பண் · சாதாரி
மத்தக மணிபெற மலர்வதோர் மதிபுரை நுதல்கரம்ஒத்தக நகமணி மிளிர்வதோர் அரவினர் ஒளிகிளர்அத்தக வடிதொழ அருள்பெறு கண்ணொடும் உமையவள்வித்தகர் உறைவது விரிபொழில் வளநகர் விளமரே.
Open this verse
பண் · சாதாரி
மத்தக மணிபெற மலர்வதோர் மதிபுரை நுதல்கரம்ஒத்தக நகமணி மிளிர்வதோர் அரவினர் ஒளிகிளர்அத்தக வடிதொழ அருள்பெறு கண்ணொடும் உமையவள்வித்தகர் உறைவது விரிபொழில் வளநகர் விளமரே.
Open this verse
பட்டில கியமுலை அரிவையர் உலகினில் இடுபலிஒட்டில கிணைமர வடியினர் உமையுறு வடிவினர்சிட்டில கழகிய பொடியினர் விடைமிசை சேர்வதோர்விட்டில கழகொளி பெயரவர் உறைவது விளமரே.
Open this verse
அங்கதிர் ஒளியினர் அரையிடை மிளிர்வதோர் அரவொடுசெங்கதி ரெனநிற மனையதோர் செழுமணி மார்பினர்சங்கதிர் பறைகுழல் முழவினொ டிசைதரு சரிதையர்வெங்கதி ருறுமழு வுடையவ ரிடமெனில் விளமரே.
Open this verse
மாடம தெனவளர் மதிலவை யெரிசெய்வர் விரவுசீர்ப்பீடென வருமறை யுரைசெய்வர் பெரியபல் சரிதைகள்பாடலர் ஆடிய சுடலையில் இடமுற நடம்நவில்வேடம துடையவர் வியன்நக ரதுசொலில் விளமரே.
Open this verse
பண்டலை மழலைசெய் யாழென மொழியுமை பாகமாக்கொண்டலை குரைகழ லடிதொழு மவர்வினை குறுகிலர்விண்டலை யமரர்கள் துதிசெய அருள்புரி விறலினர்வெண்டலை பலிகொளும் விமலர்தம் வளநகர் விளமரே.
Open this verse
மனைகள்தோ றிடுபலி யதுகொள்வர் மதிபொதி சடையினர்கனைகடல் அடுவிடம் அமுதுசெய் கறையணி மிடறினர்முனைகெட வருமதில் எரிசெய்த அவர்கழல் பரவுவார்வினைகெட அருள்புரி தொழிலினர் செழுநகர் விளமரே.
Open this verse
நெறிகமழ் தருமுரை யுணர்வினர் புணர்வுறு மடவரல்செறிகமழ் தருமுரு வுடையவர் படைபல பயில்பவர்பொறிகமழ் தருபட அரவினர் விரவிய சடைமிசைவெறிகமழ் தருமலர் அடைபவர் இடமெனில் விளமரே.
Open this verse
தெண்கடல் புடையணி நெடுமதில் இலங்கையர் தலைவனைப்பண்பட வரைதனில் அடர்செய்த பைங்கழல் வடிவினர்திண்கட லடைபுனல் திகழ்சடை புகுவதோர் சேர்வினார்விண்கடல் விடமலி யடிகள்தம் வளநகர் விளமரே.
Open this verse
தொண்டசை யுறவரு துயருறு காலனை மாள்வுறஅண்டல்செய் திருவரை வெருவுற ஆரழ லாயினார்கொண்டல்செய் தருதிரு மிடறின ரிடமெனில் அளியினம்விண்டிசை யுறுமலர் நறுமது விரிபொழில் விளமரே.
Open this verse
ஒள்ளியர் தொழுதெழ வுலகினில் உரைசெயு மொழிபலகொள்ளிய களவினர் குண்டிகை யவர்தவம் அறிகிலார்பள்ளியை மெய்யெனக் கருதன்மின் பரிவொடு பேணுவீர்வெள்ளிய பிறையணி சடையினர் வளநகர் விளமரே.
Open this verse
வெந்தவெண் பொடியணி யடிகளை விளமருள் விகிர்தரைச்சிந்தையுள் இடைபெற வுரைசெய்த தமிழிவை செழுவியஅந்தணர் புகலியுள் அழகமர் அருமறை ஞானசம்பந்தன மொழியிவை உரைசெயு மவர்வினை பறையுமே.
Open this verse