிகழ்வீரணர் உறைவது வெறிகமழ் பொழில்விழி மிழலையே.
Open this verse
இச்சைய ரினிதென இடுபலி படுதலை மகிழ்வதோர்பிச்சையர் பெருமையை யிறைபொழு தறிவென வுணர்விலர்மொச்சைய அமணரும் முடைபடு துகிலரும் அழிவதோர்விச்சைய ருறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே.
Open this verse
உன்னிய அருமறை யொலியினை முறைமிகு பாடல்செய்இன்னிசை யவருறை யெழில்திகழ் பொழில்விழி மிழலையைமன்னிய புகலியுள் ஞானசம் பந்தன வண்டமிழ்சொன்னவர் துயரிலர் வியனுல குறுகதி பெறுவரே.
Open this verse